08) அற்பமானது என்று கொடுக்காமல் இருந்துவிடாதீர்
08) அற்பமானது என்று கொடுக்காமல் இருந்துவிடாதீர்
நாம் அண்டைவீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்தாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனையில்லை சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்கவேண்டும் கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாக கருதக்கூடாது.
عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ
«يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ، لَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا، وَلَوْ فِرْسِنَ شَاةٍ»
முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டைவீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள்:(புகாரி: 2566),(முஸ்லிம்: 1868)