06) உதவுங்கள்
06) உதவுங்கள்
அண்டைவீட்டார் சிரமப்படும் போது பொருளாதார உதவிகள் செய்வது,அவர்களுக்கு நோயுற்றால் மருத்தவரிடம் கொண்டு செல்வது நோயுற்ற நேரத்தில் உணவுகளை சமைத்துக் கொடுப்பது என்று எல்லாவிதமான உதவிகளையும் செய்யவேண்டும். நம் உறவினர்களுக்கு செய்வதைப் போன்று அவர்களுக்கும் நாம் செய்யவேண்டும்.இதை பின்வரும் நபிமொழி யிலிருந்து விளங்கலாம்.
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَا زَالَ يُوصِينِي جِبْرِيلُ بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ»
அண்டைவீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால் எங்கே அண்டைவீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்கள்:(புகாரி: 6014),(முஸ்லிம்: 5118)