நபிவு, அஃப்லஹ், ரபாஹ், பரக்கா, யஸார் என்ற பெயர்கள் வைக்கலாமா?
நபிவு, அஃப்லஹ், ரபாஹ், பரக்கா, யஸார் என்ற பெயர்கள் வைக்கலாமா?
இதுபோன்ற சில பெயர்களை வைக்கக்கூடாது என்று சில நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான விவரங்களைக் காண்போம்.
صحيح مسلم (3/ 1685)
10 – (2136) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الرُّكَيْنِ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ. وقَالَ يَحْيَى: أَخْبَرَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ الرُّكَيْنَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: ” نَهَانَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُسَمِّيَ رَقِيقَنَا بِأَرْبَعَةِ أَسْمَاءٍ: أَفْلَحَ، وَرَبَاحٍ، وَيَسَارٍ، وَنَافِعٍ “
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்
நூல் : முஸ்லிம் (4328)
صحيح مسلم (3/ 1685)
11 – (2136) وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الرُّكَيْنِ بْنِ الرَّبِيعِ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُسَمِّ غُلَامَكَ رَبَاحًا، وَلَا يَسَارًا، وَلَا أَفْلَحَ، وَلَا نَافِعًا»
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் அடிமைக்கு ரபாஹ் (இலாபம்) என்றோ, யசார் (சுலபம்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ, நாஃபிஉ (பயனளிப்பவன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம்” என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (4329)
صحيح مسلم (3/ 1685)
12 – (2137) حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ رَبِيعِ بْنِ عُمَيْلَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَحَبُّ الْكَلَامِ إِلَى اللهِ أَرْبَعٌ: سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ. لَا يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ ”
“وَلَا تُسَمِّيَنَّ غُلَامَكَ يَسَارًا، وَلَا رَبَاحًا، وَلَا نَجِيحًا، وَلَا أَفْلَحَ، فَإِنَّكَ تَقُولُ: أَثَمَّ هُوَ؟ فَلَا يَكُونُ فَيَقُولُ: لَا إِنَّمَا هُنَّ أَرْبَعٌ فَلَا تَزِيدُنَّ عَلَيَّ
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்துல்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).
இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறிவிட்டு, “உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) “அவன் அங்கு இருக்கிறானா’ என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் “இல்லை’ என்று பதில் வரும். (அது திருப்தியளிப்பதற்குப் பகரமாக நற்குறியற்ற பதிலாக உங்கள் மனதுக்குப் படலாம்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றைவிடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம்.
நூல் : முஸ்லிம் (4330)
இதே கருத்துள்ள செய்திகள் வேறு நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. மேற்கூறிய செய்திகளில் நபிகளார் குறிப்பிட்ட பெயர்களை அடிமைகளுக்கு சூட்டக்கூடாது என்று கூறியதாகவே இடம்பெற்றுள்ளது. சுதந்திரமானவர்களுக்கு இந்தப் பெயர்கள் சூட்ட நபிகளார் தடைசெய்ததாக இதில் இடம்பெறவில்லை.
மேலும் இந்த செய்திகளுக்கு மாற்றமான நபிமொழிகளும் இடம்பெற்றுள்ளது.
صحيح مسلم (3/ 1686)
13 – (2138) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: «أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْهَى عَنْ أَنْ يُسَمَّى بِيَعْلَى، وَبِبَرَكَةَ، وَبِأَفْلَحَ، وَبِيَسَارٍ، وَبِنَافِعٍ وَبِنَحْوِ ذَلِكَ، ثُمَّ رَأَيْتُهُ سَكَتَ بَعْدُ عَنْهَا، فَلَمْ يَقُلْ شَيْئًا، ثُمَّ قُبِضَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَنْهَ عَنْ ذَلِكَ» ثُمَّ أَرَادَ عُمَرُ أَنْ يَنْهَى عَنْ ذَلِكَ ثُمَّ تَرَكَهُ “
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள்.
நூல் : முஸ்லிம் (4331)
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில பெயர்களைத் தடைசெய்ய எண்ணியவர்கள். அவர்கள் இறுதிவரையிலும் தடைசெய்யவில்லை என்றும் உமர் (ரலி) அவர்களும் இதே கருத்தில்தான் இருந்துள்ளார்கள் என்பதும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமுரா (ரலி) அவர்கள் நபிகளார் குறிப்பிட்ட பெயர்களை சூட்டக்கூடாது என்று தடைசெய்ததாகவும். நபிகளார் தடைசெய்யவில்லை என்று ஜாபிர் (ரலி) அவர்களும் கூறியுள்ளார்கள். இந்த இரண்டு செய்தியில் எது சரி என்பதைக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் இந்தப் பெயர்களை சூட்ட தடைசெய்யவில்லை என்ற கருத்தே சரியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் எந்தப் பெயரை தடைசெய்தார்கள் என்று கூறப்படுகிறதோ அதே பெயரில் நபிகளாரின் அடிமை இருந்துள்ளார்.
صحيح مسلم (2/ 1105)
30 – (1479) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ سِمَاكٍ أَبِي زُمَيْلٍ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ: لَمَّا اعْتَزَلَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ، قَالَ: دَخَلْتُ الْمَسْجِدَ، فَإِذَا النَّاسُ يَنْكُتُونَ بِالْحَصَى، وَيَقُولُونَ: طَلَّقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ، وَذَلِكَ قَبْلَ أَنْ يُؤْمَرْنَ بِالْحِجَابِ، فَقَالَ عُمَرُ، فَقُلْتُ: لَأَعْلَمَنَّ ذَلِكَ الْيَوْمَ، قَالَ: فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ، فَقُلْتُ: يَا بِنْتَ أَبِي بَكْرٍ، أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: مَا لِي وَمَا لَكَ [ص:1106] يَا ابْنَ الْخَطَّابِ، عَلَيْكَ بِعَيْبَتِكَ، قَالَ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ بِنْتِ عُمَرَ، فَقُلْتُ لَهَا: يَا حَفْصَةُ، أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ وَاللهِ، لَقَدْ عَلِمْتِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا يُحِبُّكِ، وَلَوْلَا أَنَا لَطَلَّقَكِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَكَتْ أَشَدَّ الْبُكَاءِ، فَقُلْتُ لَهَا: أَيْنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: هُوَ فِي خِزَانَتِهِ فِي الْمَشْرُبَةِ، فَدَخَلْتُ، فَإِذَا أَنَا بِرَبَاحٍ غُلَامِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَاعِدًا عَلَى أُسْكُفَّةِ الْمَشْرُبَةِ، مُدَلٍّ رِجْلَيْهِ عَلَى نَقِيرٍ مِنْ خَشَبٍ – وَهُوَ جِذْعٌ يَرْقَى عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَنْحَدِرُ – فَنَادَيْتُ: يَا رَبَاحُ، اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَظَرَ رَبَاحٌ إِلَى الْغُرْفَةِ، ثُمَّ نَظَرَ إِلَيَّ، فَلَمْ يَقُلْ شَيْئًا، ثُمَّ قُلْتُ: يَا رَبَاحُ، اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَظَرَ رَبَاحٌ إِلَى الْغُرْفَةِ، ثُمَّ نَظَرَ إِلَيَّ، فَلَمْ يَقُلْ شَيْئًا، ثُمَّ رَفَعْتُ صَوْتِي، فَقُلْتُ: يَا رَبَاحُ، اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنِّي أَظُنُّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ظَنَّ أَنِّي جِئْتُ مِنْ أَجْلِ حَفْصَةَ،…
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு மாத காலம் தம் துணைவியரிடம் நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்து) தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தபோது, நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றேன்…
நான் (அவரைக்) கூப்பிட்டு, “ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேள்” என்றேன். அப்போது ரபாஹ் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த) அந்த அறையை உற்றுப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்லவில்லை. பின்னர் (மீண்டும்) நான், “ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள்” என்றேன்.
ரபாஹ் அந்த அறையைப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்லவில்லை. பின்னர் நான் குரலை உயர்த்தி, “ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள். நான் (என் மகள்) ஹஃப்ஸா வுக்(குப் பரிந்து பேசுவதற்)காக வந்துள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எண்ணிவிட்டார்கள் என நான் நினைக்கிறேன்…
நூல் : முஸ்லிம் (2947)
நபிகளாரின் அடிமைக்கு ரபாஹ் என்ற பெயர் இருந்துள்ளது. அவர்கள் முன்னிலையே ரபாஹ் என்று அழைக்கப்பட்டுள்ளார்கள் என்றாலும் அவர்களின் பெயரை நபிகளார் மாற்றினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இதைப் போன்று நபித்தோழர்களின் அடிமைகளுக்கும் தடைசெய்யப்பட்டதாக கூறப்படும் பெயர் இருந்துள்ளது. உதாரணமாக அபூஅய்யூப் அவர்களின் அடிமைக்கு அஃப்லஹ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
المعجم الكبير للطبراني (4/ 153)
3983 – حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا الْمُسَيَّبُ بْنُ وَاضِحٍ، ثنا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ أَبَا شُعَيْبٍ، يُحَدِّثُ، عَنِ ابْنِ سِيرِينَ، ثنا أَفْلَحُ، غُلَامُ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ»
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது காலுறைகளின் மீதும் ஹிமார் (தலையில் போடும் துண்டின்) மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்தேன் என்று அபூஅய்யூப் (ரலி) கூறியதாக அவர்களின் அடிமை அஃப்லஹ் அறிவிக்கிறார்.
இதைப்போன்று இப்னு உமர் (ரலி) அவர்களின் அடிமை பெயர் நாபிவு. இவர் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக ஏராளமான செய்திகளை அறிவித்துள்ளார். புகாரி, முஸ்லிம் உட்பட ஏராளமான நூல்களில் இவரின் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
صحيح البخاري (1/ 94)
432 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا»
உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றை நாஃபிவு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபிகளார் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களுக்கு தடை செய்யப்பட்டதாக சொன்ன பெயர்கள் இருந்துள்ளன. உதாரணமாக யஃலா என்ற பெயரில் நபித்தோழர் இருந்துள்ளார். அவர்கள் அறிவித்த செய்திகள் திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்,நஸாயீ போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது. அவர்களின் பெயர் மாற்றப்பட்டது என்ற விவரம் இல்லை.
இதைப்போன்று யஸார் என்ற பெயரில் பல நபித்தோழர்கள் இருந்துள்ளார்கள் என்பதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது அல்இஸாபா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
மேலும் பரக்கா என்ற பெயரில் பல நபித்தோழியர்கள் இருந்துள்ளார்கள் என்பதையும் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது அல்இஸாபா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இவற்றை நாம் கவனிக்கும்போது நபிகளார் இந்தப் பெயர்களை தடைசெய்திருக்க வாய்ப்பில்லை என்பதையும் ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பே சரியானதாக இருக்கும் என்பதையும் நமக்கு விளக்குகிறது.
மேலும் இந்தப் பெயர் ஏன் தடுக்கப்பட்டது என்பதை விளக்கும் செய்திகளில் ரபாஹ் இருக்கிறானா என்று கேட்டால் நாம் இல்லை என்று கூறும்போது ரபாஹ் (இலாபம்) இல்லை என்ற தவறான கருத்து வருகிறது எனவே இவ்வாறு பெயரிடக்கூடாது என்று சொன்னதாக இடம்பெறுகிறது.
நபிகளார் காட்டிய கொள்கைளுக்கு இது முரணாகவும் அமைந்திருக்கிறது. கெட்ட சகுணம் இல்லை என்று நபிகளார் தெளிவாகக் கூறியுள்ளார்கள். ஒரு வார்த்தையைக் கூறியதாலோ அல்லது வேறு எதாவது நடந்ததாலோ கெட்ட சகுணம் என்பது வராது என்ற கருத்தை நபிகளார் ஆணித்தரமாக தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே இந்த அடிப்படையை கவனத்தில் கொண்டாலும் இந்தப் பெயர்களை நபிகளார் தடுத்திருக்க வாய்ப்பில்லை.