46) இஷாவுக்கு பின் பேசுதல்

நூல்கள்: நாவை பேணுவோம்

இஷாவுக்கு பின் பேசுதல்

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இஷா தொழுகை முடிந்தவுடன் தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை வீணடிப்பதை மிகவும் வெறுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்பின் (உறங்காமல்) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் அபூபர்ஸா நள்லா பின் உபைத் (ரலி)

(புகாரி: 568)

இன்று நபிகளாரின் வெறுப்பை சம்பாதிக்கும் இந்த காரியத்தைதான் ஒவ்வொரு ஊர்களிலும் நமது முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இஷாத் தொழுகை முடிந்தவுடன் குரூப் குரூப் ஆக சேர்ந்து தேவையற்ற பேச்சுக்களை ஆரம்பிப்பார்கள். இரவு 1 மணி ஆனாலும் அவர்களின் அரட் அரங்கம் முடிந்திருக்காது. பலரும் சுப்ஹ் தொழுகையை கோட்டை இருக்கின்றது விடுவதற்கு இந்த அரட்டை கச்சேரிதான் காரணமாக மார்க்க விஷயங்களை இஷாவுக்குப்பின் தாராளமாக பேசிக் கொள்ளலாம்.

அதை நபிகளார் ஒரு போதும் தடை செய்ததில்லை மாறாக இஷாவுக்கு பின் எந்த விதத்திலும் பலனில்லாத பேச்சுக்களை பேசுவதையே நபிகளார் வெறுத்துள்ளார்கள். இதனால் நமக்கு இறைவன் வழங்கிய ஒய்வு நேரத்தை வீணடித்த குற்றவாளிகளாய் ஆவோம். எனவே வீணான பேச்சுகள் போசுவதை விட்டும் நம்மை நம்முடைய நாவை பேணிக் கொள்வோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.

  1. ஆரோக்கியம்.
  2. ஓய்வு

அறிவிப்பவர்: ஆஹூரைரா (ரலி)

(புகாரி: 642)

குழைந்து பேசுதல் நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

(அல்குர்ஆன்: 33:32)

இது நபிகளாரின் மனைவிமார்களை முஃமின்களின் அன்னை என்று போற்றத்தக்கவர்களை நோக்கி இறைவன் கூறும் கண்டிப்பான அறிவுரையாகும். அந்நிய ஆண்களிடம் குழைந்து வழிந்து பேசக்கூடாது என்பதே அந்த கண்டிப்பான. அறிவுரை நபிகள் நாயகத்தின் மனைவிமார்களுக்கே இந்த அறிவுரை என்றால் மற்ற முஸ்லிமான பெண்கள் இது விசயத்தில் எவ்வளவு கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம் ஆனால் நடைமுறையில் பட்டவர்த்தனமாக இந்த அறிவுரை மீறப்படுவதை காணலாம்.

திருமணம் ஆன பெண்களும் சரி இளைசிகளும் சரி இந்த விஷயத்தில் சற்று கவனற்றமர்களாக இருக்கின்றார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

பத்திரிக்கையை புரட்டினால் இன்னாரின் மனைவியுடன் இன்னாரின் கணவர் ஓட்டம் பத்தாவது படிக்கும் சிறுமி? காதலித்த வாலிபனுடன் தப்பி ஓட்டம் என்ற செய்திகளை அதிகம் காண முடிகின்றது. இத்தனை சீர்கேடுகளுக்கும் மிக முக்கிய. காரணம் பெண்கள் அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவதனால்தான் ஏற்படுகிறது.

எனவே தான் அந்நிய ஆண்களிடம் பெண்கள் பேசுவதாக இருந்தால் மிகச்சரியாக பேச வேண்டும் ஒரு போதும் குழைந்து பேசக்கூடாது என்ற ஒழுங்கை கற்றுத்தருகின்றது. பெண்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மார்க்க அடிப்படையில் பொய் பேசுவதும் புறம் பேசுவதும் மட்டும் தான் பாவம் என்று எண்ணி விடாதீர்கள். இதையும் தாண்டி ஆண்களிடம் நீங்கள் குழைந்து பேசுவதும் புறம் பேசுவதைப் போன்றே பாவமான காரியம் என்பதை தங்கள் மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

இஸ்லாம் பெண்களுக்கு கூறும் இந்த ஒழுங்கை இவர்கள் கடைபிடித்திருந்தால் இது போன்ற சீர்கேடுகள் அனைத்தையும் என்றோ ஒழித்திருக்கலாம் சரி இனியாவது ஒழிப்போமே முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே குழைந்து பேசுகின்றார்கள் என்று கூற முடியாது ஆண்களும் அந்நிய பெண்களிடம் குழைந்து பேசத்தான் பேசுகின்றார்கள். இதுவும் வன்மையாக கண்டித்தக்கதே.