31) பெற்றோரை சபிப்பது பெரும்பாவம்
பெற்றோரை சபிப்பது பெரும்பாவம்
பெற்றோரை சபிப்பது பெரும்பாவமாகும் என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள். விபச்சாரம் இணை வைப்பு போன்ற பெரும்பாவங்களிலிருந்து இலகுவாக விலகி விடுகின்றோம். பெற்றோரை சபிப்பதின் மூலம் இன்னொரு பெரும்பாவத்தை இலகுவாக செய்துவிடுகின்றோம். இந்த பெரும்பாவத்தை விட்டும் இஸ்லாமிய சமூகம் விலக வேண்டும்.
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِنَّ مِنْ أَكْبَرِ الكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ»
ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)