26) சபித்தல் கொலைக்கு சமம்
சபித்தல் கொலைக்கு சமம்
நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், அவர்கள் இருவரும் போரிட்டுக்கொள்வது (கொலை செய்வது) இறை நிராகரிடப்பாகும் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வ்தும் அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும் எந்த மனிதனுக்கும் தகாது எதன் மூலம் ஒருவர் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்கின்றாரோ அதன் மூலம் அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்.
ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பதுஅவரைக் கொலை செய்வது போன்றதாகும். யார் ஓர் இறைநம்பிக்கையாளரை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்
அதே சமயம் பிறர் நம்மை முதலில் திட்டியிருந்தால் பதிலுக்கு நாமும் அவரை வரம்பை மீறாமல் திட்டலாம். மேல் சொன்ன எச்சரிக்கை இவரை கட்டுப்படுத்தாது அநீதி இழைக்கப்பட்டவன் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான்.