19) விசாரிக்கும் தருவாயில்

நூல்கள்: நாவை பேணுவோம்

விசாரிக்கும் தருவாயில்

ஒருவரைப்பற்றி நம்மிடம் விசாரிக்கப்படுகின்றது. அவரின் கேரக்டர் பற்றி நம்மிடம் கோரப்படுகின்றது. இந்த நிலையில் புறம் பேசக்கூடாதே பிறர் குறையை மறைக்க வேண்டுமே என்பதை காரணம் காட்டி விசாரிக்கப்படுபவரின் குறையை மறைத்து விடக்கூடாது. ஏனெனில் இந்த நிலையில் உண்மையை கூறாவிடில் விசாரிப்பவர் பாதிக்கப்படுவார். எனவே இது போன்ற சூழ்நிலைகளில் பிறரது குறையை வெளிப்படுத்தியே ஆகவேண்டும். இந்த சமயத்தில் அவரின் குறையை மறைத்தால் தான் குற்றமாகும். 

அவ்வாறே நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்கார் மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்.

முஆவியோ அவர் ஓர் ஏழை அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள் என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ உசாமாவை மணந்துகொள் என்று மீண்டும்) கூறினார்கள். ஆகவே நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான், நான் பெருமிதம் அடைந்தேன். 

அறிவிப்பவர் : ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)

(முஸ்லிம்: 2953)