15) கனவில் பொய்

நூல்கள்: நாவை பேணுவோம்

கனவில் பொய்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் காணாத கனவைக்கண்டதாக வலிந்து சொல்வாரானால் அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால். அவரால் ஒருபோதும் அப்படிச்) செய்ய முடியாது அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 7042)

இக்காலத்து மக்கள் நபிகளாரை கனவில் காண்பது என்பதும் பொதுவாக இறைவனை கனவில் காண்பது என்பதும் சாத்தியமில்லா ஒன்று. இதில் கடுகின் முனையளவும் உண்மையில்லை என்பது மாக்கத்தின் நிலை. இது போன்ற கயவர்களை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளதை காணலாம்.