36) நில மோசடி

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

நில மோசடி

قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»

ஏவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

(புகாரி: 2452)

விளக்கம்:

பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள இன்று சிறந்த முதலீடாகக் கருதப்படுவது நிலத்தை வாங்கி விற்பதாகும். ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பரவலாக இந்த வியாபாரம் நடைபெறுகிறது ஆனால் இந்த வியாபாரத்தில் பெரும்பாலும் உண்மையிருப்பதில்லை. அதிகமதிகம் மோசடிகள் நடைபெறுகின்றன.

அடுத்தவனின் நிலத்தை தன் நிலமாகக் கூறி விற்பனை செய்வது. அடுத்தவனது நிலத்தின் சில பகுதிகளை மட்டும் ஆக்கிரமித்து விற்பனை செய்வது அல்லது தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வது என்று ஏராளமான நில மோசடிகள் நடைபெறுகின்றன. அடுத்தவனின் நிலத்தில் சிறிய அளவு எடுத்துக் கொண்டாலும் அவனுக்கு மறுமை நாளில் கிடைக்கும் தண்டனை மிகப் பெரியதாகும் ஏழு நிலத்தைக் கழுத்தில் தொங்க விடப்பட்டு அவனுக்கு தண்டனை கொடுக்கப்படும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யாராவது வாதத் திறமையால் அடுத்தவனின் பொருளைத் தனக்குரியதாக்கிக் கொண்டால் அவன் நரக நெருப்பின் ஒரு துண்டை தனக்குரியதாக்கிக் கொள்கிறான்” என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

(புகாரி: 2458)