12) மென்மை நன்மையே
மென்மை நன்மையே
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஜரீர் (ரலி)
விளக்கம்: ஆதமின் பிள்ளைகளாக இவ்வுலகத்தில் இருக்கும் மனிதர்கள் தம் சகோதரர்களிடம் அன்போடு நடந்து கொண்டு சச்சரவு இல்லாமல் சகோதரப் பாசத்தோடு இருக்க வேண்டும். ஆனால் இதைக் கவனத்தில் கொள்ளாத பலர் அடுத்தவர்களிடம் பேசும் போது கடுமையான வார்த்தைகளைத் பயன்படுத்துவதையும். அவர்களின் மனதைப் புண்படுத்தும் வண்ணம் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படிப்பட்டவர்களைத் திருத்தும் வண்ணம் இந்த நபிமொழி அமைந்துள்ளது.
மென்மையாக நடக்காமல் கடுமை காட்டும் நபர்கள் எல்லா நன்மைகளை இழக்க நேரிடும். அடுத்தவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அவர்களின் சாபத்திற்கு ஆளாகி இறைக் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். இன்னொரு நபிமொழியில் “அல்லாஹ் மென்மையானவன் மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். கடுமைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான் (முஸ்லிம்: 5055) என்று இடம் பெற்றுள்ளது. மென்மையாக நடக்கும் போது இறையருளை நிறைய நாம் அடைய முடியும்.