ஒரு பெண் யாருக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளார்?
ஒரு பெண் யாருக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளார்?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ‘மக்களில் யாருக்கு, ஒரு பெண் அதிகம் கடமைப்பட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது கணவனுக்கு (அதிகம் கடமைப்பட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.
(பிறகு நான்) ‘மக்களில் யாருக்கு, ஒரு ஆண் அதிகம் கடமைப்பட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது தாயாருக்கு (அதிகம் கடமைப்பட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉத்பா
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2358-அபூஉத்பா என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1175)
மேலும் இந்தச் செய்தி அபூஉத்பாவிற்கும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு மனிதர் கூறப்பட்டும் வந்துள்ளது என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடர் அல்ல.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மிஸ்அர் பின் கிதாம் —> அபூஉத்பா —> ஆயிஷா (ரலி)
பார்க்க: அன்னஃபகது அலல் இயால்-525 , கஷ்ஃபுல் அஸ்தார்-1462 ,(நஸாயீ: 9103),(ஹாகிம்: 7244), 7338 ,
- மிஸ்அர் பின் கிதாம் —> அபூஉத்பா —> ஒரு மனிதர் —> ஆயிஷா (ரலி)
துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-17797