01) பதிப்புரை

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

01) பதிப்புரை

உலகில் தோன்றிய மதத் தலைவர்களில் மிகச் சிறந்தவர்களாகவும், அழகிய மார்க்கத்தையும், அழகிய அறிவுரைகளையும் வழங்கியவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களே! 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மனித தோற்றத்தில் மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாத மக்களிடம் இறைத் தூதராக வந்தவர்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்களின் சொல், செயலால் அந்த மக்களை மனிதர்களில் புனிதர்களாக மாற்றிக்காட்டினார்கள்.

நாகரீகம் வளர்ந்த இக்காலத்தில் கூட இல்லாத பண்பாடுகளையும் பழக்க வழக்கத்தையும் கொண்டவர்களாக அக்கால மக்களை மாற்றிக் காட்டினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைகள் இன்றும் என்றும் பயனளிக்கக் கூடியவை. அவற்றில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடைபிடிக்க வேண்டிய அழகிய அறிவுரைகளை ஆசிரியர் “நபிகளாரின் நற்போதனைகள்” என்ற இந்நூலில் தொகுத்தளித்துள்ளார்.

சிறுவர்கள் அரபி மூலத்துடன் மனனம் செய்வதற்கு ஏற்ற வகையில் அரபி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூலை இஸ்லாமிய ஆரம்ப பாடசாலையில் பாடத்திட்டத்திற்கு வைப்பதற்கு ஏற்ற ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

எனவே பள்ளிவாசல்களில் நடத்தப்படும் மத்ரஸாவில் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு ஏற்ற நூலாகும். இந்நூலில் கூறப்பட்டுள்ள நபிகளாரின் அறிவுரைகளை ஏற்று நடப்பவர் இன்ஷா அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவார் என்பதில் ஐயமில்லை.

நூல் ஆசிரியர் : M.I முஹம்மது சுலைமான்  

TNTJ பப்ளிகேஷன்ஸ் 01.04.2008 சென்னை