26) சூதாட்டம்
சூதாட்டம்
சூதாட்டம் ஷைத்தானுடைய காரியமாகும்
நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
சூதாட்டத்தின் நன்மைகளை விட கேடுகள் அதிகம்
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது” எனக் கூறுவீராக!116 தாங்கள் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “உபரியானதை’ எனக் கூறுவீராக!
சூதாட்டம் தடை செய்யப்பட்ட காரியமாகும்
நபி (ஸல்) அவர்கள் மது, சூதாட்டம், பகடைக் காய் விளையாட்டு, சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் (குபைரா) என்ற போதை பானம் ஆகியவற்றை விட்டும் தடுத்தார்கள். போதை தரக்கூடிய அனைத்தும் ஹராம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
சூதாட்டத்திற்கு அழைப்பது கூடப் பாவமாகும்
4860. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
சூதாட்டமாக கூட செஸ் விளையாடுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சூதாட்டம் விளையாடியவர் அல்லாஹ் ரசூலுக்கு மாறுசெய்தவர்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பகடைக் காய் விளையாட்டை ஆட்டம் விளையாடுகிறாரோ அவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்.
அறிவிப்பவர் ; அபூ மூஸா (ரலி)