09) செருப்பணிதல்
செருப்பணிதல்
வலது புறமாக ஆரம்பித்தல்
ஆயிஷா (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
இடது புறமாக கழற்ற வேண்டும்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.
அறவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(ஒற்றை கால்) ஒரு செருப்பில் நடப்பதற்கு தடை
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
செருப்பால் அசுத்தத்தை மிதித்து விட்டால்
மண் அதை தூய்மைபடுத்தும்
385. உங்களில் இருவர் தன் இரு செருப்புகளால் அசுத்தம் மிதித்து விட்டால் (அதன் பின் அவர் மிதிக்கும்) மண் அந்த செருப்பிற்கு துப்புரவளிக்கக் கூடியதாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
காலணியுடன் தொழுவதற்கு அனுமதி
5850. ஸயீத் அபூ மஸ்லமா (ரலி) அவர்கள் அறிவித்தார்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம் (தொழுது வந்தார்கள்)’ என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸயீத் அபூமஸ்லமா (ரலி)
(காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல் : (அபூதாவூத்: 652)
அசுத்தமான காலணிகளை அணிந்து தொழுவது கூடாது
650. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழ வைத்துக் கொண்டிருந்த போது தன்னுடைய செருப்புகளைக் கழற்றி இடது புறத்தில் வைத்தார்கள். இதை (தொழுது கொண்டிருந்த) அக்கூட்டம் பார்த்த போது அவர்களும் தங்களது காலணிகளை எடுத்து வைத்து விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்பு, ‘உங்களுடைய காலணிகளை கழற்றி வைக்க உங்களை எது தூண்டியது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களது காலணிகளைக் கழற்றி வைப்பதை நாங்கள் பார்த்தோம். ஆகையால் எங்களது காலணிகளை நாங்கள் கழற்றி விட்டோம்’ என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து எனது காலணிகளில் அசுத்தம் அல்லது நோவினை இருப்பதாகச் சொன்னார்கள்’ என்று கூறி விட்டு, ‘உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் (தன் காலணிகளை) அவர் உற்று நோக்கட்டும். தன்னுடைய காலணிகளில் அசுத்தத்தையோ அல்லது நோவின்ஷி தரக் கூடியதையோ அவர் பார்த்தால் அதைத் துடைத்து விட்டு அத்துடன் தொழுது கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)