164) சுலைமான் நபியிடம் இருந்த ஹுத்ஹுத் பறவையை பற்றிய நிகழ்வு?
கேள்வி :
சுலைமான் நபியிடம் இருந்த ஹுத்ஹுத் பறவையை பற்றிய நிகழ்வு என்ன?
பதில் :
20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்துவிட்டதா? என்றார்.
21. அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்துவிடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டுவர வேண்டும் (என்றும்கூறினார்).
22. (அப்பறவை) சிறிதுநேரமே தாமதித்தது. “உமக்குத் தெரியாதஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டுவந்துள்ளேன்”“ என்றுகூறியது.
23. “நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது”“
24. “அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வுக்கன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்” (என்றும் கூறியது.)
25. வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான்.
26. அல்லாஹ்வைத் தவிரவணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி என்றும் கூறியது.
27. “நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகிவிட்டாயா? எனஆராய்வோம்”“ என்று அவர்கூறினார்.
28. “எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் இதைப்போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தரு கிறார்கள் என்று கவனி!”“ (என்றும்கூறினார்).