67) உணவுத் தட்டு என்ற வரலாற்று நிகழ்ச்சியை கூறு?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி :

உணவுத் தட்டு என்ற வரலாற்று நிகழ்ச்சியை கூறு : 

பதில் : 

111. என்னையும், என் தூதரையும் நம்புங்கள்!” என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்தபோது நம்பிக்கை கொண்டோம்! நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பாயாக!” என அவர்கள் கூறினர்.

112. மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?” என்று சீடர்கள் கூறியபோது, “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று அவர் கூறினார்.

113. அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண்மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்” என்று அவர்கள் கூறினர்.

114. அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார்.

115. உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்” என்று அல்லாஹ் கூறினான்.

(அல்குர்ஆன்: 111:115)