வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாம் என்பது சரியா?
வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாம் என்பது சரியா?
நாம் தேடிப் பார்த்த வரையில் இப்படி ஒரு பலவீனமான ஹதீஸ் கூட எந்த நூலிலும் இல்லை. யூதர்கள் வட்டித் தொழில் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டுள்ளீர்கள்.
யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம். (அல்குர்ஆன்: 4:160) ➚
இந்த வசனத்தில் யூத சமுதாயத்தைப் பற்றி குறிப்பிடும் போது, வட்டி வாங்கினார்கள் என்று குறிப்பிடுகின்றான். எனவே யூதர்களின் தொழிலே வட்டியாகத் தான் இருந்தது என்பதற்கு இந்த வசனம் போதிய சான்றாகும்.
(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)