50) ஆண்கள் யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது?
கேள்வி :
ஆண்கள் யாரை யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது?
பதில் :
- உங்கள் அன்னையர்,
- உங்கள் புதல்வியர்,
- உங்கள் சகோதரிகள்,
- உங்கள் தந்தையரின் சகோதரிகள்,
- உங்கள் அன்னையின் சகோதரிகள்,
- சகோதரனின் புதல்விகள்,
- சகோதரியின் புதல்விகள்,
- உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர்,
- பால்குடிச் சகோதரிகள்,
- உங்கள் மனைவியரின் அன்னையர்,
- நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை.
- உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்).
- இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.