33) கெட்ட எண்ணங்கள் சம்மந்தமாக இறங்கிய வசனம்?
39) கெட்ட எண்ணங்கள் சம்மந்தமாக இறங்கிய வசனம்?
கேள்வி :
கெட்ட எண்ணங்கள் ஏற்படுகிறது என்று முஃமீன்கள் முறையிட்ட போது இறங்கிய வசனம் என்ன?
பதில் :
நாம் தவறான எண்ணங்கள் கொண்டாலும் அதற்காக இறைவன் குற்றம் பிடிப்பான்.
ஆதாரம் :
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அதுபற்றி உங்களை விசாரிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
கேள்வி :
(அல்குர்ஆன்: 2:284) ➚ என்ற மேற்கூறப்பட்ட வசனம் மாற்றப்பட்டதா? அல்லது உள்ளத்தால் நினைப்பதற்கு கூட தண்டனை உண்டா?
பதில் :
அந்த வசனத்தை அல்லாஹ் மாற்றி (அல்குர்ஆன்: 2:286) ➚ வசனத்தை அருளினான்.
ஆதாரம் :
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.68 அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.265 “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்.)