01) முன்னுரை

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

01) முன்னுரை

மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்துவதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அந்த நபிமார்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வேதங்களும் வழங்ப்பட்டது . அவ்வேதங்களின் மூலமாக மக்களுக்கு நேர்வழியை தெளிவுபடுத்தினான். 

அந்த வரிசையில் இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் நபியாக தேர்தெடுத்து குர்ஆன் என்ற வேதத்தை அவர்களுக்கு வழங்கினான். இக்குர்ஆனின் மூலமாக மனித சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்வழிப்  படுத்தினார்கள்.

இறுதிநாள் வருகின்ற வரை உள்ள மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட வேதம் தான் குர்ஆன் ஆகும். 

அறிவியல் வளர்சசியால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக  இருந்தாலும் திருக்குர்ஆனின் எந்தவெறு கருத்தும் தவறானது என்று இதுவரை யாராலும் நிரூபிக்க முடியவில்லை. இறுதிநாள் வரை அது தவறானது என்று நிரூபிக்கவும் முடியாது. 

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்கையையும் முன்மாதியாக கொண்டு நமது வாழ்கையை சரி செய்து கொள்ள வேண்டும். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் அமைதியையும் சமாதானத்தையும் மறுமையில் சுவனத்தையும் அடைவதற்கான ஒரே வழியாகும். 

எந்த விஷயத்தையும் கேள்வி பதில் வழுயாக சொன்னால் மக்கள் அதை இலகுவான முறையில் தெரிந்து கொள்வார்கள். மனதில் ஆழமாக  பதிந்துவிடும். குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்தால் மக்கள் படிப்பதற்கும், விளங்குவதற்கும், மனதில் பதிய வைத்துக் கொள்ளவும் இலகுவாக இருக்கும் என்ற நோக்கத்தில்தான் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இறைவன் கூறுகிறான். 

يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌ ۚ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌ ؕ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

(அல்குர்ஆன்: 2:269)

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? 

(அல்குர்ஆன்: 54:17)