21) காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)
v4

21) காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில்

நெல்லை மாவட்டம் பேட்டையைச் சேர்ந்தவர். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பிறந்தார். எனவே அந்நாளின் நாயகர்களான இருவரில் இரண்டாமவரான இஸ்மாயீல் நபியின் பெயரைச் சேர்த்து முஹம்மது இஸ்மாயீல் என்று பெயரிடப்பட்டார்.

சிறு வயதிலே சகோதரர்களோடு சேர்ந்து பால்ய முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தினார். 1936 ஆம் ஆண்டுவரை தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர். அதன் பிறகு அதிலிருந்து விலகி முஸ்லிம் லீகில் இணைந்து போராடினார். 20 ஆண்டு காலம் சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் மக்கள் பிரதி நிதியாகப் பணியாற்றினார்.

தமிழகத்தில் பிறந்து வாழ்ந்து கொண்டு கேரளா மஞ்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அங்கிருந்து 1962, 1967, 1971 ஆகிய மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

அரசியல் அமைப்பு நிர்ணய சபையிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிபு அவர்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த போது காந்தியின் “கல்லூரியைப் புறக்கணியுங்கள்” என்ற அறிவிப்பு வருகிறது.

உடனே தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு காங்கிரசில் கைகோர்த்து களம் பல கண்டு 5.4.1972 ஆம் ஆண்டு கண்ணியமான முறையில் காலமானார்.

(வி.போ.மு, வி.என்.சாமி பக் 742-744)