14) சிலிர்க்க வைத்த சிறைக் கூடம்
14) சிலிர்க்க வைத்த சிறைக் கூடம்
சிறையிலடைக்கப்பட்ட பகதூர் ஷாவை, கையில் பெரிய பாத்திரத்துடன் பார்க்க வந்தான் ஹட்ஸன். நீண்ட நாட்களாகப் பாக்கியிருந்த கம்பெனியின் பரிசு என்று மூடிய பாத்திரத்தை பகதூரின் முன்னால் திறந்து காட்டினான். பகதூரின் ஒரு மகன், ஒரு பேரன் ஆகிய இருவரின் தலைகளும் அதற்குள்ளே!. ஒருகணம் நினைத்தாலே சிலிர்த்து விடுகிறது நம் உடல்.
அதைப் பார்த்ததும் மன்னர் கதறி அழுவார் என எதிர்பார்த்தான் ஹட்ஸன். அவனது எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. அவன் கேட்டான் உமது கண்களில் கண்ணீர் வற்றி விட்டதா?
இல்லை… அரசர்கள் அழுவதில்லை என்று அவனை அசர வைக்கும் விதத்தில் அதிரடியாக அவர் பதிலளித்தார்.(காஸிம் ரிஸ்வி, பஹதூர் ஷா ஜஃபர் பக் 9,10 (இ.சு.பெ.இ.ப) பக். 194)