07) பரவிய தீயைப் பாதுகாத்தவர்கள்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

07) பரவிய தீயைப் பாதுகாத்தவர்கள்

இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், பிரஞ்சு, டச்சு என இன்னபிற ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஏராளமான போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 1857-ல் நடைபெற்ற புரட்சிப் போருக்குத் தான் இந்தியப் போர் என்ற தேசியச் சாயல் முதன் முதலாகக் கிடைத்திருக்கிறது.

அதுவரை நடைபெற்ற எல்லா போர்களும் பகுதிவாரியான பெயர்களிலே அழைக்கப்பட்டன. ஏனெனில் மற்ற போர்கள் அனைத்தும் வெற்றி தோல்வி என எதுவாயினும் துவங்கிய இடத்திலேயே முடிந்து விடும்

ஓரிடத்தில் துவங்கி ஊரெல்லாம் பரவி தேசத்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டு ஆர்ப்பரித்தது என்பது தான் 1857-ஐ ஏனைய போர்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

இதற்கு முழுக்க முழுக்க சொந்தம் கொண்டாட தகுதியுடையவர்கள் முஸ்லிம்கள். ஏனெனில் போர் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் அதற்குத் தலைமை தாங்கி வழி நடத்தியவர்களும்,அதற்குரிய தண்டனைகளை ஏந்தி உயிர் நீத்தவர்களும் முஸ்லிம்களே.