பெண்களுக்கு கத்னா உண்டா?

கேள்வி-பதில்: பெண்கள்

ஷாபி இமாம் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமை என்கின்றனர். அபூஹனீஃபா இமாம், மாலிக் இமாம் ஆகியோர் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது சுன்னத் என்று கூறுவதாக நவவி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பெரும்பாலானவர்கள் பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று கூறினாலும் அது சம்மந்தமாக வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாக இல்லை.

பெண்களின் பிறப்புறுப்பில் உணர்வுகளின் முடிச்சு என்று கூறப்படும் பகுதியை வெட்டி எடுப்பதை பெண்களின் கத்னா என்கின்றனர்.

உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்தார். அவரிடம் ஒட்ட நறுக்கி விடாதே! மேலோட்டமாக நறுக்குவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அபூதாவூதில் ஒரு ஹதீஸ் உள்ளது.

سنن أبي داود (4/ 368)
5271 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الرَّحِيمِ الْأَشْجَعِيُّ، قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ، قَالَ عَبْدُ الْوَهَّابِ الْكُوفِيُّ: عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ الْأَنْصَارِيَّةِ، أَنَّ امْرَأَةً كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ، وَأَحَبُّ إِلَى الْبَعْلِ» قَالَ أَبُو دَاوُدَ: رُوِيَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ، بِمَعْنَاهُ وَإِسْنَادِهِ قَالَ أَبُو دَاوُدَ: «لَيْسَ هُوَ بِالْقَوِيِّ وَقَدْ رُوِيَ مُرْسَلًا» قَالَ أَبُو دَاوُدَ: وَمُحَمَّدُ بْنُ حَسَّانَ مَجْهُولٌ وَهَذَا الْحَدِيثُ ضَعِيفٌ

(அபூதாவூத்: 4587)

இதில் இடம் பெறும் முஹம்மது இப்னு ஹஸ்ஸான் என்பவர் யாரென்று தெரியாதவர். இப்னு அதீ, பைஹகீ, அபூதாவூது ஆகியோர் இதனை உறுதிப்படுத்துகின்றனா.

இதே ஹதீஸ் பைஹகீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

السنن الكبرى للبيهقي (8/ 562)
17560 – وَأَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ، ثنا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الرَّحِيمِ الْأَشْجَعِيُّ، قَالَا: ثنا مَرْوَانُ، ثنا مُحَمَّدُ بْنُ حَسَّانَ، قَالَ: عَبْدُ الْوَهَّابِ الْكُوفِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ الْأَنْصَارِيَّةِ، أَنَّ امْرَأَةً، كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا تَنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ , وَأَحَبُّ إِلَى الْبَعْلِ ” قَالَ أَبُو دَاوُدَ: مُحَمَّدُ بْنُ حَسَّانَ مَجْهُولٌ , وَهَذَا الْحَدِيثُ ضَعِيفٌ

இதுவும் முஹம்மத் பின் ஹஸ்ஸான் என்பவர் வழியாக அறிவிக்கப்படுவதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

இந்த ஹதீஸ் ஹாகிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது

المستدرك على الصحيحين للحاكم (3/ 603)
6236 – مَا حَدَّثَنَاهُ أَحْمَدُ بْنُ سَلْمَانَ الْفَقِيهُ بِبَغْدَادَ، ثَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ الرَّقِّيُّ، ثَنَا أَبِي، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ، قَالَ: كَانَتْ بِالْمَدِينَةِ امْرَأَةٌ تَخْفِضُ النِّسَاءَ يُقَالُ لَهَا أُمُّ عَطِيَّةَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْفِضِي وَلَا تَنْهَكِي، فَإِنَّهُ أَنْضَرُ لِلْوَجْهِ وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ»
[التعليق – من تلخيص الذهبي]
 سكت عنه الذهبي في التلخيص

இதன் அறிவிப்பாளரான அலா என்பவர் இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர். எனவே இதுவும் பலவீனமான ஹதீஸ் தான்.

இந்தக் கருத்தில் பஸ்ஸார், அபூநயிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

مجمع الزوائد ومنبع الفوائد (5/ 171)
8881 – وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: «دَخَلَ عَلَى النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – نِسْوَةٌ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: ” يَا نِسَاءَ الْأَنْصَارِ، اخْتَضِبْنَ غَمْسًا، وَاخْفِضْنَ وَلَا تَنْهِكْنَ، فَإِنَّهُ أَحْظَى عِنْدَ أَزْوَاجِكُنَّ، وَإِيَّاكُنَّ وَكُفْرَ الْمُنْعِمِينَ» “.
قَالَ مَنْدَلٌ: يَعْنِي الزَّوْجَ.
رَوَاهُ الْبَزَّارُ، وَفِيهِ مَنْدَلُ بْنُ عَلِيٍّ، وَهُوَ ضَعِيفٌ،

இந்த ஹதீஸில் மன்தல் இப்னு அலி என்பார் இடம் பெறுகிறார். அவர் பலவீனமானவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

கத்னா ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும் என்ற ஹதீஸ் அஹ்மத் நூலில் இடம்பெற்றுள்ளது.

مسند أحمد مخرجا (34/ 319)
20719 – حَدَّثَنَا سُرَيْجٌ، حَدَّثَنَا عَبَّادٌ يَعْنِي ابْنَ الْعَوَّامِ، عَنِ الْحَجَّاجِ، عَنْ أَبِي الْمَلِيحِ بْنِ أُسَامَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ، مَكْرُمَةٌ لِلنِّسَاءِ»

இதன் அறிவிப்பாளர் ஹஜ்ஜாஜ் என்பார் பலவீனமானவர். தனது ஆசிரியரை விட்டு விட்டு ஆசிரியரின் ஆசிரியர் பெயரைப் பயன்படுத்தக் கூடியவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

பைஹகீயிலும் இது இடம் பெற்றுள்ளது. இது இப்னு அப்பாஸின் சொந்தக் கூற்று என்பதே சரியான முடிவு என்று அவரே கூறுகிறார்.

السنن الكبرى للبيهقي (8/ 563)
17565 – أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ الْفَقِيهُ، أنبأ أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ، ثنا عَبْدَانُ، ثنا أَيُّوبُ الْوَزَّانُ، ثنا الْوَلِيدُ بْنُ الْوَلِيدِ، ثنا ابْنُ ثَوْبَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ , مَكْرُمَةٌ لِلنِّسَاءِ ” هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ , وَالْمَحْفُوظُ مَوْقُوفٌ

இந்தக் கருத்தில் வருகின்ற எந்த ஒரு ஹதீஸும் விமர்சனத்துக்கு உட்படாமல் இல்லை. அதனால் பெண்கள் கத்னா செய்வது இஸ்லாமிய வழி அல்ல என்பதை உணரலாம்.

மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை இறைவன் வழங்கியுள்ளான். அந்த உணர்வைக் கொண்டே உலகம் நிலை பெற்றுள்ளது. அவர்கள் உடலுறவின் மூலம் அந்த இச்சையைத் தணித்துக் கொள்கின்றனா.

பெண்களுக்கு கத்னா செய்வதால் அவர்கள் அந்த பாக்கியத்தை இழந்து விடுகின்றனர். இல்லறத்தில் அவர்கள் பூரண திருப்தியை அடைவதில்லை. அடைய முடியாது.

ஆண்களுக்கு கத்னா செய்வது அவா்களின் அந்த உணர்வுக்குத் தடையாக இராது. அதற்கு உறுதுணையாக இருக்கும் . இதற்கு மேல் விளக்கமாக இதை எழுதஇயலாது. இறைவன் எந்த நோக்கத்திற்காக பிறப்புறுப்புக்களை அமைந்துள்ளானோ அந்த நோக்கத்தில் பெரும்பகுதி பெண்களுக்கு கத்னா செய்வதால் அடிபட்டுப் போகின்றது.

இறைவன் வழங்கிய பாக்கியத்தை அழித்துக் கொள்வது என்ற அடிப்படையில் பாக்கும் போது பெண்களுக்கு கத்னா செய்வது கொடூரமானது என்று அறியலாம்.