66) அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி அற்புதம் நிகழ்த்தினார்கள்

நூல்கள்: குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

66) அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி அற்புதம் நிகழ்த்தினார்கள்

2:60 وَاِذِ اسْتَسْقَىٰ مُوْسٰى لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ‌ؕ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا‌ؕ قَدْ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ‌ؕ کُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِىْ الْاَرْضِ مُفْسِدِيْنَ‏

 

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது  உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!  என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர்.  அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!  (என்று கூறினோம்)

(அல்குர்ஆன்: 2:60)

20:67 فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى‏

 

எனது அடியார்களை அழைத்துச் செல்வீராக! கடலில் அவர்களுக்காக ஈரமில்லாத ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக! பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர்! (வேறெதற்கும்) அஞ்சாதீர்!  என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.

(அல்குர்ஆன்: 20:77)

26:63 فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ‌ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ‌ۚ‏

 

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக  என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(அல்குர்ஆன்: 26:63)

44:23 فَاَسْرِ بِعِبَادِىْ لَيْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَۙ‏ 44:24 وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا‌ؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ‏

எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் எதிரிகளால் பின் தொடரப்படுவீர்கள். பிளக்கப்பட்ட நிலையில் கடலை விட்டு விடுவீராக! அவர்கள் மூழ்கடிக்கப்படும் படையினராவர்  (என்று இறைவன் கூறினான்.)

(அல்குர்ஆன்: 44:23-24)

7:117 وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَلْقِ عَصَاكَ‌ ۚ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ ‌ۚ‏

 

உமது கைத்தடியைப் போடுவீராக!  என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

(அல்குர்ஆன்: 7:117)

20:67 فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى‏ 20:68 قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى‏ 20:69 وَاَ لْقِ مَا فِىْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا‌ ؕاِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍ‌ ؕ وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى‏

மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.  அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர் என்று கூறினோம்.  உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்  (என்றும் கூறினோம்.)

(அல்குர்ஆன்: 20:67-69)