அறியாமைக் கால கடைவீதிகள் பற்றி
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள்.
அப்போது ‘உங்களுடைய இறைவனின் அருளைத் தேடுவது உங்களின் மீது குற்றமில்லை’ என்ற (அல்குர்ஆன்: 02:198) ➚ வசனம் அருளப்பட்டது.
இவ்வசனத்துடன் ஹஜ்ஜுக்காலங்களில் என்பதையும் சேர்த்து இப்னு அப்பாஸ்(ரலி) ஓதியிருக்கிறார்.