அத்தவ்பா அத்தியாயம் பற்றி

மற்றவை: குர்ஆன் வசனத்திற்கு நபியின் விளக்கம்

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அத்தவ்பா எனும் (9ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால்,தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள் என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், அல்அன்ஃபால் எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பத்ருப் போர் குறித்து அது அருளப்பெற்றது என்று பதிலளித்தார்கள். நான் அல்ஹஷ்ர் எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது என்று பதிலளித்தார்கள்.

(புகாரி: 4882))