நபியின் மனைவியர் வைராக்கியமாக நடந்து கொண்ட போது
முக்கிய குறிப்புகள்:
குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்ட போது, நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்து விட்டால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும் என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த ((அல்குர்ஆன்: 66:5) ➚) இறைவசனம் இறங்கிற்று.
66:5 عَسٰى رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ يُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓٮِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓٮِٕحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبْكَارًا
(அல்குர்ஆன்: 66:5) ➚. அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த – முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான – கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் – இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.