6) ஆற்றல் இன்றி பயணம் இல்லை
ஆற்றல் இன்றி பயணம் இல்லை
இப்போது திருக்குர்ஆனின் அறிவியலில் புதைந்து கிடந்ததும், ஐன்டீனுடைய சார்பியல் கோட்பாட்டால் வெளிப்பட்டதுமாகிய மற்றொரு அறிவியல் உண்மையின் பால் கவனம் செலுத்துவோம். திருக்குர்ஆன் மனிதன் மற்றும் ஜின் சமூகத்திற்குப் ஸ`ஜின் என்ற பெயரில் திருக்குர்ஆன் குறிப்பிடும் படைப்பினம் நமது பொருளியல் உலகைச் (தூல உலகை – Material World) சார்ந்தவை இல்லை.
எனவே அவை நாம் அறிந்த அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு வாழும் படைப்பினங்கள் இல்லை. எனவே அவைகளைக் குறித்து எதுவும் நாம் ஆராய்ந்து அறிய முடியாது பொதுவான ஒரு அழைப்பை விடுத்துள்ளதையும் அதில் (அல்குர்ஆன்: 55:33) ➚ ஒரு சவாலின் தொனி இருப்பதையும் கண்டோம். அதன் பொருளென்ன?இதைத் தெரிந்து கொள்வதற்கு முன் அதே வசனத்தில் ஆகாய பூமிகளின் எல்லையைத் தாண்ட வேண்டுமானால் அதற்குரிய ஆற்றல் இல்லாமல் நம்மால் தாண்டிப் போக முடியாது என அழுத்தமாகக் கூறப்பட் டுள்ளது. இந்த அறிவியல் செய்தியின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.
திருக்குர்ஆன் இதைக் கூறி இருப்பது ஏழாம் நூற்றாண் டில் என்பதும் அக்காலத்தில் மனிதன் ஒரு மிதிவண்டி கூட கண்டுபிடிக்கவில்லை என்பதும் தெரிந்ததே. எனவே வெறும் ஒரு நீராவி இயந்திரத்தைக் கூட அக்கால மக்களால் கற்பனை செய்யப்பட்டிருக்க இயலாது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒருவர் விண்வெளிப் பயணத்தைப் பற்றியும்,அப்பயணம் வானத்தின் எல்லையைத் தாண்டும் தூரத்திற்கு செய்வதன் சாத்தியக்கூறு என்ன என்பது பற்றியும் கூறினார் என்றால் அதுவே நம்பமுடியாத அளவிற்கு வியப்பான செய்தியாகும்.
இந்த இடத்தில் திருக்குர்ஆனுக்கு முந்திய கால கட்டத்திலும் வானத்தின் எல்லையைத் தாண்ட முடியுமா? முடியாதா? என்ற சிந்தனை தோன்றாவிடினும் வான்வழிப் பயணம் குறித்து புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளதே என வினவப்படலாம். ஆயினும் அந்தக் கதைகளில் வான்வழிப் பயணத்தைச் சாத்தியமாக்குவது பறக்கும் பறவைகளின் மீது அமர்ந்தோ அல்லது அப்படிப்பட்ட பறவையாக தாமே ஆகிக் கொள்வதன் வாயிலாகவோ அல்லது பறக்கும் ஆற்றல் பெற்ற பூதகணங்களை அடிமைப்படுத்துவதன் மூலமாகவோ அதுவும் அல்லது பறக்கும் இயல்பை வழங்கும் மந்திரச் சொற்களை உச்சரிப்பதன் வாயிலாகவோ மனிதன் விண்ணில் பறந்த கதைகளைத் தாம் கூறுகின்றன. இந்தக் கதைகளை இந்த 21ம் நூற்றாண்டு மனிதனின் அறிவியல் அறிவைக் கொண்டு அவையாவும் மனித இச்சைகளின் கள்ளத் தொடர்புக்கு வடிகாலாய் விளங்கும் மூடநம்பிக்கைகளே எனக் கேட்ட மாத்திரத்திலேயே முடிவு செய்யப்படக் கூடியவை களாகும்.
ஆனால் அதே நேரத்தில் தப்பும் தவறுகளோ, குற்றம் குறைகளோ இம்மியும் நெருங்க இயலாத தூய சத்தியமாம் வான்மறைக் குர்ஆன் “பறக்கும் இறக்கைளின்றி நீங்கள் வானில் பறக்க இயலாது என்றோ அல்லது அதைப் போன்ற பழம் புராணங்களின் வார்த்தைகளிலோ செய்தியைக் கூறாமல் “ஆற்றலின் மூலமே அன்றி நீங்கள் அதை (ஆகயங்களின் எல்லையை) கடந்து செல்லமுடியாது என நவீன அறிவியல் உலகிற்கு மட்டுமே விளங்கும் அதன் “விண்வெளிப் பயணவியல் (Astronautics) மொழியிலேயே கூறியுள்ளது.
எனவே வான்மறையின் இந்தச் செய்தி இன்று நாம் பயன்படுத்தும் இராக்கெட்டுகளின் எரிபொருளின் ஆற்றலைவிட அதிகமான ஆற்றலுள்ள எதிர்காலத்தில் வடிவமைக்க இருக்கும் விண்வெளிக் கப்பல்களின் (அப்படி ஒரு எண்ணம் இப்போது இருந்தாலும் அல்லது இல்லா விட்டாலும்) எரிபொருளின் எரிசக்தியைக் குறித்தே கூறப் பட்டுள்ளது என்பது மேகமில்லா உச்சிவானத்துப் பௌர்ணமி போல் ஒளிவுமறைவில்லா தெளிவான தகவலாகும்.
அளவற்ற ஆற்றலின் தேவை
நாம் இப்போது ஆகாய பூமிகளின் எல்லையைத் தாண்ட வேண்டுமாயின் அதற்காக ஆற்றலின் இன்றியமையாமையை திருக்குர்ஆன் வலியுறுத்துவதன் உண்மை என்ன என்பதைப் பார்ப்போம். ஒருவர் புவிஈர்ப்பு சக்தியின் இழுவிசையிலிருந்து விடுபட வேண்டுமானால் அவர் ஒரு இராக்கெட்டில் பயணம் செய்யவேண்டும் என்பதோடு அந்த இராக்கெட்டின் தொடக்க வேகம் (Initial velacity) வினாடிக்கு ஏழு மைலுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
அவர் சூரியக்குடும்பத்தைத் தாண்டிப்போக வேண்டுமானால் அவரது இராக்கெட் வினாடிக்கு 11 மைல் தொடக்க வேகத்தை எட்ட வேண்டும். ஆனால் அந்த வேகத்தைப் பெறுவது இன்று மிகக் கடினமான காரியமாகும். ஏனெனில் இராக்கெட்டின் வேகம் என்பது அதில் எரிக்கப்படும் எரிபொருளின் எரி சக்தியிலிருந்தே பெறப்படுகிறது. எனவே இன்று பயன்பாட்டில் உள்ள எரிபொருளை வைத்துக்கொண்டு சூரியக் குடும்பத்தைத் தாண்ட வேண்டுமானால் அதற்காக பெருமளவு எரிபொருளை இராக்கெட்டில் கொண்டு செல்ல வேண்டும். இது எளிதான காரியம் இல்லை.
இன்றைய தேதியில் நம்மிடம் இருக்கும் எரிபொருளின் ஆற்றலை வைத்துக்கொண்டு நமது காலக்சியை தாண்ட இயலாது என்பதே உண்மை. ஆனால் எதிர்காலத்தில் இன்றுள்ளதைவிட பெருமளவு ஆற்றலை வெளிப்படுத்தும் எரிபொருளை நமது விண்வெளிக் கப்பல்களில் பயன் படுத்தும் தொழில் நுணுக்கத்தை நமது விஞ்ஞானிகள் கற்றுக் கொண்டாலும் ஆகாயத்தின் எல்லையை நம்மால் தாண்டிச் செல்ல முடியுமா எனக் கேட்டால் `முடியாது என்பதே அதன் பதிலாகும். ஏனென்றால் ஆகாயத்தின் எல்லையைத் தாண்டிச் செல்வதற்கு நாம் பெற வேண்டிய ஆற்றல் அறவற்றது ஆகும்! அளவற்றது(Infinite) என்பதன் விளக்கம் அப்படிப்பட்டதாகும்.
எதிர்காலம் எப்படி?
இன்று ஐன்டீனுக்குப் பிறகு நாம் வாழ்ந்து கொண் டிருக்கிறோம். எனவே பொருண்மைக்கும், வேகத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து அறிந்தவர்களாக இருக்கிறோம். “பொருண்மை என்பது நகர்வுக்கு எதிரான தடை என்பது முன்னர் கூறியுள்ளோம். எனவே வேகம் எல்லை மீறிச் செல்லும்போது, நகரும் பொருளின் பொருண்மையும் எல்லை மீறிச் செல்லும். இந்த இயற்பாடு வேகத்தை எல்லை மீறாதவாறு செய்துவிடும். வேகத்தின் எல்லை என்பது ஒளியின் வேகமாகும்.
சான்றாக ஒருவர் ஆகாயத்தில் எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தாலும் கோடானு கோடிக் கணக்கான வருடங்கள் பயணம் செய்யும் அளவிற்கு ஆகாய எல்லையின் தொலைவு தூரமானதும் ஓயாமல் விரிவடைந்து கொண்டிருப்பதுமாகும். எனவே அவ்வளவு காலம் ஒருவரால் பயணம் செய்யவோ அல்லது அப்படிப்பட்ட பயணத்திற்கு ஏற்ற விண்கலமோ இல்லையென்பதால் விண்ணகத்தின் எல்லையைத் தாண்டும் ஆற்றலை நாம் பெறவில்லை என்பதை நம் எளிதாக விளங்கிக் கொள்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் நிலமை மேலும் மேலும் முன்னேற்றமடைந்து நிலைமை அடியோடு மாறிவிடுவதாகவே கற்பனை செய்வோம். அந்த நிலையில்?
மனிதன் எதிர்காலத்தில் எப்போதேனும் வரம்பற்ற காலத் திற்கு பழுதேதும் இல்லாமல் பயணம் செய்யும் ஒரு விண் கலத்தை வடிவமைப்பதாகவும் அந்த விண்கலம் விண்வெளி யிலுள்ள ப்ளாஸ்மா (Plasma)வை எரிபொருளாக்கிப் பறக்கும் ஆற்றலைக் கொண்டு இருப்பதாகவும் வைத்துக் கொள் வோம். மேலும் அந்த விண்கலத்திற்கு அக்கலம் உள்ளளவும் உலகியல் சூழலே நிலைநிற்கும்படி செய்யப்பட்டுள்ள தாகவும் வைத்துக் கொள்வோம்.
இதைப் போன்று அதில் பயணம் செய்யும் மனிதர்களும் வரம்பற்ற காலத்திற்கு உயிர் வாழும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு விட்டதாகவும் வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்த விண்கலத் தில் பயணம் செய்யும் மனிதர்கள் என்றேனும் ஒருநாள் வானத்தின் எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாதா என்று கற்பனையின் கடைக்கோடிக்கு சென்று ஒரு கேள்வியை எழுப்பினாலும், நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அந்த நிலையிலும் அவர்களால் வானத்தில் எல்லையைத் தாண்டிச் செல்ல இயலாது என்பதே உண்மையாகும்! ஏன்?
எட்ட முடியாத வேகம்
ஏனென்றால் இரண்டு காரணங்கள் அதற்குத் தடையாக இருக்கிறது. முதலாவது காரணம் பேரண்டத்தின் பரப்பளவு நிலையானது இல்லை. அது ஓயாமல் விரிவடைந்து கொண் டிருக்கிறது. இந்த நிலையில் இப்பேரண்டத்தின் இப்போ துள்ள எல்லையை அடைவதற்கே அந்த விண்கலம் பல்லாயிரம் கோடி வருடம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் அந்த கால இடைவெளியில் பேரண்டமும் விரிவடைந்து கொண்டே இருக்கும். எனவே இந்த விண்கலம் மேலும் பல்லாயிரம் கோடி வருடங்கள் மேலும் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால் பேரண்டம் அப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கும். அந்த விண்கலம் எவ்வளவு காலம் பயணம் செய்தாலும் இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் பேரண்டத்தின் எல்லை யைத் தாண்டுதல் என்பது இயலாத காரியமாகும். பேரண்டத்தின் எல்லையை மனிதனால் தாண்டிச் செல்ல முடியாது என்பதற்கான இரண்டாவது காரணத்தைப் புரிந்து கொள்வதற்காக ஒரு வினாவை எழுப்புவோம். பேரண்டம் விரிவடைந்து கொண்டிருப்பதாலேயே மேற் கண்ட நிலமையிலும் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டிச் செல்ல இயலாத நிலை ஏற்படுவதாகக் கண்டோம்.
ஆனால் பேரண்டம் என்ன வேகத்தில் விரிவடைகிறதோ அதைவிட அதிகமான வேகத்தில் விண்கலம் பயணம் செய்தால் என்றேனும் ஒருநாள் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டி விடலாமல்லவா என்பதே அந்த வினாவாகும். பரிதாபமே! அதுவும் இயலாத காரியமாகும்! எப்படி? எப்படியென்றால் பேரண்டத்தின் விரிவாக்க வீதம் (Rate) நிரந்தரமானதன்று. பேரண்டம் விரிவடைதல் என்பது அதற்குள் இருக்கும் காலக்சிகளுக்கிடைலான தூரம் விரிவடைவதைப் பொருத்து கூடிக்கொண்டே இருக்கும்.
காலக்சிகளுக்கிடையிலான தூரம் விரிவடையும்போது அவை விரிவடையும் வேகம் கூடிக்கூடி வரும் என்பதை நாம் (பார்க்க: பக்கம் 42, எ ப்ரீஃப் ஹிடரி ஆஃப் டைம்) முதல் தொகுதியில் கூறியுள்ளோம். எனவே பேரண்டம் விரிவடையும் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் விண்கலம் பயணம் செய்ய வேண்டு மாயின் ஒரு கட்டத்தில் இந்த விண்கலம் ஒளியின் வேகத்தை மீறி பயணம் செய்ய வேண்டி இருக்கும். இதுவும் இயலாத காரியமே! ஏன்?
சவாலின் காரணம் இதுவே!
ஏனென்றால் வேகத்திற்கு ஒரு உச்சவரம்பு உண்டு. அது ஒளியின் வேக (வினாடிக்கு3,00,000 கி.மீ.) மாகும். அந்த வேகத்தை எந்தப் பொருளாலும் மீற முடியாது என்பது ஐன்டீனுடைய சார்பியல் தத்துவத்திலிருந்து பெறப்படும் அறிவியல் உண்மையாகும். ஒளியின் வேகத்தை மற்ற பொருளால் ஏன் மீற முடியாது? என்பதையும் அவர் விளக்கி யுள்ளார்.
பொருளின் பொருண்மைக்கும் அதன் வேகத்திற்கும் இடையில் ஒரு தொடர்பு உண்டு என நாம் முன்னர் கூறினோம். ஸஐன்டீன் அவர்களின் புகழ்பெற்ற சமன்பாடாம் E=MC2(ஆற்றல் = பொருண்மைஒவேகம்ஒவேகம்) இந்த உறவைக் காட்டுகிறது எனவே எந்த ஒரு பொருளாவது அதன் பயண வேகம் ஒளியின் வேகத்தில் 10 சதவீதத்தை அடைந்தால் அதன் பொருண்மை 0.5 சதவீதம் அதிகமாகி விடும். பொருண்மை என்பது நகர்வுக்கு எதிரான தடையாகும் என முன்னர் கூறியுள்ளோம். எனவே ஒரு பொருளின் பொருண்மை கூடும்போது அதை நகர்த்துவதற்கு செலுத்தப் படும் ஆற்றலும் கூட வேண்டும்.
இப்போது அப்பொருள் ஒளியின் வேகத்தில் 90 சத வீதத்தை அடைந்து விட்டால் அப்பொருளின் பொருண்மை இருமடங்காகிவிடும். ஆனால் அதற்கு மேல் அப்பொருளின் வேகம் கூடும்போது அப்பொருளின் பொருண்மை கட்டுக் கடங்காமல் சரமாரியாக உயர்ந்து கொண்டே சென்று அப்பொருள் ஒளியின் வேகத்தை அடையும்போது அதன் பொருண்மை அளவற்றதாகி (Infinite) விடும். இப்பேரண்டத் தின் மொத்த ஆற்றலை ஒருங் கிணைத்தாலும் ஒரு பொருளை ஒளியின் வேகத்தை மீறச் செய்ய இயலாது என்பதே அதன் பொருளாகும்.
இப்போது திருக்குர்ஆன் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டுவதற்கு ஆற்றலின் பெயரை அழுத்தமாகக் கூறியதன் அர்த்தமும் பேரண்டத்தின் எல்லைத் தாண்டிப் பார்க்க அழைப்பு விடுத்ததில் ஒரு சவாலின் சுவை இருந்ததும் ஏன் என்பது மிக அழகாக இப்போது விளங்குகிறதன்றோ? ஆம்! அதுதான் அல்குர்ஆன்! மெய்யான இறைஞானத்தின் வெளிப்பாடு.
பெரும் சுருக்கம்!
நம் முன் இப்போதும் ஒரு வினா எஞ்சி நிற்கிறது. பழுதே நேராத விண்கலம், சாவே இல்லாத மனிதர்கள் என்பன போன்ற நடைமுறை சாத்தியமில்லாத வெறும் கற்பனை களை ஆதாரமாகக் கொண்டே எதிர்கால மனிதர்களாவது பேரண்டத்தின் எல்லையைத் தாண்டிச் செல்ல முடியுமா என விவாதித்தோம். நடைமுறை சாத்தியமற்ற அந்தப் பட்டியலில் மற்றொன்றையும் இணைத்து திருக்குர்ஆனுடைய அறிவியல் ஆழத்தை மேலும் விளங்கிக் கொள்ள முயற்சிப் போம்.
எதிர்கால மனிதன் ஒளியின் வேகத்தை எப்படியோ அடைந்து விட்டான் என்பதே அந்த நடைமுறை சாத்தியமற்ற மற்றொரு கற்பனையாகும். இந்த நிலையில் அந்த மனிதர் களால் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டுவதில் என்ன பிரச்சனை என்பதே நம்முன் எஞ்சி நிற்கும் வினாவாகும். ஆனால் நாம் இதுவரை குறிப்பிடாத ஒரு பெரும் பிரச்சனை யில் அவர்கள் சிக்குண்டு விடுவதால் அப்போதும் அவர் களால் பேரண்டத்தின் எல்லையை தாண்டிப் போக இயலாத நிலையே ஏற்படும்!
ஐன்டீனுடைய பொது சார்பியல் கோட்பாட்டிற்கிசைய பார்க்கும்போது ஒரு பெருவெடிப்பு சிங்குலாரிட்டியிலிருந்து தோன்றிய இப்பேரண்டம் ஒரு “பெரும் சுருங்கு சிங்குலாரிட்டி (A Big Crunch) யில் (பேரண்டம் மொத்தமாக அழிந்தால்) அழிய வேண்டும். அல்லது கருங்குழியின் உட்பகுதியிலுள்ள சிங்குலாரிட்டியில் (Singularity Inside a Black Hole) அழிவது போன்று (அந்தந்தப் பகுதிகளாக அழிவுற்றால் நட்சத்திரத்தில் நிகழ்வது போன்று) அழிய வேண்டும் என ஐன்டீனுடைய பொது சார்பியல் கோட்பாட்டிலிருந்து ஹாக்கிங் அவர்கள் தீர்க்க தரிசனம் (Prediction) செய்துள்ளார்.
(பார்க்க : பக்கம் 121)
அறிவியலாளர் ஹக்கிங் தீர்க்க தரிசனம் செய்துள்ள இப்பேரண்டம் சந்திக்கப் போவதாகக் கூறப்படும் பெரும் சுருங்கு சிங்குலாரிட்டி என்பதன் பொருள் யாதெனில் நமது பேரண்டம் ஒரு பெருவெடிப்பிலிருந்து தோன்றிய விரிவாற்ற லால் இப்போதும் விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் காலம் செல்லச் செல்ல அந்த விரிவாற்றல் பேரண்டத்தின் ஈர்ப் பாற்றலை மிகைக்க இயலாத கட்டம் வரும்போது பேரண்டம் சுருங்க ஆரம்பித்து விடும் என்றும் கூறப்படுகிறது. பேரண்டம் சந்திக்கப் போகும் இந்த நிகழ்ச்சியும் சிங்குலாரிட்டி விதிப்படியே (நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளுக்கும் அன்னியமான விதத்தில்) நடைபெறும் என்றும் அவர் கூறுகிறார்.
கிட்டத்தட்ட இப்படிப்பட்ட நிகழ்ச்சியே ஒரு நட்சத்திரம் கருங்குழியாக மாறும் போதும் நடைபெறும். ஆயினும் அந்த நிலைமை ஆயிரம் கோடி வருடங்களுக்குள் நடைபெற முடியாது என்பதையும் அவர் கூறியதை முதல் தொகுதியில் கண் டோம். அதே நேரத்தில் திருக்குர்ஆனுடைய கணித சமன் பாட்டிலிருந்து பேரண்டத்தின் அழிவு நூற்றாண்டு களுக்குட்பட்டதாகும் என நாம் விளக்கம் கண்டதையும் நினைவிற்கொள்க!
இப்போது பேரண்டத்தின் அழிவு கட்டம் என்பதே பேரண்டத்தின் சுருங்கு முகம் அல்லது பெரும் சுருக்கம் (Contracting Phase or Big Crunch) எனக் கூறப்படுகிறது. ஹாக்கிங் கூறினார் போன்று ஆயிரம் கோடி வருடங்களுக்குள் அது நடைபெறவில்லை என வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதே அதன் பொருளாகும். எனவே பேரண்டத்தின் எல்லையைத் தாண்டிச் செல்வதற்காகப் பயணம் செய்யும் விண்கலம் இப்பேரண்டத்தின் சுருங்கு முகம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அதன் எல்லையைக் கடக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனையாகும்.
இந்த நிலையில் அந்த விண்கலம் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தாலாவது பேரண்டத்தின் சுருங்கு முகம் ஆரம்பமாவ தற்கு முன் அதன் எல்லையைத் தாண்டிவிட முடியுமா எனக் கேட்டால் `முடியாது என்பதே பதிலாகும். விளக்கம் தேவையில்லாத அளவிற்கு பேரண்டத்தின் தற்போதைய பரப்பளவே அவ்வளவு பிரமாண்டமானதாகும்.
இயற்கை விதிகள் மனிதனுடைய விருப்பத்திற்கிசைய வளைந்து கொடுத்தாலன்றி வேறு வார்த்தைகளில் கூறினால் இயற்கை விதிகளை தன் விருப்பப்படி ஆட்டுவிக்கும் அதிகாரம் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தாலன்றி பேரண்டத் தின் எல்லையைத் தாண்டும் ஆற்றலை அவன் ஒருபோதும் பெறப்போவதில்லை என்பது திண்ணம். அந்த அதிகாரம் அவனுக்குக் கிடைக்கப் போவதுமில்லை. அவன் பேரண்டத் தின் எல்லையைத் தாண்டப் போவதும் இல்லை. ஆயிரம் கோடி வருடங்களுக்குள் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டிவிட முடியாமல் போகவே விரைவி லேயே அவன் பேரண்டத்தின் சுருங்கு முகத்திற்குள் அகப்பட்டு விடுவான். இதன் விளைவாக காலம் முன்னோக்கி நகராமல் பின்னோக்கி நகரத் துவங்கும்.
இச்சூழ்நிலையில் எந்த நபராலும் அவரது வாகனத்தாலும் மேலும் முன்னோக்கிப் பயம் செய்ய இயலாமல் போவதோடு சுருங்கிவரும் பேரண்டம் அந்த நபரையும் அவரது வாகனத்தையும் படிப்படியாகச் சுருங்கி வரச் செய்து கடைசியில் எல்லையற்ற அடர்த்திக்குள் (சிங்குலாரிட்டிக்குள்) நுழையச் செய்து விடும். எனவே பேரண்டத்தைத் தாண்டிப் போகும் முயற்சி அந்த நபரை பேரண்டத்தில் முற்றிலுமாகக் கரைந்து போகச் செய்யுமே அன்றி பேரண்டத்திலிருந்து தப்பிச் செல்ல ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
அறிவியல் பூர்வமான எச்சரிக்கை
வானத்தின் எல்லையைத் தாண்டிப்போகும் ஆற்றலை மனிதன் ஒருபோதும் பெறப்போவதில்லை எனும் கருத் துணர்ந்த திருமறை வசனத்தின் வாயிலாக திருக்குர்ஆன் மனித குலத்தை எச்சரிக்கை செய்ய விரும்பும் கருத்து என்னவென்று பார்ப்போம். திருமறையின் குறிப்பிட்ட வசனத்திற்கு முன் பின் வசனங்களைக் கவனமாகப் பார்வை யிட்டால் இறைவனுடைய விசாரணையிலிருந்து மனிதன் தப்ப முடியாது என்பதற்கு ஆதாரமாகவே அச்செய்தி கூறப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
இறைவனுடைய கட்டளைக்கு வார்த்தைக்கு வார்த்தை அடிபணிந்து கொண்டிருக்கும் இப்பேரண்டத்திலிருந்தும் அதை ஆண்டு கொண்டிருக்கும் இயற்கை விதிகளிலிருந்தும் ஒருபோதும் தப்பிச் செல்ல இயலாத மனிதன் அவைகளின் மீதுள்ள அனைத்து அதிகாரத்தையும் தன் கையில் வைத்துள்ள இறைவனின் விசாரணையிலிருந்து மட்டும் எவ்வாறு தப்பிச் செல்ல முடியும் என மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவதாகவே அந்த வசனம் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. அவ்வசனத் தைக் கூறிய அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
இந்த அத்தியாயத்தில் நாம் விவாதித்த விபரங்களில் இருந்து திருக்குர்ஆனின் அறிவியல் ஞானம் எவ்வளவு ஆழமானது என்பதை ஓரளவு விளங்கிக் கொண்டோம். இவ்வளவு ஆழமான அறிவியல் உண்மைகள் குறிப்பாக விண்வெளிப் பயணம் கூட ஆற்றலைப் பயன்படுத்திச் செல்ல முடியும் என்றும் ஆயினும் அந்த விண்வெளிப் பயண வேகம் ஒளியின் வேகத்தை எட்ட முடியாதபடிச் செய்யும் இயற்பியல் விதிகள் இப்பேரண்டத்தை ஆண்டு கொண்டிருக் கிறது என்பதும் திருக்குர்ஆனுக்கு ஏழாம் நூற்றாண்டிலேயே தெரிந்திருந்தது எனில் அது எப்படி சாத்தியமாயிற்று? திருக்குர்ஆன் மனித அறிவிலிருந்து தோன்றியது என்று இன்னுமா நம்புவீர்கள்?
ஆகாயத்தின் கட்டுமானப் பொருட்கள்
முந்தைய அத்தியாயத்தில் வானம் எந்தப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல் விஞ்ஞானிகள் ஒரு கட்டத்தில் தடுமாறிக் கொண் டிருந்ததையும், அந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஆகாயம் ஈதர் எனும் ஒரு விந்தைப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது எனும் ஒரு கருதுகோளை உருவாக்கியதையும் கண்டோம். இக்கருதுகோள் திருக்குர்ஆனின் அறிவியலுக்கு முரணாக இருந்ததையும் பிற்பாடு நடைபெற்ற அறிவியல் ஆய்வுகளில் ஈதர் என்பது வெறும் கற்பனையே அன்றி அது உண்மையில்லை என்றும் அறிவியல் உலகம் நிரூபித்து விட்டதையும் கண்டோம்.
மேலும் திருக்குர்ஆனைப் பொருத்தவரை ஆகாயம் ஆற்றலால் உருவாக்கப்பட்டதாகும் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவதையும் முன் அத்தியாயத்தில் பார்த்தோம். எனவே ஆகாயத்தைக் குறித்து திருக்குர்ஆன் கூறும் அறிவியல் நவீன அறிவியல் உலகில் எந்த அளவு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
வானம் எனும் கருத்துருவம்
நாம் நமது பேச்சு வழக்கில் ஆகாயம், வானம், விண்ணகம், பேரண்டம் போன்ற பதங்களைப் பொருள் பேத மின்றிப் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் பேரண்டம் (Universe) என்று கூறும்போது விண்ணகப் பொருட்களையும் அவைகளைச் சூழ்ந்திருக்கும் அவற்றின் வாழ்விடத்தையும் குறிப்பதாகும். ஆனால் ஆகாயம், விண்ணகம், வானம் (Sky, Firmament, Heaven) போன்ற சொற்களைப் பொதுவாக பூமிக்கப்பால் இருக்கின்றவைகளை மொத்தமாகக் குறிப்ப தற்காகப் பயன்படுத்தினாலும் குறிப்பாகச் சுட்டுவது விண்ணகப் பொருட்களைச் சூழ்ந்துள்ள அதன் வாழ்விட மாகும்.
இதையே நாம் அண்டவெளி (Space) என்றும் அழைக் கின்றோம். இப்போது திருக்குர்ஆன் “வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்துள்ளோம் (அல்குர்ஆன்: 51:47) ➚ என்று கூறும்போது குறிப்பாகச் சுட்டுவது விண்ணகப் பொருட் களைச் சூழ்ந்துள்ள அவைகளின் வாழ்விடத்தையே ஆகும். திருக்குர்ஆனுடைய இக்கூற்று உண்மையே எனில் அதற்குரிய ஆதாரங்கள் யாவை என்பதையே நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
ஆகாயம் என்பது ஒன்றுமில்லாத வெற்று (சூன்ய) வெளியில்லை. அது ஆற்றல் நிறைந்த அண்டவெளியாகும் என்பதை நாம் இப்போது அறிவியல் வாயிலாக மட்டுமின்றி அனுபவபூர்வமாகவே அறிந்து வருகிறோம். ஏனெனில் அந்த ஆற்றல்களைப் பற்பல விதத்தில் நாம் நமது உபயோகத் திற்காகப் பயன்படுத்தி வருகிறோம்.
தொலைபேசியிலிருந்து தொலைகாட்சி வரை; நீராவி இயந்திரத்திலிருந்து விண்வெளிக் கலங்கள் வரை; மின் விளக்கிலிருந்து மின்சார இரயில்கள் வரை; அணுமின் நிலையங் களிலிருந்து அணுகுண்டுகள் வரை ஆயிரக் கணக்கான பயன்பாடுகளை நாம் இப்பேரண்டத்தில் பரவிக் கிடக்கும் ஆற்றல்களிலிருந்து பெற்று வருகிறோம். நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல்கள் யாவும் கல்தோன்றி முள் தோன்றா காலம் முதல் இப்பேரண்டத்தில் இருந்து வருகின்றன. இந்த ஆற்றல்கள் இல்லையெனில் பேரண்டமே இல்லை. இப் பேரண்டத்தை ஒரு சீரான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு குழுவாக இயங்கச் செய்வதும் இந்த ஆற்றல்களே யாகும். இந்த ஆற்றல்களின் இயங்குதளமே ஆகாயமாகும்.
ஒரு பிரமாண்டமான பேருருவமாக ஆகாயம் இயங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் அதன் அமைப்பை முழுமை யாக நமது அறிவியலாளர்களால் இப்போதும் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆயினும் ஆகாயம் ஆற்றலால் உருவாகி யுள்ள விண்ணகப் பொருட்களின் இயங்குதளமாகும் என்பதும் அந்த ஆற்றல்கள் பற்பல விதங்களில் காணப்பட்ட போதிலும் அவை ஆதாரமாக நான்கு சக்திகளாகும் எனும் முடிவுக்கு வர அவர்களால் சாத்தியமாகியுள்ளது.
வானத்தின் கட்டுமானப் பொருட்கள்
விண்ணகத்தை உருவாக்கியுள்ள இந்த நான்கு ஆதார சக்திகளாவன : 1. பேரண்டத்தின் ஈர்ப்பு விசை (The Universal Gravitation)2. மின்காந்த விசை (The Electromagnetic Force) 3.வலுவான அணுக்கரு விசை (The Heavy Nuclear Force)4. இலகுவான அணுக்கரு விசை (The Weak Nuclear Force) என்பனவாகும். இந்த நான்கு ஆதார சக்திகளில் ஈர்ப்பாற்றலே மிகவும் வலுவற்றதாகும். ஆயினும் இது மட்டுமே தொலை வான இடங்களுக்குப் பரவும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
இதைப் போன்று ஈர்ப்பு விசையானது மற்ற மூன்று விதமான விசைகளிலிருந்தும் வேறுபடும் அதனுடைய மற்றொரு அம்சம் அது எப்போதுமே ஈர்க்குமேயன்றி ஒருபோதும் விலக்கும் விசையாகச் செயல்படாது என்பதாகும். இப் புத்தகத்தில் பற்பல இடங்களில் ஈர்ப்பு விசையைப் பற்றி விரிவாகப் பார்த்து விட்டதால் மற்ற மூன்று ஆற்றல்களைக் குறித்து சுருக்கமாகக் காண்போம்.
அண்டவெளியை உருவாக்கியிருக்கும் ஆதார சக்தி களில் அடுத்ததாக வருவது மின்காந்த விசையாகும். இந்த விசையை 1870ல் இங்கிலாந்து தேசத்து கணிதவியல் அறிஞரான(Mathematician) ஜேம் கிளார்க் மாக்வல் (James Clerk Maxwel) என்பவரே அறிமுகப்படுத்தியவராவார். இதைப் பற்றி ஹாக்கிங் கீழ்ண்டவாறு கூறுகிறார்.
“அடுத்து வருவது மின்னேற்றம் உள்ள துகள்களுக் கிடையில் செயல்படும் எலக்ட்ரான் மற்றும் குவார்க்கைப் (Quarks) போன்றதும் ஆனால் மின்னேற்றம் இல்லாத ஈர்ப்பணுவைப்(Graviton) போன்று அல்லாததுமான மின்காந்த விசையாகும். இது புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் பெரும் ஆற்றல் கொண்டதாகும். இரண்டு எலக்ட்ரான்களுக்கு இடையிலுள்ள மின்காந்த விசையானது ஈர்ப்பு விசையைக் காட்டிலும் ஒரு தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச (ஒன்றுக்குப் பின் நாற்பத்து இரண்டு சைபர்கள் கொண்ட எண்) மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகும்.
இருந்த போதிலும் அதில் நேர் மின்னேற்றம், எதிர் மின்னேற்றம் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டு நேர் மின்னேற்றங்களுக்கு இடையிலுள்ள விசையும் இரு எதிர் மின்னேற்றங்களுக்கு இடையிலுள்ள விசையும் விலக்கும் விசையாகவும் (Repulsive) ஆனால் நேர் மற்றும் எதிர் மின்னேற்றங்களுக்கு இடையிலுள்ள விசை ஈர்க்கும் (Attractive) விசை ஆகவும் இருக்கிறது. (பார்க்க : பக்கம் 75)
ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட மேற்கோளிலிருந்து மின்காந்த விசை எந்த அளவிற்கு அபாரமான ஆற்றல் கொண்டது என்பது நன்கு புலனாகிறது. இந்த விசை அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை அணுவின் மையக் கருவை ஒளி வேகத்தில் சுற்றி வரச் செய்கிறது. இது ஈர்ப்பாற்றல் கிரகங்களை சூரியனைச் சுற்றி வரச் செய்வதற்கு ஒப்பானதாகும். இருப்பினும் மின்காந்த விசையானது ஒரே ஒரு வினாடி நேரத்தில் எலக்ட்ரான்களை நூறு கோடி கோடி (ஒன்றுக்குப் பின் பதினாறு சைபர்கள் கொண்ட எண்ணின் மதிப்பு) முறை அணுவின் மையக் கருவைச் சுற்றிச் சுற்றி வரும்படி செய்கிறது. எனவே இந்த விசையானது சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி யில் செயல்படும் சூரியனின் ஈர்ப்புவிசையைப் போன்று அணுக்கருவுக்கும் எலக்ட்ரான்களுக்கும் இடையிலுள்ள இடைவெளியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
மேற்கண்ட விபரங்களிலிருந்து மின்காந்த விசை இல்லாதிருந்தால் அணுக்கள் அதன் மையத்திலிருந்து சிதறிப் போய்விடும் என்பது எளிதாகப் புலனாகிறது. அணுக்களே பொருட்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். எனவே அணுக்கள் இல்லையேல் பொருட்கள் இல்லை. பொருட்களில்லையேல் வானமோ, வானகப் பொருட்களோ இல்லை. நவீன அறிவியல் உலகம் இந்த விசையின் துணையால் வானொலி, தொலைக் காட்சி மற்றும் ராடார் போன்றவைகளை உருவாக்கியது.
இதற்கடுத்தாற்போன்று வருவது இலேசான அணுக் கருவிசை மற்றும் வலுவான அணுக்கரு விசை என்பவை களாகும். இவைகளும் அணுக்கருவிற்குள் செயல்படும் விசைகளாகும். இவைகளில் இலேசான அணுக்கருவிசை என்பது அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை அணுவை விட்டு தப்பிச் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. எலக்ட்ரான்கள் யாவும் எதிர் மின்னோட்டம் கொண்டவை என நாம் முன்னர் கண்டோம். எதிர் மின்னோட்டம் கொண்ட துகள்கள் ஒன்றையொன்று விலக்கும். அணுவிற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட எதிர் மின்னேற்றத் துகள்களாம் எலக்ட்ரான்கள் இருக்கும்போது அவைகளுக்கிடையில் இருக்கின்ற விலக்கும் விசையால் எலக்ட்ரான்கள் அணுவை விட்டு தப்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இலேசான அணுக்கரு விசையே இதைத் தடுத்து நிறுத்துகிறது.
நான்காவதாக வருவது வலுவான அணுக்கரு விசை யாகும். இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலகட்டம் வரை அணுவிற்குள் இருக்கும் ப்ரோட்டான் மற்றும் நியூட்ரான் எனும் துகள்கள் அடிப்படைத் துகள்களாகும் (Elementary Particles) என்றும், அவைகளைப் பிரிக்க முடியாது என்றும் நம்பி வந்தனர். ஆனால் அவைகள் அடிப்படைத் துகள்கள் இல்லையென்றும், அவை “குவார்க்குகள் (Quarks) எனும் துகள் களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் 1969ல் முர்ரே ஜெல்மன் எனும் இயற்பியலாளர் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றார். இந்த குவார்க்குகள் நேர் மின்னேற்றம் கொண்ட துகள்களாகும். இவைகளே அணுவிற்குள் இருக் கும் புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகியவைகளுக்கே அடிப்படைத் துகள்களாக விளங்குகின்றன.
குவார்க்குகள் குறைந்தபட்சம் ஆறு சுவைகளிலும் (Flavour) முன்று வர்ணங்களிலும் இருப்பதாகக் கருதப் படுகின்றன. (சுவை, வர்ணம் போன்றவை குவார்க்குகளை வேறுபடுத்துவதற்காக வைக்கப்படும் பெயர்களே தவிர அவைகளுக்கு சுவையோ வர்ணமோ உண்டு என்பது இதன் பொருளில்லை) அதன் சுவைகளாவன : அப், டௌன்,ட்ரேஞ்ச், சார்ம்டு, பாட்டம் மற்றும் டாப் (Up, Down, Strange, Charmed, Bottom and Top)இவைகளில் ஒவ்வொன்றும் சிவப்பு, பச்சை, நீலம் என முன்று வர்ணங்களிலும் இருக்கின்றன.
இரண்டு `அப் மற்றும் ஒரு `டௌன் குவர்க்குகள் இணைந்தால் வருவது ஒரு புரோட்டான் ஆகும். இதையே தலைகீழாகத் திருப்பினால் (இரண்டு டௌன் மற்றும் ஒரு அப்) அதிலிருந்து தோன்றுவது ஒரு நியூட்ரான் ஆகும். இதிலிருந்து புரோட்டானாயினும் நியூட்ரானாயினும் அவை களுக்குள் இருப்பது குவார்க்குகள் ஆகும் என்பதும் அந்த குவார்க்குகள் நேர் மின்னேற்றம் கொண்டவை என்பதும் நாம் தெரிந்து கொண்டோம். நேர்மின்னேற்றம் கொண்ட துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்பதால் குவார்க்குகள் ஒன்றை ஒன்று விலக்கி புரோட்டானிலிருந்தும், நியூட்ரானிலிருந்தும் வெளியேறிவிடாமல் தடுத்துக்கொண்டிருப்பது கனமான அணுக்கரு விசையாகும்.
பேரண்டத்தில் இம்மி அளவு இடம் கூட விட்டு விடாமல் மொத்த இடத்தையும் – அணுவிற்குள் இருக்கும் இடத்திலும் கூட இந்த நான்கு ஆதார சக்திகளே நிறைந்துள்ளது. எனவே இந்த ஆற்றல்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் வானமும் இருக்கிறது. எங்கெல்லாம் அவை இல்லையோ அங்கெல்லாம் வானமும் இல்லை. இதிலிருந்து நமது அறிவியல் உலகம் இதுவரை சேகரித்திருக்கும் அறிவியல் விபரங்கள்“வானத்தை நாம் வல்லமை கொண்டு படைத்தோம் எனக் கூறிய திருக்குர்ஆனின் அறிவியலை முற்றிலும் உண்மைப்படுத்துகிறது என்பதை ஐயத்திற்கிட மின்றித் தெரிந்து கொண்டோம்.
ஆற்றலின் அழிவின்மை விதி
பொதுவாக நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் பல செய்திகளில் மறைந்திருக்கும் அறிவியல் பிழைகளை நாம் கண்டு கொள்வதில்லை. அவைகளைக் கண்டுகொள்ளத் துவங்கினால் நம்மால் பிறகு பேசவே இயலாத நிலை ஏற்பட்டு விடும். சான்றாக நாம் நீர்வீழ்ச்சி, கல்கரி, அணுஉலை போன்றவற்றிலிருந்து மின்சார ஆற்றலை உருவாக்குவதாகக் கூறுகிறோம். ஆனால் இயற்பியலின் ஆழங்களுக்கு இறங்கிச் சென்று `ஆற்றல் என்பதன் இலக்கணத்தைக் கண்டறிந்த மாமேதை ஐன்டீன் ஆற்றல் நம்மால் ஒருபோதும் உருவாக்க முடியாது என்று கூறுகிறார். அவர் கண்டுபிடித்த ஆற்றலின் அழிவின்மை விதி (The Law of Conservaton of Energy) கீழ்கண்டவாறு கூறுகிறது.
“Enegy Can Never be Created Nor Destroyed but only Transformed ஆற்றலை ஒருபோதும் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆனால் மாற்றி அமைக்கவே முடியும்.
மேற்கண்ட அறிவியல் பிரகடனம் ஆற்றலை நாம் ஒருபோதும் உருவாக்க முடியாது என்று கூறும்போது, நாம் கல்கரியிலிருந்தும் இன்னபிற பொருட்களிலிருந்தும் (அவை களை எரித்து) வெப்பதை உருவாக்குகிறோமே (வெப்பம் என்பது ஆற்றலாகும் என்பதைக் கருத்தில் கொள்க) இது எப்படி என்ற கேள்வி எழலாம். ஆனால் கல்கரியிலிருந்தோ இன்னபிற பொருட்களிலிருந்தோ நாம் வெப்பத்தை உருவாக்கவில்லை. அதற்கு மாறாக அப்பொருட்களை நாம் வெப்பமாக மாற்றி அமைக்கவே செய்கிறோம் என்பதே உண்மையாகும். கல்கரி எனும் பொருள் வெப்பம் எனும் ஆற்றலாக மாறியது போன்றே ஆற்றல் பொருளாகவும் மாற முடியும் என்பது ஐன்டீன் அவர்கள் கூறிய மேற்கண்ட விதியின் பொருளாகும்.
ஆற்றலில் தோன்றும் பொருட்கள்
இப்போது மேற்கண்ட விதிக்கு இசையப் பார்த்தால் பெருவெடிப்பு நிகழ்ந்த மைக்ரோ கணத்தில் அதிலிருந்து வெளிப்பட்ட ஆற்றலே இன்று வானத்திலுள்ள பொருட்கள் அனைத்தையும் உருவாக்கியது எனில் “வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு உருவாக்கினோம் எனும் திருமறை வசனத்தை அது மேலும் ஆழமாக நிரூபிக்கவே செய்யும் என்பது திண்ணம். எனவே இதற்கான ஆதாரத்தைப் பார்ப்போம்.
நமது இம்மாபெரும் பேரண்டம் அதன் ஆரம்ப நாட்களில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரே ஒரு வினாடியிலும் மிக சொற்பமான நேரத்தில் இப்பேரண்டம் 1032 (ஒன்றுக்குப்பின் 32சைபர்கள் கொண்ட எண்ணின் மதிப்பு) மடங்கு உருப்பெருக்கம் செய்தது என அறிவியலாளர் `அலன்குத் கூறியதை முதல் தொகுதியில் கண்டோம். இந்த நிகழ்ச்சி`பொருட்திணிப்பு (Inflation) என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த பொருட்திணிப்பு என்ற கருத்தைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
“இந்த பொருட்திணிப்பு எனும் கருத்து (The Idia of Inflation) பேரண்டத்தில் ஏன் இவ்வளவு பொருட்கள் இருக்கின்றன என்பதையும் விளக்க முடிந்தது. பேரண்டத் தில் தோராயமாக பத்து தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச,தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்ச, தச இலட்சம் (ஒன்றுக்குப்பின் எண்பது சைபர்கள் கொண்டது) துகள்கள் நமது பார்வைத் திறனுக்கு எட்டிய வரை இருக்கின்றது. இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? இதற்குரிய பதில் குவாண்டம் கோட்பாட்டில் (Quantum Theory) துகள்கள் ஆற்றலிலிருந்து துகள்/எதிர்துகள்(Particle / Anti Particle) எனும் இணைகளாக இருவாகும் என்பதாகும்.
(பார்க்க : பக்கம் 136)
வானத்தின் கட்டுமானப் பொருட்களைக் கூறும்போது திருக்குர்ஆன் பருப் பொருட்களை(Corporeals) ஏன் விட்டு விட்டது என்பதற்குரிய அறிவியல் காரணம் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட மேற்கோளில் காணப்படுகிறது. வெறும் சூன்யத்திலிருந்து திடீரெனக் கிளம்பிய ஒரு அதிரடி வேட்டாம் பெருவெடிப்பிலிருந்து எவ்வாறு பல்லாயிரம் கோடானு கோடி கோடிக்கணக்கான பருப்பொருட்கள் அடிப்படைத் துகள்களிலிருந்து மாபெரும் நட்சத்திரங்கள் வரை தோன்றின எனும் கேள்விக்கு அவையாவும் பெரு வெடிப்பிலிருந்து தோன்றிய ஆற்றலிலிருந்து தோன்றி யவைகளே என்பதே ஹாக்கிங் அவர்களின் கூற்றாகும்.
எனவே அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் வானமாயினும் வானத்திலுள்ள பருப்பொருட்களாயினும் அவையாவும் ஆற்றலிலிருந்தே தோற்றுவிக்கப்பட்டது எனும் அறிவியல் “வானத்தை நாம் வல்லமை கொண்டு படைத் தோம் எனக் கூறிய திருக்குர்ஆனின் அறிவியலை எவ்வளவு அழகாக, ஆழமாக, அற்புதமாக நிரூபித்து நிற்கிறது!
அறிவியல் உலகின் மைல் கற்களாக விளங்கும் அரிய கண்டுபிடிப்புகள் எங்கு எப்போது நிகழ்ந்தாலும் அவை பொய்க்கலப்பற்ற உண்மைகளாக இருந்தால் அவை உடனே திருக்குர்ஆனை இறைவேதம் என நிரூபிக்கும் சிறந்த சான்றுகளாக தன்னை அர்ப்பணம் செய்து அம்மாமறையின் முன் தலைவணங்கி நிற்கின்றன. அதே நேரத்தில் அவற்றுள் ஏதேனும் ஒன்று தவறாக இருந்து விட்டால் அதனுடன் இவ்வான்மறை முரண்படுவதோடு அறிவியல் உலகம் காலம் கடந்தேனும் அது தவறான அனுமானமே எனக் கூறி அதைக் களைந்து விட்டு, அது குறித்து திருக்குர்ஆனின் அறிவியலையே ஏற்றுக்கொண்டு தன் பணியை செவ்வனே செய்து வருகிறது. அற்புதமன்றோ இது? இதற்கு நிகரான அற்புதம் வேறு எங்கேனும் உண்டா? அற்புதமென்றால் இஃதன்றோ அற்புதங்களுக்கெல்லாம் தலையாய அற்புதம்! இன்னுமா இம்மாமறை இறைவனின் வேதம் என்பதில் ஐயம் கொள்வீர்?
ஆற்றல்களின் ஒருங்கிணைப்பு
அறிவியல் உலகம் இப்போது மிகவும் ஆர்வத்துடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி முன்னர் கூறிய பேரண்டத் தின் நான்கு ஆதார சக்திகளுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரே ஒரு சக்தியே எனும் கண்டுபிடிப்பைப் பற்றிய அறிவிப்பு எங்கிருந்தேனும் வரக் கூடாதா என்பதாகும். ஏனெனில் இவ்வாறான ஒரு கண்டுபிடிப்பு பேரண்டத்தை மேலும் சிறந்த முறையில் விளங்கிக் கொள்ள அறிவியலாளர் களுக்கு பெரிதும் உதவி செய்வதாக இருக்கும்.
ஐன்டீன் அவர்கள் தமது இறுதிகாலத்தை இந்த ஆற்றல்கள் நான்கையும் ஒருங்கிணைப்பதில் செலவிட்டு தோற்றுப் போனார் என்பது வருந்தத்தக்கதே. இருப்பினும் இங்கிலாந் தின் இம்பீரியல் கல்லூரியின் `அப்துஸலாம் அவர்களும் ஹவார்டு பல்கலைக்கழகத்தின் டீவன் வீன்பர்க் அவர்களும் இணைந்து மின்காந்த விசையையும்,இலகுவான அணுக்கரு விசையையும் ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்று 1979ல் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.
நாற்பெரும் சக்திகளாக பேரண்டத்தை உருவாக்கிய “பேராற்றல்களின் ஒருங்கிணைந்த கோட்பாட்டை – ழு.ரு.கூ – ழுசயனே ருகைநைன கூநடிசல – உருவாக்குவதில் முட்டுக் கட்டையாக நின்றிருப்பது ஈர்ப்பு விசையாகும். இது ஐன்டீனிடமும் இணங்க மறுத்த ஆற்றலாகும். இருப்பினும் ஜி.யு.டி. யை வெற்றிகரமாக உருவாக்கும் தூரம் தொலை வானத்தி லில்லை என்பதே பெரும்பாலான அறிவியலாளர்களின் கணிப்பாகும். எதிர்காலத்தில் ஜி.யு.டி. சாத்தியமானால் அது திருக்குர்ஆன் கூறும் இறைமறையின் ஏகத்துவ கோட்பாட்டிற்கு மேலும் மெருகூட்டும் கண்டுபிடிப்பாகவே அமையும். எனவே நாமும் அந்த நாளை ஆவலுடன் காத்திருப்போம்.
வானம் ஒரு கூரை
திருக்குர்ஆனிலிருந்து நாம் வாசித்த ஒருசிறு வசனத் தின் ஒரு சிறு பகுதிக்கே திருக்குர்ஆனுடைய வேறு பல அறிவியல் வசனங்களின் துணையுடன் விளக்கமளித்து வந்தோம். இப்போது அந்த வசனத்தின் கடைசி பகுதியை நெருங்கி விட்டோம். அதற்குள் நுழையும் முன், மீண்டும் அந்த வசனத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். அது வருமாறு :“அல்லாஹ்வே உங்களுக்கு இந்த பூமியை வாழத் தகுந்த இடமாகவும் வானத்தை ஒரு கூரையாக வும் அமைத்தான்.
மேற்கண்ட திருமறை வசனத்தில் காணப்படும் பூமி மனிதனுக்கு வசிப்பிடமாக்கப்பட்டுள்ளது எனும் செய்தியில் அடங்கியுள்ள ஏராளமான அறிவியல்களையும், மேலும் ஆகாயம் என்பது வெறும் ஒரு வெற்று வெளியின் பெயரில்லை. உண்மையிலேயே அப்படி ஒன்று படைக்கப்பட்டுள்ளது என்ற அறிவியலையும் பார்த்து விட்டோம். ஆயினும் பூமியைப் பொருத்தவரை ஆகாயத்திற்கு ஒரு சிறப்பான பணியை அல்லாஹ் வழங்கியுள்ளதாக அவனது நூலாம் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயம் பூமிக்கு ஒரு கூரையாக அமைய வேண்டும் என்பதே அந்தப் பணியாகும். நாம் வீடுகளுக்குக் கூரைகளை அமைக்கிறோம்.
ஆனால் பூமிக்கு எதற்காக கூரை? பூமிக்குக் கூரை இல்லையென்றால் பூமிக்கும் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டா? அப்படிப்பட்ட வாய்ப்புகள் ஏதும் இல்லையென்றால் பூமிக்கு கூரை அமைக்கப்பட்டுள்ளதாக திருக்குர்ஆன் கூறியது ஏன்?எனவே திருக்குர்ஆன் கூறியது உண்மையாக இருக்க வேண்டுமாயின் கூரை இல்லாதிருந்தால் பூமிக்கு உண்மையிலேயே ஏதேனும் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருக்கவேண்டும் என்பது திண்ணம். ஆகவே அப்படிப்பட்ட தொல்லைகள் ஏதேனும் பூமிக்கு உண்டா எனப் பார்ப்போம்.