இறந்தால் எரித்துவிடுங்கள்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

இறந்தால் எரித்துவிடுங்கள்

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
كَانَ رَجُلٌ يُسْرِفُ عَلَى نَفْسِهِ فَلَمَّا حَضَرَهُ المَوْتُ قَالَ لِبَنِيهِ: إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي، ثُمَّ اطْحَنُونِي، ثُمَّ ذَرُّونِي فِي الرِّيحِ، فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ عَلَيَّ رَبِّي لَيُعَذِّبَنِّي عَذَابًا مَا عَذَّبَهُ أَحَدًا، فَلَمَّا مَاتَ فُعِلَ بِهِ ذَلِكَ، فَأَمَرَ اللَّهُ الأَرْضَ فَقَالَ: اجْمَعِي مَا فِيكِ مِنْهُ، فَفَعَلَتْ، فَإِذَا هُوَ قَائِمٌ، فَقَالَ: مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ؟ قَالَ: يَا رَبِّ خَشْيَتُكَ، فَغَفَرَ لَهُ ” وَقَالَ غَيْرُهُ: «مَخَافَتُكَ يَا رَبِّ»

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன் காலத்தில்) ஒருவர், வரம்பு மீறி (தீய செயல் புரிந்து) வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தன் மகன்களை அழைத்து, ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு, என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவிற்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்’ என்று கூறினார்.

அவர் இறந்துவிட்டபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே அல்லாஹ், பூமியை நோக்கி, ‘அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்று சேர்’ என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்றபோது அல்லாஹ், நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?’ என்று கேட்டான். அவர், ‘என் இறைவா! உன் அச்சம் தான் இப்படிச் செய்யும்படி என்னைத் தூண்டியது’ என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளித்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 3481)

எழுப்பப்படும் எதிர்கேள்வி: எரித்துவிட்டால் தண்டனை தர முடியாது என்ற நம்பிக்கை இறைவனின் வல்லமையை மறுப்பதாகும். மேலும்(புகாரி: 4974)ன் செய்திக்கு மாற்றமாக உள்ளது.