30) இறந்தவருக்காகச் செய்யும் துஆ

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்…………….. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

اَللّهُمَّ اغْفِرْ لِ ………..وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ

அல்லாஹும்மக்பி[F]ர் லி ………………. வர்ப[F]ஃ தரஜ(த்)தஹு பி[F]ல் மஹ்திய்யீன வஃக்லுப்[F] ஹு பீ[F] அகிபி(B]ஹி பி[F]ல் காபிரீன் வக்பி[F]ர் லனா வலஹு யாரப்ப(B]ல் ஆலமீன் வப்[F]ஸஹ் லஹு பீ[F] கப்(B]ரிஹி வநவ்விர் லஹு பீ[F]ஹி.

இதன் பொருள் :

இறைவா! ………………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

ஆதாரம்:(முஸ்லிம்: 1678, 1528)

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்மபி[F]ர் லஹு வர்ஹம்ஹு வஆபி[F]ஹி வபு[F] அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B]ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B]ல் அப்(B]யள மினத் தனஸி வ அப்(B]தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B]ல் கப்(B]ரி

இதன் பொருள் :

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!

(முஸ்லிம்: 1756, 1600)

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன்.

இதன் பொருள் :

இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.

ஆதாரம்:(முஸ்லிம்: 367)

அல்லது

اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَأَتَاكُمْ مَا تُوعَدُوْنَ غَدًا مُؤَجَّلُوْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் மூமினீன் வஅதா(க்)கும் மா தூஅதூன கதன் முஅஜ்ஜலூன வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன்.

(முஸ்லிம்: 1773, 1618)

அல்லது

اَلسَّلاَمُ عَلَى أَهْلِ الدّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَيَرْحَمُ اللّهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلاَحِقُوْنَ

அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் மூமினீன் வல் முஸ்லிமீன் வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல்முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B](க்)கும் லலாஹி(க்)கூன்.

இதன் பொருள் :

முஸ்லிம்களான மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நம்மில் முந்திச் சென்றவர்களுக்கும், பிந்தி வருவோருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.

ஆதாரம்:(முஸ்லிம்: 1774, 1619)

அல்லது

اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِينَْ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلاَحِقُوْنَ أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன வல் முஸ்லிமீன வ இன்னா இன்ஷா அல்லாஹு லலாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆபி[F]ய(த்)த

இதன் பொருள் :

முஸ்லிம்களான, மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் நல்லதை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.

ஆதாரம்:(முஸ்லிம்: 1775, 1620)