29) தும்மல் வந்தால்

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

தும்மல் வந்தால்

தும்மல் வந்தால் தும்மிய பின்

اَلْحَمْدُ للهِ

அல்ஹம்து லில்லாஹ்

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللهُ

யர்ஹமு(க்)கல்லாஹ்

எனக் கூற வேண்டும். இதன் பொருள் :

அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(B]ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்:(புகாரி: 6224)