இரவில் உணவைத் தவிர்த்தால் சீக்கிரம் முதுமை வருமா?

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

இரவில் உணவைத் தவிர்த்தால் சீக்கிரம் முதுமை வருமா?

இரவு உணவைத் தவிர்த்தால் சீக்கிரம் முதுமை வரும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

3355 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ السَّلَامِ ابْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهُ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَيْمُونٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: “لَا تَدَعُوا الْعَشَاءَ وَلَوْ بِكَفٍّ مِنْ تَمْرٍ، فَإِنَّ تَرْكَهُ يُهْرِمُ

இரவு உணவைத் தவிர்க்காதீர்கள். ஒரு கைப்பிடி பேரீச்சம்பழத்தையாவது எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவைத் தவிர்ப்பது முதுமையை ஏற்படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல்: இப்னுமாஜா

இதன் அறிவிப்பாளரான இப்ராஹீம் பின் அப்துஸ்ஸலாம் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் ஆவார். மேலும் மற்றொரு அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் மைமூன் என்பார் பலவீனமானவர் ஆவார்.

எனவே இது இடுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

இதே கருத்தில் திர்மிதியிலும் ஹதீஸ் உள்ளது.

سنن الترمذي 
1856 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَعْلَى الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ القُرَشِيُّ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عَلَّاقٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَشَّوْا وَلَوْ بِكَفٍّ مِنْ حَشَفٍ، فَإِنَّ تَرْكَ العَشَاءِ مَهْرَمَةٌ»: هَذَا حَدِيثٌ مُنْكَرٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ وَعَنْبَسَةُ يُضَعَّفُ فِي الحَدِيثِ وَعَبْدُ المَلِكِ بْنِ عَلَّاقٍ مَجْهُولٌ

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள திர்மிதி அவர்கள்  இது பொய்யென சந்தேகிக்கப்பட்ட ஹதீஸாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளரான அன்பஸா என்பார் ஹதீஸ் விஷயத்தில் பலவீனமானவர் என்றும் மற்றொரு அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் அல்லாக் என்பார் யாரென அறியப்படாதவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.