மஹ்தி தான் ஈஸா என்று ஹதீஸ் உள்ளதா?

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

மஹ்தி தான் ஈஸா என்று ஹதீஸ் உள்ளதா?

மஹ்தி என்பவர் ஈஸா பின் மர்யம் தான் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

லல் மஹ்திய்யு இல்லா ஈஸா என்ற இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமானதாகும். இட்டுக்கட்டப்பட்டதாகும்.

سنن ابن ماجه
4039 – حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ خَالِدٍ الْجَنَدِيُّ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ الْحَسَنِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: “لَا يَزْدَادُ الْأَمْرُ إِلَّا شِدَّةً، وَلَا الدُّنْيَا إِلَّا إِدْبَارًا، وَلَا النَّاسُ إِلَّا شُحًّا، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ، وَلَا الْمَهْدِيُّ إِلَّا عِيسَى ابْنُ مَرْيَمَ”
المستدرك على الصحيحين للحاكم
8363 – حَدَّثَنَا عِيسَى بْنُ زَيْدِ بْنِ عِيسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ، ثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنْبَأَ مُحَمَّدُ بْنُ خَالِدٍ الْجَنَدِيُّ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزْدَادُ الْأَمْرُ إِلَّا شِدَّةً، وَلَا الدِّينُ إِلَّا إِدْبَارًا، وَلَا النَّاسُ إِلَّا شُحًّا، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ، وَلَا مَهْدِيَّ إِلَّا عِيسَى ابْنُ مَرْيَمَ» قَالَ صَامِتُ بْنُ مُعَاذٍ: عَدَلْتُ إِلَى الْجَنَدِ مَسِيرَةَ يَوْمَيْنِ مِنْ صَنْعَاءَ، فَدَخَلْتُ عَلَى مُحَدِّثٍ لَهُمْ فَطَلَبْتُ هَذَا الْحَدِيثَ فَوَجَدْتُهُ عِنْدَهُ، عَنْ مُحَمَّدِ بْنِ خَالِدٍ الْجَنَدِيُّ، عَنْ أَبَانَ بْنِ أَبِي عَيَّاشٍ، عَنِ الْحَسَنِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، وَقَدْ رُوِيَ بَعْضُ هَذَا الْمَتْنِ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஹாகிம், இப்னு மாஜா உள்ளிட்ட பல நூல்களில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் தொடரில் அதிகமான பலவீனம் உள்ளதுடன் இதன் கருத்தும் தவறாக உள்ளதால் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் ஆகும்.

இந்த ஹதீஸ் இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் முஹம்மத் பின் காலித் அல் ஜுன்தீ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

மேலும் இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான ஹஸன் பஸரி தத்லீஸ் (தனது ஆசிரியரை இருட்டடிப்பு) செய்பவர் ஆவார்.

தத்லீஸ் பற்றி அறிய

தத்லீஸ் என்றால் என்ன?

இந்த ஹதீஸிலும் இருட்டடிப்பு உள்ளதால் மற்றொரு பலவீனமாகும்.

4284 – حدثنا أحمد بن إبراهيم ثنا عبد الله بن جعفر الرقي ثنا أبو المليح الحسن بن عمر عن زياد بن بيان عن علي بن نفيل عن سعيد بن المسيب عن أم سلمة قالت  : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ” المهدي من عترتي من ولد فاطمة ”    قال عبد الله بن جعفر وسمعت أبا المليح يثني على علي بن نفيل ويذكر منه صلاحا . قال الشيخ الألباني : صحيح سنن أبي داود]

மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவூத்

2230 – حدثنا عبيد بن أسباط بن محمد القرشي الكوفي قال حدثني أبي حدثنا سفيان الثوري عن عاصم بن بهدلة عن زر عن عبد الله قال : قال رسول الله صلى الله عليه و سلم لا تذهب الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يواطئ اسمه اسمي  قال أبو عيسى وفي الباب عن علي و أبي سعيد و أم سلمة و أبي هريرة وهذا حديث حسن صحيح  هذا حديث حسن صحيح قال الشيخ الألباني : حسن صحيح سنن الترمذي

அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி

மஹ்தீ என்பவர் ஃபாத்திமா வழித்தோன்றலில் வருவார் என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது. மஹ்தீ என்பது குறிப்பிட்ட நபரின் பெயராக இருக்கும் போது, அவர் ஃபாத்திமாவின் வழித்தோன்றல் என்று ஹதீஸ் இருக்கும் போது ஃபாதிமாவுக்கும் முந்திய மர்யம் (அலை) அவர்களின் மகனாகிய ஈஸா நபி கண்டிப்பாக மஹ்தியாக இருக்க முடியாது.

மேலும் மஹ்தியின் இயற்பெயர் அஹ்மத், என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.  ஈஸா நபியின் பெயர் அஹ்மத் அல்ல. எனவே இரண்டு நபர்களை ஒரு நபர் எனக் கூறும் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும் என்பதில் ஐயமில்லை.

அபூ நயீம், அபூ அம்ரு, முஸ்னத் ஷிஹாப், தாரீக் பக்தாத், தஹ்திபுல் கமால், இப்னு அஸாகிர் உள்ளிட்ட நூல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸிலும் இதே குறைபாடுகள் உள்ளன.