முஸாபஹா பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

முஸ்லிம்கள் சந்திக்கும்போது கைகொடுத்தால் பாவம் மன்னிக்கப்படுகின்றது என்ற கருத்தில் பல அறிவிப்புக்கள் வந்தாலும் அவை அனைத்தும் பலவீனமாக இருக்கின்றது.

 

பலவீனமான செய்தி 1

2652حَدَّثَنَا سُوَيْدٌ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ قَالَ لَا قَالَ أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ قَالَ لَا قَالَ أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ قَالَ نَعَمْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ رواه الترمذي

அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :  ஒருவர் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை அல்லது தன் நண்பனைச் சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டியணைத்து முத்தம் தரலாமா? என்று அவர்கள் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவருடையை கையைப் பிடித்து முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் (செய்யலாம்) என்றார்கள்.

நூல் : திர்மிதீ (2652)

இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஹன்ளலா பின் உபைதில்லாஹ் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.

இவர் குழப்பம் உள்ளவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். புகாரி, அஹ்மது பின் ஹம்பள், அபூ ஹாதிம், யஹ்யா பின் அல்கத்தான், இப்னு ஹிப்பான் ஆகியோர் இவரின் நினைவாற்றல் சரியில்லாத காரணத்தால் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 3 பக்கம் 62)

 

பலவீனமான செய்தி 2

11998حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ حَدَّثَنَا مَيْمُونٌ الْمَرَائِيُّ حَدَّثَنَا مَيْمُونُ بْنُ سِيَاهٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا وَلَا يُفَرِّقَ بَيْنَ أَيْدِيهِمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : அஹ்மது (11998)

இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து மைமூன் பின் சியாஹ் என்பவர் அறிவிக்கின்றார். இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு பேச்சுக்கு இவர் நம்பகமானவர் என்று முடிவு செய்தாலும் இவரிடமிருந்து அறிவிக்கும் மைமூன் என்பவர் யார் என்பதில் குழப்பம் உள்ளது. இவர் மைமூன் பின் மூசா என்று அறிவிப்பாளர் முஹம்மது பின் பக்ர் கூறுகிறார். இதற்கு மாற்றமாக இவர் மைமூன் பின் அஜ்லான் என்று அறிவிப்பாளர் யூசப் பின் யஃகூப் கூறுகிறார்.

مسند أبي يعلى ـ محقق – (7 / 165(

 4139 – حدثنا إبراهيم بن محمد بن عرعرة حدثنا يوسف بن يعقوب السدوسي حدثنا ميمون بن عجلان عن ميمون نبن سياه عن أنس بن مالك : عن النبي صلى الله عليه و سلم قال : ما من مسلمين التقيا فأخذ احدهما بيد صاحبه إلا كان حقا على الله أن يجيب دعاءهما و لا يرد أيديهما حتى يغفر لهما

மைமூன் பின் மூசா நம்பகமானவர். ஆனால் மைமூன் பின் அஜ்லான் என்பவரை நம்பகமானவர் என்று ஏற்கத்தக்க எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை.

எனவே இந்தச் செய்தியை நம்பகமானவர் அறிவித்தாரா? அல்லது நம்பகத்தன்மை அறியப்படாத மைமூன் பின் அஜ்லான் அறிவித்தாரா? என்பதில் குழப்பம் நிலவுவதால் இதை ஆதாரமாக ஏற்க முடியாது. இதுவும் பலவீனமான செய்தியாகும்.

 

பலவீனமான செய்தி 3

3706حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ أَبِي يَحْيَى الطَّوِيلِ رَجُلٌ مِنْ أَهْلُ الْكُوفَةِ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ رواه إبن ماجه

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் சந்தித்து பேசினால் அந்த நபர் திரும்பாதவரை நபி (ஸல்) அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். அவர்களிடம் கைகொடுத்தால் அந்த நபர் அவராகக் கையை விடும் வரை நபி (ஸல்) அவர்கள் தன் கையை எடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் முட்டுக்காலை மடக்கி அமர்பவர் யாரையும் பார்க்கவே முடியாது.

நூல் : இப்னு மாஜா (3706)

இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் ஹவாரீ அல்அம்மீ என்பவர் அறிவிக்கின்றார்.

இவரைப் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், அபூசுர்ஆ, நஸாயீ, அலீ பின் மதீனீ ,இஜ்லீ, அலீ இப்னு அதீ, இப்னு ஹிப்பான் மற்றும் பலர் கூறியுள்ளனர்.

மேலும் இந்த ஸைத் என்பாரிடமிருந்து இந்தச் செய்தியை அபூ யஹ்யா என்பவர் அறிவிக்கின்றார். இவரும் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், இப்னு ஹஜர் ஆகியோர் கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்புகள்

 

பலவீனமான செய்தி 4

2651حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ عَنْ الْأَجْلَحِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَقَ عَنْ الْبَرَاءِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ الْبَرَاءِ مِنْ غَيْرِ وَجْهٍ وَالْأَجْلَحُ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ الْكِنْدِيُّ الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  இரு முஸ்லிம்கள் சந்திந்து கைகொடுத்துக் கொண்டால் அவ்விருவரும் பிரிவதற்கு முன்பாக அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல் : திர்மிதீ (2651)

இந்தச் செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் இந்தச் செய்தியை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் வேலையைச் செய்யக்கூடியவர்.

இவர் பல நபித்தோழர்களைப் பார்க்காமலும், சந்திக்காமலும் உள்ள நிலையில் இடையில் உள்ள அறிவிப்பாளர்களைக் கூறாமல் அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டது போன்ற தோரணையில் அறிவிப்பார். இவரைப் போன்றவர்கள் நான் நேரடியாகக் கேட்டேன் என்று கூறினாலே இவரின் அறிவிப்புக்கள் ஏற்கப்படும்.

ஆனால் இவர் இந்தச் செய்தியில் தான் நேரடியாகக் கேட்டதைத் தெளிவுபடுத்தும் எந்த வாசகத்தையும் எந்த இடத்திலும் கூறவில்லை. இதன் காரணமாக இவருடைய இந்த அறிவிப்பு பலவீனமானதாகும்.

தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 8 பக்கம் 65)

 

பலவீனமான செய்தி 5

17854حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو بَلْجٍ يَحْيَى بْنُ أَبِي سُلَيْمٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْحَكَمِ عَلِيٌّ الْبَصْرِيُّ عَن أَبِي بَحْرٍ عَن الْبَرَاءِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ ثُمَّ حَمِدَ اللَّهَ تَفَرَّقَا لَيْسَ بَيْنَهُمَا خَطِيئَةٌ رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  முஸ்லிம்களில் இருவர் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தன் தோழரின் கையை பிடித்து அல்லாஹ்வை புகழ்வாரானால் அவ்விருவரும் தங்களிடத்தில் பாவம் இல்லாத நிலையிலேயே பிரிவார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல் : அஹ்மது (17854)

இந்தச் செய்தியை பராஉ (ரலி) அவர்களிடமிருந்து அபூ பஹ்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் யார்? இவருடைய நம்பகத்தன்மை எத்தகையது? ஆகிய விபரங்கள் எதையும் இவரைப் பற்றி எந்த அறிஞரும் கூறவில்லை. இதன் காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

 

பலவீனமான செய்தி 6

4535حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بَلْجٍ عَنْ زَيْدٍ أَبِي الْحَكَمِ الْعَنَزِيِّ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَغْفَرَاهُ غُفِرَ لَهُمَا رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது கைகொடுத்து அவ்விருவரும் மாண்பும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வை போற்றி பாவமன்னிப்புத் தேடினால் அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றது.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல் : அபூதாவுத் (4535)

இந்தச் செய்தியை பராஉ (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் அபீ ஷஃஸா என்பவர் அறிவிக்கிறார். இவர் நம்பகமானவர் என்று ஏற்கத்தகுந்த எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.

 

பலவீனமான செய்தி 7

17814حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي دَاوُدَ قَالَ لَقِيتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ فَسَلَّمَ عَلَيَّ وَأَخَذَ بِيَدِي وَضَحِكَ فِي وَجْهِي قَالَ تَدْرِي لِمَ فَعَلْتُ هَذَا بِكَ قَالَ قُلْتُ لَا أَدْرِي وَلَكِنْ لَا أَرَاكَ فَعَلْتَهُ إِلَّا لِخَيْرٍ قَالَ إِنَّهُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَعَلَ بِي مِثْلَ الَّذِي فَعَلْتُ بِكَ فَسَأَلَنِي فَقُلْتُ مِثْلَ الَّذِي قُلْتَ لِي فَقَالَ مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيُسَلِّمُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ وَيَأْخُذُ بِيَدِهِ لَا يَأْخُذُهُ إِلَّا لِلَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَفَرَّقَانِ حَتَّى يُغْفَرَ لَهُمَا رواه أحمد

நுபைஃ பின் ஹாரிஸ் கூறுகிறார் : நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் எனக்கு சலாம் சொல்லி எனது கையைப் பிடித்து என் முகத்தைப் பார்த்து சிரித்தார்கள். உங்களிடத்தில் நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் எனக்குத் தெரியாது. என்றாலும் நீங்கள் ஒரு நன்மைக்காகவே இதை செய்திருப்பீர்கள் என நான் கருதுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது நான் உன்னிடத்தில் நடந்துகொண்டவாறு அவர்கள் என்னிடத்தில் நடந்துகொண்டார்கள். மேலும் (இது பற்றி நான் ஏன் இவ்வாறு செய்தேன் தெரியுமா?) என்று கேட்டார்கள். நான் நீங்கள் என்னிடத்தில் கூறியவாறே அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழருக்கு சலாம் கூறி அவருடைய கையைப் பிடித்தால் அல்லாஹ்விற்காகவே இவ்வாறு செய்தால் அவ்விருரின் பாவங்களுக்கும் மன்னிக்கப்படாமல் அவ்விருவரும் பிரிந்து செல்வதில்லை என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மது (17814)

இந்தச் சம்பவத்தை அறிவிக்கும் நுஃபைஉ பின் ஹாரிஸ் என்ற அபூதாவுத் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார். இவரை பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். அம்ர் பின் அலீ, அபூ சுர்ஆ, அபூஹாதிம், புகாரி, திர்மிதீ, நஸாயீ, இப்னு ஹிப்பான், ஹாகிம், தாரமீ, இப்னு ஹஜர், தஹபீ ஆகிய அறிஞர்களும் கூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 10 பக்கம் 471)

 

பலவீனமான செய்தி 8

عمل اليوم والليلة  (193) أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الضَّحَّاكِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَنْجِرَ، ثنا عَمْرُو بْنُ عَاصِمٍ الْقَيْسِيُّ، ثنا عَمْرُو بْنُ حَمْزَةَ، ثنا الْمُنْذِرُ بْنُ ثَعْلَبَةَ، عَنْ يَزِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بِنِ الشِّخِّيرِ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: لَقِيتُ رَسُولَ اللَّهِفَصَافَحْتُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا مِنْ أَخْلاقِ الْعَجَمِ، أَوْ هَذَا يُكْرَهُ. فَقَالَ: “ إِنَّ الْمُسْلِمِينَ إِذَا الْتَقَيَا فَتَصَافَحَا وَتَكَاشَرَا بِوُدٍّ وَنَصِيحَةٍ، تَنَاثَرَتْ خَطَايَاهُمَا بَيْنَهُمَا

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து கைகொடுத்தேன். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே இது அரேபியர் அல்லாத அந்நியர்களின் வழக்கமா? இது வெறுக்கத்தகுந்த செயலா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து கைகொடுத்து அன்பையும் நல்லுபதேசத்தையும் பறிமாறிக் கொண்டால் அவ்விருவரின் பாவங்களும் நீங்கிவிடுகின்றது எனக் கூறினார்கள்.

நூல் : அமலுல் யவ்மி வல்லைலா (193)

இப்னு சன்னீ அவர்களின் நூலான அமலுல் யவ்மி வல்லைலா என்ற நூலில் இந்தச் செய்தி பதிவாகியுள்ளது.

இந்தச் செய்தியில் அம்ர் பின் ஹம்சா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் நம்பகமானவரா? பலவீனமானவரா? என்பது தெரியவில்லை என முஹம்மது பின் இஸ்ஹாக் கூறியுள்ளார். இவ்வாறே இப்னு ஹஜர் அவர்களும் கூறியுள்ளார்கள்.

இந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று உறுதி செய்யப்படாத காரணத்தால் இதுவும் பலவீனமான செய்தியாகும்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பு

 

பலவீனமான செய்தி 9

5838حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْحَارِثِيُّ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْبَيْلَمَانِيُّ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீ ஹஜ் செய்தவரைச் சந்தித்தால் அவருக்கு சலாம் சொல்லி அவரிடம் கை கொடு. அவர் தன் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக உனக்காக பாவமன்னிப்புத் தேடுமாறு அவரிடம் கூறு. ஏனென்றால் அவர் பாவம் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : அஹ்மது (5838)

இந்தச் செய்தியில் முஹம்மது பின் ஹாரிஸ் முஹம்மது பின் அப்திர் ரஹ்மான், அப்துர் ரஹ்மான் பின் அபீ ஸைத் ஆகிய மூவர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 6 பக்கம் 150)

எனவே இந்தச் செய்தி கடும் பலவீனம் உள்ள செய்தியாகும்.

 

தொடர்பு முறிந்த செய்தி 10

1413و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَطَاءِ بْنِ أَبِي مُسْلِمٍ عَبْدِ اللَّهِ الْخُرَاسَانِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَصَافَحُوا يَذْهَبْ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبْ الشَّحْنَاءُ رواه مالك

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒருவர் மற்றவருக்கு கைகொடுங்கள். குரோதம் நீங்கிவிடும்.

நூல் : முவத்தா (1413)

இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ பின் அபீ முஸ்லிம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழர் அல்ல. எனவே இவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் பலர் விடுபட்டுள்ளார்கள். விடுபட்ட நபர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்ற விபரம் தெரியாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பு

 

பலவீனமான செய்தி 11

2654حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ خَيْثَمَةَ عَنْ رَجُلٍ عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنْ تَمَامِ التَّحِيَّةِ الْأَخْذُ بِالْيَدِ رواه الترمذي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கை பிடிப்பதின் மூலமே வாழ்த்துச் சொல்வது பரிபூரணமாகின்றது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : திர்மிதீ (2654)

இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து ஒருமனிதர் அறிவிப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த மனிதர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என்ற விபரம் எதுவும் இல்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.

அபூதர் (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பு

 

பலவீனமான செய்தி 12

4538حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ يَعْنِي خَالِدَ بْنَ ذَكْوَانَ عَنْ أَيُّوبَ بْنِ بُشَيْرِ بْنِ كَعْبٍ الْعَدَوِيِّ عَنْ رَجُلٍ مِنْ عَنَزَةَ أَنَّهُ قَالَ لِأَبِي ذَرٍّ حَيْثُ سُيِّرَ مِنْ الشَّامِ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكَ عَنْ حَدِيثٍ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذًا أُخْبِرُكَ بِهِ إِلَّا أَنْ يَكُونَ سِرًّا قُلْتُ إِنَّهُ لَيْسَ بِسِرٍّ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَافِحُكُمْ إِذَا لَقِيتُمُوهُ قَالَ مَا لَقِيتُهُ قَطُّ إِلَّا صَافَحَنِي وَبَعَثَ إِلَيَّ ذَاتَ يَوْمٍ وَلَمْ أَكُنْ فِي أَهْلِي فَلَمَّا جِئْتُ أُخْبِرْتُ أَنَّهُ أَرْسَلَ لِي فَأَتَيْتُهُ وَهُوَ عَلَى سَرِيرِهِ فَالْتَزَمَنِي فَكَانَتْ تِلْكَ أَجْوَدَ وَأَجْوَدَ رواه أبو داود

அனஸா குலத்தைச் சார்ந்த ஒருவர் கூறுகிறார் : நான் அபூதர் (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் உங்களிடம் கைகொடுப்பார்களா? என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் என்னிடம் கைகொடுக்காமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்.             நூல் : அபூதாவுத் (4538)

இந்தச் செய்தியை அனஸா குலத்தைச் சார்ந்த ஒருவர் அறிவிக்கின்றார். அவர் யார்? எப்படிப்பட்டவர்? என்ற விபரம் இல்லாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும். இத்துடன் இந்த அறிவிப்பில் அய்யூப் பின் புஷைர் என்பாரும் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை.

அபூ உமாமா (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பு

 

பலவீனமான செய்தி 13

21207حَدَّثَنَا خَلَفُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ وَعَلِيُّ بْنُ إِسْحَاقَ أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ عَنِ الْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنْ تَمَامِ عِيَادَةِ الْمَرِيضِ أَنْ يَضَعَ أَحَدُكُمْ يَدَهُ عَلَى جَبْهَتِهِ أَوْ يَدِهِ فَيَسْأَلُهُ كَيْفَ هُوَ وَتَمَامُ تَحِيَّاتِكُمْ بَيْنَكُمْ الْمُصَافَحَةُ رواه أحمد

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் தன் கையை நோயாளியின் நெற்றியின் மீது அல்லது அவருடைய கையின் மீது வைத்து எப்படி இருக்கின்றீர் என்று கேட்பதே நோயாளியை பூரிபூரணமாக நலம் விசாரிக்கும் முறையாகும். உங்களுக்கிடையே கைகொடுப்பது பரிபூணரமாக வாழ்த்துச் சொல்லும் முறையாகும்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல் : அஹ்மது (21207)

இந்தச் செய்தியில் அலீ பின் யஸீத் என்வர் இடம்பெற்றுள்ளார். இவரை பலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். திர்மிதீ அவர்கள் இதைப் பதிவு செய்துவிட்டு இது வலுவான அறிவிப்பாளர் தொடர் இல்லை என்றும் இதில் இடம்பெறும் அலீ பின் யஸீத் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.                 

(திர்மிதீ: 2655)

இமாம் அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, அபூஹாதிம், புகாரி, திர்மிதீ, நஸாயீ, ஹாகிம், தாரகுத்னீ மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்

 (பாகம் 7 : பக்கம் : 397)

எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.

முஸ்லிம்கள் சந்திக்கும்போது கைகொடுத்தால் பாவம் மன்னிக்கப்படுகின்றது என்ற கருத்தில் பல அறிவிப்புக்கள் வந்தாலும் அவை அனைத்தும் பலவீனமாக இருக்கின்றது.