ஹஜ்ஜின்போது வியாபாரம் செய்யலாமா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
ஹஜ்ஜின்போது வியாபாரம்
2:198 لَيْسَ عَلَيْکُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّکُمْؕ فَاِذَآ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْکُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَـرَامِ وَاذْکُرُوْهُ کَمَا هَدٰٮکُمْۚ وَاِنْ کُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآ لِّيْنَ
(ஹஜ்ஜின்போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும்போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.
(அல்குர்ஆன்: 2:198) ➚.)
1770 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ : قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : كَانَ ذُو الْمَجَازِ، وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ، حَتَّى نَزَلَتْ ( لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ فِي مَوَاسِمِ الْحَجِّ ) .
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். அவ்வியாபாரத் தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது ‘(ஹஜ்ஜின் போது) உங்களுடைய இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்களின் மீது குற்றமாகாது’ என்ற (02:198) வது வசனம் அருளப்பட்டது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கிறது.
ஹஜ்ஜுக்காகச் செல்பவர் தனது ஊரிலிருந்து வியாபாரப் பொருட்களை எடுத்துச் சென்று மக்காவில் விற்பதோ, அங்கிருந்து பொருட்களை வாங்கி வந்து இங்கே விற்பதோ குற்றமில்லை; இறையச்சத்துக்கு எதிரானதும் அல்ல. அதே சமயம் இது ஹஜ்ஜின் கிரியைகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.