கிரகணத் தொழுகை குறித்து முன்னரே அறிவிப்பது நபிவழியா?
தொழில் நுட்பம் வளர்ந்த்திருக்கும் இந்தக் காலத்தில் போல் 1400 வருடங்களுக்கு முன்னர் சூரிய சந்திர கிரகணங்கள் நிகழப் போவதாக போவதாக யாரும் முன்னறிவிப்புச் செய்யவில்லை.ரசூலுல்லாஹ் கிரகணத் தொழுகை தொழுதிருந்தால் ஏதேச்சையாகத் தான் அந்த நிகழ்வைக் கண்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில், தனியாகத் தொழுதிருப்பார்கள் அல்லது பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து கூட்டாகத் தொழுதிருப்பார்கள்.
நிச்சயமாக சூரிய சந்திர கிரகண நிழ்வுகளை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்க மாட்டார்கள். சூரிய கிரகணமாயிருந்தால் அது சுமர் 70 வீதம் திடீரென இருளடைந்தால் தான் அது சூரிய கிரகணம் என்பதை எங்களால் உணரக் கூடியதாயிருக்கும். அப்படியில்லாத போது இன்றைய வானியலாளர்கள் சொல்லாவிட்டால் அது எங்களுக்கு வெறும் மழையிருட்டுத்தான்.அதேபோல் சந்திர கிரகனம் நிகழப் போவதாக இன்றைய விஞ்ஞானம் முன்னறிவிப்புச் செய்த பிறகு அதற்கான ஆயத்தங்களில் இன்று ஈடுபடுவதைப் போல் அக்காலத்தில் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமலேயே நடுநிசியில் தூங்கும் நேரத்தில் சந்திர கிரகணத்திற்காகக் மக்கள் காத்திருந்திருப்பார்களா?
நீங்கள் சொல்வது போல் தான் தற்செயலாகவே தொழுதிருப்பார்கள். அல்லது தொழாமல் தூங்கி இருப்பார்கள். ஆனால் இதற்கு நபிகள் நாய்கம (ஸல்) அவர்கள் சொன்ன காரணத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும், பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
மனிதர்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் இதை ஏற்படுத்துகிறான். என்வே அல்லாஹ்விடம் பதுகாப்பு தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திய விஷயம் என்பதால் ஒவ்வொரு காலத்தவரும் தத்தமது சக்திக்கு உட்பட்டவாறு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
صحيح البخاري
எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும், சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
ஆபத்து சம்மந்தப்பட்ட விஷயங்களில் அந்தக் காலத்தவர்கள் நடந்து கொண்டது போல் நாமும் நடக்க முடியாது.
நவீன அறிவியல் மூலம் இந்த ஆபத்து எங்கே எப்போது எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று அறிவிப்பார்களானால் அந்த நேரத்தில் அந்த ஆபத்தில் இருந்து பாதுகாப்பு தேடித்தான் ஆக வேண்டும்.
உங்கள் ஊரில் குறிப்பிட்ட நேரத்தில் எரி நட்சத்திரம் விழும் என்று அறிவிக்கப்பட்டால் அந்த நேரத்தில் நீங்கள் விழித்திருப்பீர்கள். இது போல் தான் ஒரு நேர் கோட்டில் சூரியன் சந்திரன் பூமி வரும் போது ஏற்படும் ஆபத்து நமக்கு வராமல் இருக்க அல்லாஹ்விடம் பதுகாவல் தேடும் கடமை உள்ளது.