கடனில் இருந்து விடுபட (பலவீனமான துஆ)

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

கடனில் இருந்து விடுபட

1973. அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, நான் உரிமைபெற செலுத்தும் கடன்தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்! என்று கூறினார்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத்தந்த சில வார்த்தைகளை உனக்கு கற்றுத்தருகிறேன். (அதனை நீ அல்லாஹ்விடம் கேட்டால்) தய்யி கூட்டத்தின் மலையளவு கடன் இருந்தாலும் அந்தக்கடனை அல்லாஹ் நீக்குவான் என்று கூறிவிட்டு,

 

‎اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

 

அல்லாஹ்ஹும்மஹ்ஃபினிபிஹலாலிகஅன்ஹராமிகவஅஃக்னினீபிஃபள்லிகஅம்மன்ஸிவாக்.

பொருள் :

யாஅல்லாஹ்! நீவிலக்கியதைவிட்டும் நீஆகுமானாதாக்கியதைகொண்டும் எனக்குபோதுமானதாகஆக்குவயாக! மேலும் உனதுகிருபைகொண்டு உன்னைதவிர உள்ள அனைத்தைவிட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக. 

நூல் : திர்மிதி – 3563

அல்லாஹும் மக்ஃபினீ பி ஹலாலிக்க அன் ஹராமிக்க, வ அஃக்னினீ பி ஃபள்லிக்க அம்மன் ஸிவாக்க என்பதைக் கூறு என்று கூறினார்கள்.

பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக!

அறிவிப்பவர்: அபூவாயில் (ரஹ்)

أَخْبَرَنَاإِبْرَاهِيمُبْنُعِصْمَةَبْنِإِبْرَاهِيمَ،ثناأَبِي،ثنايَحْيَىبْنُيَحْيَى،أَنْبَأَأَبُومُعَاوِيَةُ،ثنا عَبْدُالرَّحْمَنِبْنُإِسْحَاقَالْقُرَشِيُّ،عَنْسَيَّارٍأَبِيالْحَكَمِ،عَنْأَبِيوَائِلٍ،قَالَ:
جَاءَرَجُلٌإِلَىعَلِيٍّ،فَقَالَ: أَعِنِّيفِيمُكَاتَبَتِي،فَقَالَ: أَلَاأُعَلِّمُكَكَلِمَاتٍعَلَّمَنِيهِنَّرَسُولُاللَّهِصَلَّىاللهُعَلَيْهِوَسَلَّمَلَوْكَانَعَلَيْكَمِثْلُجَبَلِصَبِيرٍدَيْنًالَأَدَّاهُاللَّهُعَنْكَقُلْ: «اللَّهُمَّاكْفِنِيبِحَلَالِكَعَنْحَرَامِكَ،وَأَغْنِنِيبِفَضْلِكَعَمَّنْسِوَاكَ»
هَذَاحَدِيثٌصَحِيحُالْإِسْنَادِ،وَلَمْيُخَرِّجَاهُ

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.