ஏந்தல் நபியின் எளிய வாழ்க்கை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். 

ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார். அவர் நினைத்தால் பல இடங்களை விலைக்கு வாங்க முடியும். பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டிக் கொள்ள முடியும். நிறைய வாகனங்களை வைத்துக் கொள்ள முடியும். ஆனால், ஏழை என்று அடுத்தவர்கள் சொல்லும் அளவுக்கு அவரது வாழ்க்கை மிகவும் எளிமையாக இருக்கிறது. ஓலைக் குடிசையில் குடும்பத்தோடு வசிக்கிறார். எல்லோரும் அணிவது போன்றே இயல்பான ஆடையை அணிகிறார். பெரும்பாலும் எங்கு போனாலும் நடந்து போவது தான் அவருடைய இயல்பு.

இந்த மாதிரியான நபரைப் பற்றி மக்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள்? நாமும் கூட என்ன சொல்வோம்? அவர் பற்றில்லா வாழ்க்கையை வாழ்கிறார் என்று அனைவரும் ஒப்புக் கொள்வோம், இல்லையா? இப்படித்தான் முஹம்மது நபியின் வாழ்க்கை இருந்தது. அவர்களின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..

சுயமரியாதையோடு இருந்த நபிகளார்

மக்காவில் இருக்கும் வரை மிகப்பெரும் செல்வந்தராக இருந்த நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு வந்த பிறகு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதரென தம்மை ஏற்றுக் கொண்ட மக்களிடம் எவ்வித ஆதாயத்தையும் எதிர்பார்க்கவில்லை. எவரையும் சார்ந்து இருக்காமல் சுயமரியாதையோடு வாழ அவர்களிடம் ஒரு திட்டம் இருந்தது.

أَنَّهُ انْطَلَقَ هُوَ وَصَاحِبٌ لَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَجِدَاهُ فَأَطْعَمَتْهُمَا عَائِشَةُ تَمْرًا، وَعَصِيدَةً، فَلَمْ نَلْبَثْ أَنْ جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَلَّعُ يَتَكَفَّأُ، فَقَالَ: «أَطْعَمْتِهِمَا؟» قُلْنَا: نَعَمْ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَسْأَلُكَ عَنِ الصَّلَاةِ؟ قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلِ الْأَصَابِعَ، وَإِذَا اسْتَنْشَقْتَ فَأَبْلِغْ، إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا»

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். ‘கிடாய்க் குட்டியா? பெட்டையா?’ என்றார்கள். அவர் ‘கிடாய்’ என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள்.

பிறகு என்னை நோக்கி ‘‘நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி),
நூல்: (அஹ்மத்: 17846) (17172)

முஹம்மது நபிக்கு ஓர் ஆட்டுப் பண்ணை இருந்தது. அதன் வருவாய்க்கு ஏற்ப தமது குடும்பத்தின் பொருளாதார தேவையைத் திட்டமிட்டுக் கொண்டார்கள். பிறருக்கு உதவி செய்யவும் அந்தப் பண்னை கைகொடுத்தது.

أَقْبَلْتُ أَنَا وَصَاحِبَانِ لِي، وَقَدْ ذَهَبَتْ أَسْمَاعُنَا وَأَبْصَارُنَا مِنَ الْجَهْدِ، فَجَعَلْنَا نَعْرِضُ أَنْفُسَنَا عَلَى أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَيْسَ أَحَدٌ مِنْهُمْ يَقْبَلُنَا، فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقَ بِنَا إِلَى أَهْلِهِ، فَإِذَا ثَلَاثَةُ أَعْنُزٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْتَلِبُوا هَذَا اللَّبَنَ بَيْنَنَا»، قَالَ: فَكُنَّا نَحْتَلِبُ فَيَشْرَبُ كُلُّ إِنْسَانٍ مِنَّا نَصِيبَهُ، وَنَرْفَعُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَصِيبَهُ، قَالَ: فَيَجِيءُ مِنَ اللَّيْلِ فَيُسَلِّمُ تَسْلِيمًا لَا يُوقِظُ نَائِمًا، وَيُسْمِعُ الْيَقْظَانَ، قَالَ: ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ فَيُصَلِّي، ثُمَّ يَأْتِي شَرَابَهُ فَيَشْرَبُ

நானும், எனது இரு நண்பர்களும் பசியின் காரணமாக செவிகள் அடைத்து, பார்வைகள் மங்கிய நிலையில் (மதீனா) வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் எங்களின் நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை ஏற்று, தங்க வைத்து உணவளிக்க யாரும் முன் வரவில்லை. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம்.

அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மூன்று ஆடுகளைக் காட்டி இந்த ஆடுகளில் பால் கறந்து நம்மிடையே பங்கு வைத்துக் கொள்வோம் என்று கூறினார்கள். எனவே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமது பங்கை அருந்தி விட்டு நபிகள் நாயகத்தின் பங்கை எடுத்து வைத்து விடுவோம்.

அவர்கள் இரவில் வந்து உறங்குபவரை எழுப்பாத வகையிலும், விழித்திருப்பவருக்குக் கேட்கும் வகையிலும் ஸலாம் கூறுவார்கள். பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது விட்டு தமது பங்கை அருந்துவார்கள்.

அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 4177) 

இங்கு சற்று யோசித்துப் பாருங்கள். ஆட்சியாளர்; ஆன்மீகத் தலைவர் எனும் ரீதியில் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும் பகட்டில்லாமல் வாழ்ந்தார்கள். எளிமையின் சிகரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிப்பிட்டால் மிகையாகாது.
அந்தளவுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்று அனைத்திலும் தாமாக விரும்பி ஏழ்மையைத் தேர்வு செய்து கொண்டார்கள். இதோ தூதரின் உணவு முறையை எப்படி இருந்தது என்று பாருங்கள்.

தூதரின் உணவு முறை
ابْنَ أُخْتِي «إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الهِلاَلِ، ثُمَّ الهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ»، فَقُلْتُ يَا خَالَةُ: مَا كَانَ يُعِيشُكُمْ؟ قَالَتْ: ” الأَسْوَدَانِ: التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الأَنْصَارِ، كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ، فَيَسْقِينَا

உர்வா பின் ஸுபைர் (ரலி)அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே!- நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம். பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம்-. அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்ககை நடத்தினீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர், இரு கருப்பான பொருட்கள் (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றொன்று) தண்ணீர். என்றாலும், அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக பயனபடுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள், என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 2567) , 6459

பேரிச்சம் பழமும் தண்ணீரும் தான் நபிகளாரின் அன்றாட உணவாக இருந்தது. விதவிதமாக சமைத்து சாப்பிடவில்லை. இவ்வாறு மூன்று மாதங்கள் சமைத்துச் சாப்பிடாத நிலையில் நாம் இருக்கிறோமா?

வாரத்தில் ஒரு நாள் கூட அடுப்பு எறியாத நிலையில் தவிக்கும் ஏழை மக்கள் மிகவும் குறைவு தான். வாரத்தில் பெரும்பாலான நாட்கள் சாதாரண உணவையாவது சமைத்துச் சாப்பிடும் நிலை பலருக்கும் இருக்கவே செய்கிறது. இந்த இயல்பான நிலையைக் கூட முஹம்மது நபி ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சில நேரங்களில் பசியோடு தவித்துள்ளார்கள். இந்த நிலையை எந்த ஆட்சித் தலைவராவது சந்தித்து இருப்பாரா?

சிலர் தன்னளவில் எளிமையைக் கடைப்பிடிப்பது உண்டு. ஆனால் தமது குடும்பத்தாருக்கு எல்லா விதமான சகல வசதிகளையும் செய்து கொடுத்து விடுவார்கள். அவரைத் தவிர அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் சுகபோகமாக இருக்கும். முஹம்மது நபியின் வாழ்க்கையோ வித்தியாசமானது.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ قَدِمَ المَدِينَةَ، مِنْ طَعَامِ البُرِّ ثَلاَثَ لَيَالٍ تِبَاعًا، حَتَّى قُبِضَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 5416) , 6454, 5374

தொடர்ந்து மூன்று வேளை வயிறு நிரம்ப சாப்பிடாத அதிகாரியின் குடும்பத்தை எங்காவது பார்க்க முடியுமா? மனைவி மற்றும் வாரிசுகள் பெயரில் சொத்து வாங்கிப் போடுவதற்காக பதவியை முறைகேடாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை எங்கும் பார்க்கவே செய்கிறோம்.

மக்களுக்குச் சேவை செய்ய ஒதுக்கப்பட்ட பணத்தில் சொகுசாக வாழும் ஆட்சியாளர்கள் முஹம்மது நபியை நினைத்துப் பார்த்தாவது தங்களைத் திருத்திக் கொள்ளட்டும்.
ஏனெனில், நபியவர்கள் எளிமையைத் தன்னளவில் வைத்துக் கொள்ளாமல் தமது குடும்பத்திலும் கடைப்பிடித்தாரகள். பெரும் ஆட்சிப் பீடத்தில் இருந்தாலும் அதை மூலதனமாகக் கொண்டு நபியின் வாழ்க்கை இருக்கவில்லை என்பதற்கு அவர்களின் எளிய வாழ்க்கையே மிகப்பெரும் சான்று.

سَأَلْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، فَقُلْتُ:

هَلْ أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ؟ فَقَالَ سَهْلٌ: «مَا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ، مِنْ حِينَ ابْتَعَثَهُ اللَّهُ حَتَّى قَبَضَهُ اللَّهُ

‘‘தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதுண்டா?’’ என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதே இல்லை’’ என்றார்.

அறிவிப்பவர்: அபூஹாஸிம்,
நூல்: (புகாரி: 5413) 

حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ
كُنَّا نَأْتِي أَنَسَ بْنَ مَالِكٍ، وَخَبَّازُهُ قَائِمٌ، وَقَالَ: «كُلُوا، فَمَا أَعْلَمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَغِيفًا مُرَقَّقًا حَتَّى لَحِقَ بِاللَّهِ، وَلاَ رَأَى شَاةً سَمِيطًا بِعَيْنِهِ قَطُّ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி ‘சாப்பிடுங்கள்’ என்று அனஸ் (ரலி) கூறி விட்டு ‘‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை’’ எனக் கூறினார்.

அறிவிப்பவர்: கதாதா,
நூல்: (புகாரி: 6457) , 5385, 5421,

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
مَا عَلِمْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ عَلَى سُكْرُجَةٍ قَطُّ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ قَطُّ، وَلاَ أَكَلَ عَلَى خِوَانٍ قَطُّ» قِيلَ لِقَتَادَةَ: فَعَلاَمَ كَانُوا يَأْكُلُونَ؟ قَالَ: «عَلَى السُّفَرِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: (புகாரி: 5386) , 5415

மிருதுவான ரொட்டியை சாப்பிடவில்லை; அதுவும் ரொட்டியை தட்டில் வைத்து சாப்பிட்டது கிடையாது. பொறிக்கப்பட்ட ஆட்டு இறைச்சியை கண்டதில்லை. மக்கள் சாதாரணமாக உண்ணும் உணவு கூட முஹம்மது நபியின் வாழ்வில் இடம் பெற்றிருக்கவில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால், எதைச் சாப்பிடுவதற்கு நடுத்தர மக்களும் ஏழை எளிய மக்களும் யோசிப்பார்களோ அத்தகைய உணவுகளை நபியவர்கள் சங்கடப்படாமல் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

قُلْتُ لِعَائِشَةَ: أَنَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُؤْكَلَ لُحُومُ الأَضَاحِيِّ فَوْقَ ثَلاَثٍ؟ قَالَتْ: «مَا فَعَلَهُ إِلَّا فِي عَامٍ جَاعَ النَّاسُ فِيهِ، فَأَرَادَ أَنْ يُطْعِمَ الغَنِيُّ الفَقِيرَ، وَإِنْ كُنَّا لَنَرْفَعُ الكُرَاعَ، فَنَأْكُلُهُ بَعْدَ خَمْسَ عَشْرَةَ» قِيلَ: مَا اضْطَرَّكُمْ إِلَيْهِ؟ فَضَحِكَتْ، قَالَتْ: «مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خُبْزِ بُرٍّ مَأْدُومٍ ثَلاَثَةَ أَيَّامٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ»، وَقَالَ ابْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَابِسٍ، بِهَذَا

ஆபிஸ் இப்னு ரபீஆ அல்கூஃபீ(ரஹ்) கூறியதாவது:
நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘(ஈதுல் அள்ஹா’ பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாள்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம்’ என்று பதிலளித்தார்கள். ‘உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடுமபத்தார் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை’ என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 5423) 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دِرْعَهُ بِشَعِيرٍ، وَمَشَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ، وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ: «مَا أَصْبَحَ لِآلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَّا صَاعٌ، وَلاَ أَمْسَى وَإِنَّهُمْ لَتِسْعَةُ أَبْيَاتٍ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். ‘முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: (புகாரி: 2508) 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَهُ الْأُدُمَ، فَقَالُوا: مَا عِنْدَنَا إِلَّا خَلٌّ، فَدَعَا بِهِ، فَجَعَلَ يَأْكُلُ بِهِ، وَيَقُولُ: «نِعْمَ الْأُدُمُ الْخَلُّ، نِعْمَ الْأُدُمُ الْخَلُّ

நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், “நம்மிடம் காடி (வினிகர்) மட்டுமே உள்ளது” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் காடியைக் (வினிகரைக்) கொண்டுவரச் சொல்லி அதை(த் தொட்டு) கொண்டு உண்ணலானார்கள். மேலும், “குழம்புகளில் அருமையானது காடியாகும்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 4169) 

பதினைந்து நாட்கள் மீதம் வைத்த கறிக்குழம்பு, வாசனை இழந்த நெய், வினிகர். இதையெல்லாம் நாம் சாப்பிடுவோமா? ஒரு கட்டளை இட்டால் எப்பாடுபட்டாவது தினந்தோறும் விருந்து கொடுக்கும் தோழர்கள் எவருக்கேனும் இருந்தால் முஹம்மது நபியைப் போல இருப்பார்களா? இத்தகைய தலைவரை காண்பது அரிதிலும் அரிது என்பதைப் பின்வரும் செய்திகள் மூலம் எவரும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ
أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ كِسَاءً وَإِزَارًا غَلِيظًا، فَقَالَتْ: «قُبِضَ رُوحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَيْنِ»

ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக் காட்டி, ‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில் தான் நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபுர்தா (ரலி),
நூல்: (புகாரி: 5818) 

جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ، قَالَ: أَتَدْرُونَ مَا البُرْدَةُ؟ فَقِيلَ لَهُ: نَعَمْ، هِيَ الشَّمْلَةُ مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا، فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا،…

‘ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்) புர்தாவைக் கொண்டு வந்தார்!’ எனக் கூறிவிட்டு, ‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்! அது ஓரப்பகுதி நெய்யப்பட்ட ஒரு சால்வை!’ என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஸஹ்ல் (ரலி) அறிவித்தார். அப்பெண்மணி, ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நான் என் கையால் நெய்தேன்!’ என்றார். நபி (ஸல்) அவர்கள் தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி),
நூல்: (புகாரி: 2093) 

நபிகளாரின் வீடு

உணவில் மட்டுமல்லாது உடை, உறைவிடம் விஷயத்திலும் எளிமையின் வடிவமாய் திகழ்ந்தார்கள், முஹம்மது நபி. அவர்களின் வீடு மதீனா பள்ளிவாசலில் இருந்தது. அதில் தமது அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுடன் குடியிருந்தார்கள். அந்த வீடு எவ்வளவு சிறியது என்பதை நீங்களே பாருங்கள்.

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ
«كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ، فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا»، قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ

நான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 382) 

மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலுக்குரிய இடத்தை முஹம்மது நபி தான் விலைகொடுத்து வாங்கினார்கள். ஆயினும், பெரும் பரப்பளவு கொண்ட அந்தப் பள்ளிவாசலின் ஓர் ஒரத்தில் சிறு அறையே நபியின் வீடாக இருந்துள்ளது. அந்த வீட்டின் வசதிகளும் பொருட்களும் கூட சொல்லிக் கொள்ளும் வகையில் இருக்கவில்லை.

நபிகளாரிடத்தில் இருந்த படுக்கை விரிப்பு
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَهُ حَصِيرٌ، يَبْسُطُهُ بِالنَّهَارِ، وَيَحْتَجِرُهُ بِاللَّيْلِ، فَثَابَ إِلَيْهِ نَاسٌ، فَصَلَّوْا وَرَاءَهُ»

நபி (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொண்டு தொழுவார்கள். மக்கள் அவர்களருகே விரைந்து வந்து அவர்களைப் பின்பற்றித் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி),
நூல்: (புகாரி: 730) 

 عَنْ عَائِشَةَ، قَالَتْ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فِي حُجْرَتِهِ، وَجِدَارُ الحُجْرَةِ قَصِيرٌ، فَرَأَى النَّاسُ شَخْصَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

நபி (ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 729) 

 عَنْ عَائِشَةَ، قَالَتْ
«كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَدَمٍ، وَحَشْوُهُ مِنْ لِيفٍ»

பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 6456) 

இந்த செய்திகள் மூலம் ஒரு செய்தி புரிய வருகிறது. சிலர் வெளிப்படையில் அடுத்த மக்களின் பார்வைக்கு எளிமையாக இருப்பது போல நடந்து கொள்வார்கள். அதேசமயம், அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை, குடும்பத்திற்குள் இருக்கும் நிலையைப் பார்த்தால் சொகுசாக இருப்பார்கள். முஹம்மது நபி அப்படி இருக்கவில்லை. எங்கும் எதிலும் எளிமையே நிறைந்து இருந்தது.

أَخْبَرَنِي أَبُو المَلِيحِ، قَالَ
…دَخَلْتُ مَعَ أَبِيكَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَحَدَّثَنَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذُكِرَ لَهُ صَوْمِي، فَدَخَلَ عَلَيَّ، فَأَلْقَيْتُ لَهُ وِسَادَةً مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، فَجَلَسَ عَلَى الأَرْضِ، وَصَارَتِ الوِسَادَةُ بَيْنِي وَبَيْنَهُ،

நான் அதிகமாக நோன்பு நோற்று வரும் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். கூளம் நிரப்பப்பட்ட தலையணையை அவர்கள் அமர்வதற்காக எடுத்துப் போட்டேன். அவர்கள் அதில் அமராமல் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்குமிடையே தலையணை கிடந்தது. (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல்: (புகாரி: 1980) 

தம் வேலையை தாமே செய்த நபி
وَعَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ قَالَ سَأَلَ رَجُلٌ عَائِشَةَ
هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ شَيْئًا قَالَتْ نَعَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْصِفُ نَعْلَهُ وَيَخِيطُ ثَوْبَهُ وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ

வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.

நூல்: . (அஹ்மத்: 24903) (23756), 24176, 25039

பீரோ முழுவதும் புதிய ஆடைகளையும் ஆபரணங்களையும் பொன்னையும் அடுக்கடுக்காக அடுக்கி வைத்திருத்திருக்கும் அதிகாரிகளுக்கு மத்தியில், பழைய ஆடைகளையும் செருப்பையும் தைத்துப் பயன்படுத்தும் நபிகளாரின் பண்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இவ்வாறு வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒருவர் இருக்கிறார் என்றால் அதுவே அவர் ஆடம்பர மோகத்தை அறுத்து எறிந்து விட்டார் என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இதை சுய வாக்குமூலமாகவும் நபியவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يُحَدِّثُ أَنَّهُ قَالَ
…وَإِنَّهُ لَعَلَى حَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَيْءٌ، وَتَحْتَ رَأْسِهِ وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، وَإِنَّ عِنْدَ رِجْلَيْهِ قَرَظًا مَصْبُوبًا، وَعِنْدَ [ص:158] رَأْسِهِ أَهَبٌ مُعَلَّقَةٌ، فَرَأَيْتُ أَثَرَ الحَصِيرِ فِي جَنْبِهِ فَبَكَيْتُ، فَقَالَ: «مَا يُبْكِيكَ؟» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ كِسْرَى وَقَيْصَرَ فِيمَا هُمَا فِيهِ، وَأَنْتَ رَسُولُ اللَّهِ، فَقَالَ: «أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمُ الدُّنْيَا وَلَنَا الآخِرَةُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது.

இதைக் கண்டதும் நான் அழுதேன். ஏன் அழுகிறீர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?’’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தி அளிக்கவில்லையா?’’ எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),
நூல்: (புகாரி: 4913) 

நபிகளாரிடத்தில் சஹாபாக்கள் வைத்த கோரிக்கை
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ
نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَصِيرٍ فَقَامَ وَقَدْ أَثَّرَ فِي جَنْبِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْنَا لَكَ وِطَاءً، فَقَالَ: «مَا لِي وَلِلدُّنْيَا، مَا أَنَا فِي الدُّنْيَا إِلَّا كَرَاكِبٍ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்’’ எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது’’ எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்கள்: (திர்மிதீ: 2377) (2299), இப்னுமாஜா 4099,(அஹ்மத்: 3525, 3991)

இந்த உலகம் அற்பமானது; அதில் மூழ்கி விடக் கூடாது என்ற உணர்வு எப்போதும் நபிக்கு இருந்தது. அதனால் தான், 23 ஆண்டுகள் ஆன்மீகத் தலைவராகவும் அதில் 10 ஆண்டுகள் ஆட்சித் தலைவராகவும் இருந்தாலும் மரணிக்கும் வரை அவருடைய வாழ்வு அனைவரும் நெகிழ்ந்து போகும் அளவுக்கு இருந்தது.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
«تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ، بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ»

தமது (இரும்பு) போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 2916) 

நபிகளார் விட்டுச்சென்றது
عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، قَالَ
«مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دِينَارًا، وَلاَ دِرْهَمًا، وَلاَ عَبْدًا، وَلاَ أَمَةً، إِلَّا بَغْلَتَهُ البَيْضَاءَ الَّتِي كَانَ يَرْكَبُهَا، وَسِلاَحَهُ، وَأَرْضًا جَعَلَهَا لِابْنِ السَّبِيلِ صَدَقَةً»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது திர்ஹமையோ, தீனாரையோ, அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ (வேறு எச்செல்வத்தையுமோ) விட்டுச் செல்லவில்லை; ‘பைளா’ எனும் தம் கோவேறுக் கழுதையையும் தம் ஆயுதங்களையும் வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.

அறிவிப்பவர்: அம்ர் இப்னு ஹாரிஸ் (ரலி),
நூல்: (புகாரி: 4461) 

பதவிக்குப் பிறகு ஏழ்மை நீங்கி செழிப்பில் இருப்பவர்கள் உண்டு. பணக்காரராக இருந்து கோடிஸ்வரனாக உயர்ந்தவர்கள் உண்டு. குறைந்த பட்சம் பதவியை விட்டு இறங்கும் போதாவது சொத்து சுகங்களைச் சேர்த்து வைத்துவிட்டு வருவார்கள்.

இத்தனை விஷயத்திலும் முஹம்மது நபி மாறுபட்டுத் திகழ்ந்தார்கள். ஆன்மீகம், அரசியல் என்ற இரு துறையிலும் மாபெரும் தலைவராக இருந்த போதிலும் பகட்டில்லாமல் வாழ்ந்து எல்லோர் மனதிலும் நிறைந்து விட்டார்கள் என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட நபியை நம் உயிரை விட நாம் நேசிக்க வேண்டும். அவர்களை முன்மாதிரியாக கொண்டு இவ்வுலகில் வாழும் நன்மாக்களாய் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.! 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.