இஸ்லாத்தை ஏற்ற “கேதரின் ஹெசெல்டின்” ஜோஅன் பெய்லி”
இஸ்லாத்தை ஏற்ற “கேதரின் ஹெசெல்டின்” ஜோஅன் பெய்லி”
உலகளாவிய அளவில் நாளுக்கு நாள் இஸ்லாமிய மார்க்கத்தை பலதரப்பட்ட மதத்தை சார்ந்தவர்களில் முக்கியமான பிரமுகர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக் கின்றார்கள் என்பதை தொடர்ந்து நாம் அறிந்து வருகின்றோம்! அதன் தொடர்ச்சியாக; இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது “Islam Oppresses Women” என்பதாகும். அதாவது “இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகின்றது” என்ற வாதமாகும்.
இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் அவதூறு வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் அடித்து நொறுக்கப்படுகின்றக்தோ, அதுபோன்றே இந்த வாதமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்திற்குகெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லி விட முடியும்! அதே வேளையில், முஸ்லிமல்லாத சகோதரிகளை “இஸ்லாம் என்றால் என்ன?” என்று அறியத் தூண்டியிருக்கின்றது.
பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டோரில் பெரும் பாலானோர் பெண்கள். பிரபல “டைம்ஸ் ஆன்லைன்” இணையதளம் “இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள்” பற்றிய ஒரு கட்டுரையை “Young. British Female Muslim” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.
அதில் ஏராளமான உண்மைத் தகவல்களை நேரடி ஆதாரத்தோடும், கள ஆய்வுகளோடும் கட்டுரை ஆசிரியர் வெளியிட்டிருக் கின்றார். அந்த உண்மைத் தகவலை கேட்ட பலதரப் பட்ட கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களுக்கு கடுமை யான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
பிரிட்டன் தேவாலயங்களில் வாரத்தின் இறுதி நாட்களில் பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற் போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் குறைவாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவுகின்ற பெண்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. லண்டன் மத்திய பள்ளிவாசல்களில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.
இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்கு உட்பட்ட படித்த பட்டதாரி பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (ரிKevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார்.
அந்த கட்டுரையில், ஐந்து பெண்கள் இஸ்லாத்தை ஏற்ற வரலாறை மிக நீண்ட செய்தியாக வெளியிடப் பட்டிருந்தது. அவற்றில் இரண்டு பெண்கள்; 1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine) Nursery school teacher, 31, North London 2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey) Solicitor, 30, Bradford
Source: unarvu (01/11/19)