இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்”
இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்”
நாளுக்கு நாள் இஸ்லாத்தின் பக்கம் அலையலையாய் அணிவகுத்து வந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக, உலக அளவில் மக்களால் பிரபல்யமாக பார்க்கப்படுகின்ற பலதரப்பட்ட திறமை பெற்றவர்கள், ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், சினிமா பிரபலங்கள் என்று சொல்லி பலர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு தழுவுகின்றனர்.
அந்த வரிசையில், கொரியாவை சார்ந்த பிரபல பாப் இசையின் நட்ச்சத்திரம் ஜாய் கிம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். ஜாய் கிம் என்பவர், பாப் இசை உலகின் உச்சத்தில் கொடிகட்டி பறந்தவர். இவர் பிரபல்யமான பல திரைப்படங்களுக்கும், பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
மேலும், இவருக்கு பிரத்யேகமான யூ-டியூப் சேனல் பக்கம் இருக்கின்றது. அந்த பக்கத்தை மட்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்ச்சத்து அறுபதாயிரம் (5,60,000) நபர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர் இஸ்லாத்தை தழுவி விட்டார் என்ற செய்தியை மட்டும் வலைத்தளங்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் அறிந்து கொண்டுள்ளனர்.
இவர் பாப் உலகில் கொடி கட்டி பறந்த காரணத்தினால் இவர் அதிகப்படியான பொருளாதாரத்தையும், சொத்துகளையும், சம்பாதித்திருக்கின்றார். அந்தப் பொருளாதாரங்களை எல்லாம் இஸ்லாத்தை ஏற்ற பிறகு இவர் இழக்க நேரிடலாம் என்று இவரை புரிந்து கொண்ட நல்லவர்களில் சிலர் தெரிவிக்கின்றார்கள். மேலும், ஜாய் கிம் மக்களிடத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது, நான் இஸ்லாத்தை படித்து, உளப்பூர்வமாக விளங்கி ஏற்கிறேன்.
இஸ்லாமிய மார்க்கம் தான் உலக மக்களுக்கு சரியான மார்க்கம் என்பதை அறிந்து கொண்டேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் பலதரப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும், அந்த எதிர்ப்புகளை நான் சந்திக்க தயாராக உள்ளேன். என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார். மேலும், ஜாய் கிம் என்ற தன்னுடைய பெயரை தாவூத் என்று மாற்றி கொண்டார். அல்லாஹ் மென்மேலும் இவரது பாதங்களை உறுதிப்படுத்துவானாக!!
Source: unarvu (08/11/19)