இஸ்லாத்தை ஏற்ற நடிகர் “ஓம்புரி”

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

இஸ்லாத்தை ஏற்ற நடிகர் “ஓம்புரி”

பல்வேறு தடைகளை உடைத் தெறிந்து எதிர்ப்பவர்களின் உள்ளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றது இஸ்லாம்.! உலக அளவில் பிரபலமாக இருக்கின்ற பல்வேறு நபர்களின் வாழ்க்கையில் இஸ்லாமிய ஜோதி ஆழமாகப் பதிய வைக்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான பாலிவுட் நடிகர் ஓம்புரி அவர்கள் தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இவர் பல்வேறு படங்களை தயாரித்தும், பல படங்களில் நடித்தும் உள்ளார்.

நடிகர் ஓம்புரி அவர்கள் மரணமடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. அவர் தான் மரணமடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இஸ்லாத்தின் மீதுள்ள பற்றும், ஆர்வமும் இவருக்கு அதிகமானது. இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் பலதரப்பட்ட நபர்களை இவர் வரவழைத்து இஸ்லாம் குறித்த கேள்விகளையும், சந்தேகங்களையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். 

நடிகர் ஓம்புரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது; இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்றார்கள், அதனை உறுதி செய்வதற்காக குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன், எந்தெந்த வகையில் குர்ஆன் தீவிர வாதத்தை போதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். இறுதியில் எனது எண்ணம் பொய்யாகி போனது.

குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் தீவிரவாதத்திற்கு ஆதரவான வார்த்தைகள் இல்லை, மாறாக தீவிரவாதத்தை இஸ்லாம் வேரோடு அழிக்கிறது. மேலும் குர்ஆன் நேரான பாதைக்கு வழிகாட்டுகின்றது. மாற்று மதத்தை சார்ந்த அனைத்து நண்பர்களும்  குர்ஆனைப் படித்துப் பாருங்கள்! குர்ஆன் இந்த உலகத்திற்கு என்ன சொல்கின்றது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம்!

குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதையும் அதைப் படிப்பவர்களுக்கு தெளிந்த நீரோடை போன்று தெளி வாகும்! அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு உரியவன் யாரு மில்லை என்றும், முஹம்மத் நபி அல்லாஹ்வுடைய தூதர் என்றும் நான் ஏற்றுக் கொண்டேன். உலகிலேயே மிக வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம், இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றது பெருமையாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் கட்டாயமாக குர்ஆனைப் படியுங்கள்! உண்மையான மார்க்கத்தை அறிந்து கொள்ளுங்கள்! நேரான பாதைக்கு வாருங்கள்! என்று நடிகர் ஓம்புரி மக்களுக்கு பிரகடனப் படுத்தினார் மேலும், நடிகர் ஓம்புரி அவர்கள் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது…

Source: unarvu (30/08/29.)