இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.!

முஸ்லிம்கள் இஸ்லாமியர்கள், ஒரு கடவுள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் என்பதை தெரிந்த மாத்திரத்திலே உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருசில விஷக் கிருமிகளின் பார்வையும், செயல்பாடுகளும் தனித்து தெரிவதைப் பார்க்கின்றோம். அதாவது இந்த அடையாளங்களில் பயணிப்பவர்களை உலகத்தில் வாழ விடக் கூடாது என்ற வெறித்தனத்திலும் சிலர் அலைந்து கொண்டிருக் கின்றார்கள். ஆனால் இவர்கள் என்னதான் முனகினாலும், கத்தினாலும், போராடினாலும், இரகசியமாக காய் நகர்த்தினாலும் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

சமீபத்தில் சமர்பிக்கப் பட்ட ஆய்வறிக்கைகள் இந்த செய்தியை அப்படியே நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைப்படுத்துகின்றது. அதாவது கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு (innocent of muslim) என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தியும், இழிவுபடுத்தியும் அமெரிக்க ஏகாதிபத்திய அயோக்கியர்களால் ஒரு படம் ஒன்றை வெளியிட்டார்கள். அந்த படம் வெளிவந்ததும் இதுவரைக்கும் உலகம் சந்தித்திராத அளவுக்கு ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பலைகளையும்,      போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் உலகம் சந்தித்தது.

ஆனால் ஒட்டு மொத்த நாடும் வியக்கின்ற அளவுக்கு அந்த படத்தை உருவாக்கியவர் மனம் திருந்தி சமீபத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். கடந்த பத்து வருடங்களில் அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவும் மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது.

2000 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனாக (பத்து இலட்சமாக) இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2012 – ஆம் ஆண்டில்2.6 மில்லியனாக (அதாவது, இருபத்தி ஆறு இலட்சமாக) மாறியுள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளதாக நிவ்யோர்க் டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது. ((NEWYORK DAILY NEWS – Thursday, May 03, 2012) பத்து வருடங்களுக்குள் 150% வளர்ச்சியைக் கண்டுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.

திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத் தீர்ந்தன. கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப் பட்டிருக்கின்றது. ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப் படுகின்றது என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என் (CNN) குறிப்பிடுகின்றது. ‘

2027 இல் பிரான்ஸில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார் என்றும் இன்னும் 39 வருடங்களுக்குள் பிரான்ஸில் முஸ்லிம்களே பெரும் பான்மையாக இருப்பார்கள்’ என்றும் கூறுகின்றது. நெதர்லாந்தில் தற்போது பிறக்கும் குழந்தைகளில் 50% முஸ்லிம்கள் என்றும் இன்னும் 15 வருடங்களுக்குள் நெதர் லாந்தில் முஸ்லிம்கள் 50% சதவிகிதமாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறிப்பிட்ட 15 வருடங்களில், சுமார் ஏழு வருடங்கள் கடந்து விட்டன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

ரஷ்யாவில் ஐந்து பேரில் ஒருவர் முஸ்லிமாக இருப்பதாகவும், அந்த அறிக்கை கூறுகின்றது. பெல்ஜியத்தில் 2025ல் பிறக்கும் மூன்று குழந்தை களில் ஒரு குழந்தை முஸ்லிமாக இருக்கும் என்றும் 2050ல் ஜெர்மன் முஸ்லிம் நாடாக மாறும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமன்றி தற்போது ஐரோப்பாவில் 52 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாகவும் இன்னும் 20 வருடங்களுக்குள் இது இரு மடங்காக மாறும். (அதாவது, 104 மில்லியனாகும்) எனவும் ஜெர்மன் அரசே அறிவித்துள்ளது. இதுபோன்ற ஏராளமான புள்ளி விவரங்கள் நமக்கு எடுத்து சொல்கின்ற செய்தி என்னவென்றால், இஸ்லாமிய மார்க்கம் எந்த அளவுக்கு எதிர் க்கப்படுகின்றதோ, அந்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக் கின்றனர். (தன்னை) ம றுப்பபோர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.

(அல்குர்ஆன்: 9:32).)

Source: unarvu (02/08/2019.)