சர்ச்சையைக் கிளப்பும் சாதிக்கயிறு
சர்ச்சையைக் கிளப்பும் சாதிக்கயிறு
சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று மாணவர்களுக்கு வழங்கும் பாடப் புத்தகங்களில் முதல் பக்கத்தில் அச்சிட்டுள்ள நிலையில் அதே பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் தங்கள் சாதியை உணர்த்தும் வகையில் கைகளில் விதவிதமான கலரில் கயிறுகளைக் கட்டி வரும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மாணவர்கள் கைகளில் கயிறு அணிந்து வருவதைத் தடை செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளி கல்வித் துறைக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையில் மாணவர்கள் தங்களின் சாதியை வெளிப்படுத்தும் வகையில் சிவப்பு, பச்சை, காவி போன்ற நிறங்களில் கயிறுகளைக் கட்டிக் கொண்டு பள்ளிக் கூடங்களுக்கு வருவதாகவும் இதைத் தடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த பள்ளிக் கல்வித்துறை., பள்ளிக்கு வரும் மாணவர்கள் கைகளில் சாதிக்கயிறு அணிந்து வருவதற்கு தடை விதித்து அனைத்துப் பள்ளி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
சாதி வெறியை ஒழிக்கும் பள்ளி கல்வித் துறையின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் சுதந்திர தினத்தில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங் கோட்டையன், இந்த சுற்றறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், மாணவர்கள் கைகளில் கயிறு அணிந்து வருவதற்கு தடை விதிக்கத் தேவையில்லை என்றும் பேசியுள்ளார். செங்கோட்டை யனின் பொறுப்பற்ற இந்தப் பேச்சு மக்களின் மத்தியில் கடும் விமர்சனத்திற் குள்ளாகியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன், சாதிக்கயிறு சுற்றறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வது வேடிக்கை யாக உள்ளது என்றும், சாதிக்கயிறு சுற்றறிக்கைக்கு எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால்தான் செங்கோட்டையன் பல்டி அடித்து பின் வாங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை நாச மாக்கும் சாதிக் கயிறு விவகாரத்தைத் தடை செய்யும் பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கையை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: unarvu (23/08/19)