கழிவறைக்கு செல்போனை எடுத்துச் செல்லலாமா?
கழிவறைக்கு செல்போனை எடுத்துச் செல்லலாமா?
செல்லலாம்.
இப்போது அதிகமான மக்கள் பயன்படுத்தக் கூடிய செல் போன்களில் குர்ஆன் டெக்ஸ்ட் குர் ஆன் அரபி மூலம் மார்க்க நூல்கள், பயான்கள் ஆகியவை பதிவு செய்யக்கூடிய வகையில் தான் உள்ளன. மார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் கழிவறை சென்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களின் செல்போனுக்குள் குர்ஆன் உள்ளதால் அதைக் கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்தால் அது போல் குர்ஆன் ரிங்டோனாக வைத்திருப்பவரும் செல் போனை கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம். அல்லது வெளியே வைக்க முடியாத நிலை இருந்தால் கழிவறை செல்லும் போது போனை ஆப் செய்து விடலாம்.
கழிவறை செல்லும் போது குர்ஆன் ஒலிக்கும் என்பதால் குர்ஆனை ரிங் டோனாக வைக்கக் கூடாது என்றால் குர்ஆன் சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல் போனையும் பயன்படுத்தக் கூடாது என்று கூற வேண்டும். ஆனால் குர்ஆனை ரிங் டோனாக வைக்கக் கூடாது எனக் கூறுவோர் குர் ஆன் சாப்ட்வேர் விஷயத்தில் இப்படி கூறுவதில்லை. கழிவறை செல்லும் அவசியம் உள்ளதால் குர்ஆன் சாப்ட்வேர் உள்ள போனை பயன்படுத்தக் கூடாது என்று இவர்கள் கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.