மரபணு மாற்று உணவு.!! (Genetically Modified Organisms-Foods)
மரபணு மாற்று உணவு.!! (Genetically Modified Organisms-Foods)
ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கக்கூடிய இயல்பான பண்புகளை, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் உயிர் அணுவின் பெயரே மரபணு என்னும் டிஎன்ஏ (DNA –Genes) ஜீன்கள். மரபணு மாற்றம் என்பது ஒரு உயிருள்ள விலங்கு, அல்லது தாவரம், அல்லது ஏதாவது நுண்ணுயிரின் மரபணு (Genome) கட்டமைப்பில் வேறு ஒரு உயிரினத்தின் மரபணுக்களை ( Transgenic) செயற்கையாக புகுத்துவது.
அறிவியலில் ஏற்பட்டுள்ள வானளாவிய வளர்ச்சியின் முக்கிய மைல் கல்லாக மரபணு தொழிற்நுட்பம் பார்க்கப்படுகிறது. காய்கறிகளிலும், தாவரப் பயிர்களிலும், விலங்குகளின் உடலிலுள்ள மரபணுக்களை வெட்டியெடுத்து தாவரங்களின் மரபணுக்களோடு ஒட்டி விடுகின்றனர். உதாரணமாக, மண்ணில் உள்ள “பேசில்லஸ் துரின்ஜின்சிஸ்” (Bacillus Thuringiensis) என்னும் நுண்ணுயிர் பாக்டீரியாவில் உள்ள “கிரை 1ஏசி“ என்ற விஷ புரதத்தை (Protein) தனியாக பிரித்தெடுத்து கத்திரிக்காயின் மரபணுவுடன் சேர்க்கும்போது, ,டெல்டா என்டோ டாக்ஸிக்” என்ற பூச்சி தாக்குதலுக்கு கத்திரி செடி ஆளாவதில்லை.
இதுபோல் தக்காளியின் தோல் மென்மையாக இருப்பதால் எளிதில் உடைந்து விடுவதும் விரைவிலேயே அழுகிப் போவதும் நடக்கிறது. இந்தக் குறையை நீக்க, தவளையின் உடலிலுள்ள மரபணுவை வெட்டி எடுத்து தக்காளியின் மரபணுவுடன் இணைத்து தோலை தடித்ததாக மாற்றுகின்றனர். தக்காளி கீழே விழுந்தால் உடையாமல்…தவளை போன்று குதித்கும். இது போல் அதிகக் குளிரில் உறையாமல் இருப்பதற்காக, ஆர்டிக் குளிர் பிரதேசக் கடலில் வாழும் “பிளவுண்டர்” என்ற மீனின் மரபணுவை வெட்டியெடுத்து தக்காளி மரபணுவுடன் ஓட்டுகின்றனர்.
இரண்டு தாவரங்களுக்கு இடையே மரபணு மாற்றம் என்பதெல்லாம் மாறி, தற்போது சிலந்தி,தேள்,பாம்பு, போன்றவற்றின் மரபணுவை எடுத்து பயிர்களுடன் சேர்த்து, பூச்சி தாக்காமல் இருக்க முயற்சிகள் நடக்கின்றன. மாடு அதிகப் பால் கொடுக்க, பன்றியின் மரபணுவை ஜெர்சி பசுக்களில் திணித்து பால் புரட்சி ஏற்படுத்தியது போல், பெண்களின் தாய்ப்பால் மரபணுவை எடுத்து நெல்லின் மரபணுவோடு சேர்த்து அதிக விளைச்சல் பெறவும் ஆய்வுகள் நடக்கின்றன.
இதே போல கத்திரிக்காய், அரிசி, சோயா பீன்ஸ், காபி மிளகு, காலி பிளவர் முட்டைக்கோஸ் பட்டாணி, முலாம்பழம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, வெண்டை, வள்ளிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, ஏலக்காய், மொச்சை, மாதுளை பருத்தி, சணல், என்று 72 வகையான பயிர்கள் மரபணு மாற்ற தொழிற்நுட்ப ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது இப்படிப்பட்ட விபரீதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு காய்கறிகளிலும் தாவரங்களிலும் விலங்குகளிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு அவை மக்களின் பயன்பாட்டிற்காக சந்தையில் விடப்பட்டுள்ளன.
முதலில் மரபணு தொழில் நுட்பம் மிக முன்னேறிய தொழில் நுட்பம் என்றும் மனிதனுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உயிர் வாழும் உரிமைக்கும் இயற்கைக்கும் எதிரானதாக மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மனிதனின் சுய நலத்திற்காக மரபணு மாற்று உயிரினங்கள் எல்லாமே இந்த உலகத்தைப் பொருத்தவரை புதிய உயிரினங்கள்; அவை தன்னைச் சுற்றியுள்ள உயிரினங்களிடம் எப்படி நடந்து கொள்ளும்? தங்களை உண்ணும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் அவை நல்லது செய்யுமா? அல்லது கெட்டது செய்யுமா? – யாருக்கும் தெரியாது. இது பற்றிய விரிவான ஆய்வு இன்னும் முடியவில்லை.
அல்லாஹ்வின் படைப்பில் எந்த ஒரு மாற்றமும் தேவைப்படாத அளவில் அவைகள் ஒவ்வொன்றையும் கணக்காக படைத்துள்ளான். எது எதற்கு எது தேவையோ அதை அல்லாஹ் அளவாக அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் மாறுதல் செய்ய நினைத்த அன்றைய ஜாஹீலிய மக்கள், ஆடு,மாடுகளின் காதுகளை அறுத்து அலங்கோலம் செய்தனர். இது ஷைத்தானுடைய செயல் என்று அல்லாஹ் கூறு கின்றான்.
மேலும், நிச்சயமாக நான் அவர்களை வழிகேடுப்பேன். ஆசைகளில் அவர்களை உழலவைப்பேன். இன்னும், நான் அவர்களுக்கு கட்டளை இடுவேன்; அதன்படி அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுத்து விடுவார்கள். மேலும், நான் அவர்களுக்கு ஆணை பிறப்பிப்பேன். அதன்படி, அல்லாஹ் படைத்த ஒழுங்கமைப்பில் அவர்கள் மாற்றங்கள் செய்வார்கள்.”’
எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை தன்னுடைய நண்பனாகவும், பாதுகாவலனாகவும்,எடுத்து கொள்கின்றானோ அவன் அப்பட்டமான இழப்புக் குரியவன் ஆவான்.
(அல் குர்ஆன்.4;119.)
அன்றைய அறியாமைக் கால மக்கள் கால்நடைகளின் காதுகளை வெளிப்புறமாக அறுத்து இயற்கை கோலத்தை மாற்றினார்கள். ஆனால் இன்றைய அறிஞர் பெருமக்கள் கால்நடையின் காதுகளை ஓட்டையிட்டு அதன் உட்புற மரபணு செல்லை எடுத்து வேறு ஒரு ஆட்டின் கர்ப்பத்தில் வைத்து “டோலி’ என்னும் ஆட்டை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள். இயற்கையை மாற்றும் ஷைத்தானிய செயலை அல்லாஹ் ஒரு போதும் அனுமதிப்பதில்லை எனவே டோலி ஆடும் அற்ப ஆயுஸில் வியாதியில் செத்து மடிந்தது.
Death. On 14 February 2003, Dolly was euthanised because she had a progressive lung disease and severe arthritis. A Finn Dorset such as Dolly has a life expectancy of around 11 to 12 years, but Dolly lived 6.5 years.
உயிரினங்களின் இயற்கை ஒழுங்கு கட்டமைப்பை மாற்றுவது ஷைத்தானின் செயல்… இந்த ஷைத்தானிய செயலையே அமெரிக்காவின் “மான்சாண்டோ” போன்ற பகாசுர கார்பரேட் கம்பெனிகள் செய்து காசு பார்க்கின்றனர். .இதையே அல்லாஹ் கூறு கிறான்.
அவன் (உம்மை விட்டுத்) திரும்பியதும், பூமியில் கலகத்தையே உண்டாக்கவே முயல்வான். விளைநிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
(அல் குர்ஆன். 2;205.)
மனிதனின் பேராசையின் காரணமாக உலகம் வெப்பமயமாகி வருகிறது. இதன் காரணமாக மழை, வெள்ளம், புயல் பஞ்சம்,வறட்சி, கடல் மட்டம் உயர்ந்து கரையோரம் அரிக்கப்பட்டும், தீவுகள் நீரில் மூழ்குவதும் நடந்து வருகிறது. அடுத்ததாக மனிதர்களுக்கு உணவளிக்கும் விளைநிலங்களையும் மனிதனே செயற்கை உரங்களைப் போட்டு நஞ்சாக்கி விட்டான். அத்துடன் அதில் இயற்கையாக வளரும் பயிர்களின் மரபியல் பண்பை மாற்றி குழப்பம் ஏற்படுத்தி விட்டான். கால்நடைகளின் இயற்கைப் பண்பை மாற்றியமைத்தும் (GE – Gene editing) குழப்பத்தை ஏற்படுத்தி விட்டான்.
அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தது, அவற்றை அதனதன் அளவுப்படி அமைத்தான்.
(அல் குர்ஆன்.25:2.)
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக குறிப்பான அளவின்படியே படைத்திருக்கின்றோம்..
(அல் குர்ஆன்.54:49.)
அல்லாஹ் படைத்த அனைத்து உயிரினங்களான, நுண்ணுயிர்கள் தாவரங்கள், மிருகங்கள் அனைத்தும் குறை எதுமின்றி நிறைவாகவே உள்ளது. ஆனால் குறைமதி மனிதன் இதிலும் தலையிட்டு குழப்பி வருகின்றான். குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப் பாலில் அதிக சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் நிரம்ப உள்ளது. மாட்டுப் பாலில் இந்தக் சக்திகள் கிடையாது. அர்ஜென்டினா நாட்டு பசுவின் கர்ப்பபையில் பெண்ணின் மரபணுவை வெட்டி ஒட்டி…அந்தப் பசு கரக்கும் பாலிலும் தாய்ப்பாலில் உள்ள சத்துக்களை உருவாக்கினர்.
பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள் சுவாசக் கோளாறு நோயின் காரணமாக ஏராளமாக இறந்தன. இந்த நஷ்டத்தை தடுக்க….இதற்குக் காரணமான ஜீன் மரபியல் பண்பை வெட்டி விட்டனர். பறவை காய்ச்சல் நோயின் காரணமாக ஏராளமான கோழிகள் அழிந்த்தன. இதற்கு காரணம் கோழியின் உடலில் உள்ள ஒரூ மரபியல் ஜீன். ஆகவே அந்த ஜீனை வெட்டி எறிந்து….பறவை காய்ச்சல் தொற்றாத மரபியல் மாற்று கோழியை உருவாக்கினர்.
அமெரிக்காவின் மரபியல் மாற்று நிறுவனமான “AQUA BOUNTY “ ஸால்மன் ரக மீனில் மரபியல் மாற்றம் செய்து மார்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பினர். சாதாரண ஸால்மன் மீனானது முழு வளர்ச்சியடைய 18 மாதங்கள் காத்திருக்க வேண்டும். மரபியல் மாற்றப்பட்ட மீனோ ஒன்பது மாதத்திலேயே நன்கு பெரிதாகி, விற்பனைக்கு வந்து விடும்.
இப்படி இறைவனின் படைப்பில் மனிதன் கை வைத்து….வெட்டுதல்.. ஒட்டுதல்…என்னும் குழப்பத்தை செய்து வருகிறார்கள். இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் குறைந்தசெலவு,அதிக உற்பத்தி,வறுமை ஒழிப்பு. ஆயினும் இவர்கள் சொல்லும் வறுமை ஒழிப்பிற்காக எந்த அரசாங்கமும் ஆய்வு செய்யவில்லை. மரபியல் மாற்று ஆய்வு செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் கார்பொரேட் தனியார் நிறுவனங்களே! தங்களின் சுய லாபத்திற்காக ஆதாயத்திற்காக, மக்களின் ஆரோக்கியத்தை வைத்து சூதாடுகிறார்கள்.
ஆட்டைக் கடித்து,மாட்டைக் கடித்து,கடைசியில் மனிதனைக் கடித்த கதையாய்……மரபணு மாற்று ஆய்வு நுண்ணுயிர்களில் தொடங்கி, தாவரம்,மிருகம் என்று முடிந்து, தற்போது மனித கருவிலேயும் மாற்றங்கள் செய்யத் தொடங்கி விட்டனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு மரபியல் மாற்று ஆய்வாளர், சீனாவில் ஒரு பெண்ணின் கர்ப்பத்திலிருந்த இரட்டை குழந்தைகளின் ஜீனில் இருந்த எய்ட்ஸ் ஜீன் புரதத்தை வெட்டி எறிந்த தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சீனாவின் ஷென்ஜென் நகரிலுள்ள “சதர்ன் அறிவியல் தொழிர்நுட்ப பல்கலை கழகத்தின்” பேராசிரியர். ஹீ ஜியான் குய், (He Jiankui) கடந்த வாரம் (26-நவம்பர்-2018) அவர், எச்.ஐ.வி.வைரஸ் தாக்காமல் தடுப்பதற்காக கருவில் மரபியல் மாற்றம் செய்து இரட்டை குழந்தைகளை பிறக்க வைத்துள்ளதாக அறிவித்தார். குறிப்பாக,பெண் சினை முட்டையையும் ஆணின் உயிரணுவையும் இணைத்து, கருத்தரித்த நிலையில், அந்தக் கருவில் இருந்த “சிசிஆர் 5” என்ற எய்ட்ஸை கடத்தும் மரபணுவை வெட்டி நீக்கி இந்தக் குழந்தைகளை பிறக்க வைத்ததாக அறிவித்தார். இந்தக் குழந்தையின் தந்தை எய்ட்ஸ் நோயாளி.
மனிதர்களின் கருவில் மரபியல் மாற்று நடப்பது இதுவே முதல் முறை, இந்த ஆய்வை உலகிலுள்ள எல்லா விஞ்ஞானிகளும் கடுமையாக கண்டனம் செய்து,”இது பயங்கரமானது”என்று அறி
வித்ததால், உடனடியாக தான் இந்த ஆய்வை நிறுத்திவிட்டதாக அந்த சீன விஞ்ஞானி அறிவித்துள்ளார்.
https://www.ndtv.com/science/chinese-scientist-he-jiankui-claims-worlds-first-gene-edited-babies-1953461
சாதாரணமாக தனியொரு மனிதரின் நோயை நீக்க அந்த நோய் சம்பந்தப்பட்ட மரபணுக்களை வெட்டி நீக்குவதே இது வரை நடைபெற்று வந்தது. இதனால் ஏற்படும் சாதக,பாதகங்கள் அந்த தனி நபருடன் முடிந்து விடும், ஆனால் கர்ப்பத்திலுள்ளொரு கருவில் இம்மாற்றம் செய்தால், அதன் பின் விளைவுகள் அந்தக் குழந்தையின் சந்ததிகளிலும் தொடரும். அதன் பயங்கரம் எப்படி இருக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது.
பலருக்கு GM ற்கும், Hybrid ற்குமான வேறுபாடுகளில் குழப்பமும் அறியாமையும் நிலவி வருகிறது. இனக்கலப்பு (Hybridization) என்பது, இருவகையான ஒரே தாவரங்களுக்கிடையே நடக்கும் குறுக்கு மகரந்தச்சேர்க்கையின் (Cross Pollination) விளைவாக, ஒரு புதிய வகையான பயிரை உருவாக்குவது. இது இயற்கையாகவும் நடக்கும். செயற்கையாகவும் நம்முடைய தேவைக்கேற்றவாறும் உருவாக்கலாம். வீரிய ஒட்டு சேர்ப்பு நடத்துவது இயற்கையானது. பக்க விளைவுகள் இல்லாதது. நபி (ஸல்) அவர்கள், பேரிச்சை பாளையை எடுத்து பிற மரங்களில் உள்ள பூக்களில் அடித்து அயல் மகரந்த சேர்க்கை (Cross pollination) செய்வதை அனுமதித்துள்ளார்கள்.
(புஹாரி : 2204,2206.)
பொதுவாக, தாவரங்கள்,மிருகங்கள், மனிதர்கள் எனும் எல்லா உயிரினங்களும் அதனதன் தேவைக்குத்தகுந்த மரபணுவின் அடிப்படையிலேயே வடிவமைத்து அவைகளை அல்லாஹ் படைத்திருக்கின்றான். இந்த மரபணு பதிவானது ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். ஜீன் எனப்படும் இந்த மரபணுக்கள் அனைத்தும் புரதங்களால் ஆனது. ஒவ்வொரு புரதமும் பல்லாயிரக்கணக்கான குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன.
இந்த அடிப்படை புரதங்களை, செயற்கையாக இனம் விட்டு இனம் மனிதன் மாற்றியமைப்பதன் மூலம் உருவாக்கும் தானியங்கள் அல்லது இறைச்சிகளால், மனிதர்களுக்கு நோய்களும், மரணமும் ஏற்பட வாய்ப்புள்ளது. பயோ டெக்னாலஜி என்னும் உயிரியல் தொழிற்நுட்பத்தில், நமக்கு தேவையான புரதங்களை நம் விருப்பம் போல் தேர்ந்தேடுக்கின்றோம். இது இயற்கையுடன் விளையாடும் ஆபத்தான விளையாட்டு. நாம் சுயமாக வெட்டி ஒட்டி இணைக்கும் ஜீன்களால் என்னென்ன பாதிப்புகள் உருவாகும் என்று எவருக்கும் தெரியாது.
நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விசயங்களில் தலையிடுவது நம் கழுத்துக்கு நாமே வைக்கும் கத்தியாக மாறக்கூடும். ஏனெனில் ஒவ்வொரு புரதமும் ஏற்படுத்தக்கூடிய சங்கிலித் தொடர் (Chain reaction) நிகழ்வுகளை எவரும் கட்டுப்படுத்த முடியாது. இந்த அடிப்படை டிஎன்ஏ புரதங்களைப்பற்றி அறிவியலாளர்களுக்கு சுமார் 3.5% மட்டுமே தெரியும். 96.5% விகிதம் தெரியாத மர்மம். இந்நிலையில் புரதங்களின் விளைவு மோசமானதாக இருந்தால் அதை நம்மால் சரி செய்ய முடியாது. இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பொருள்களில் எது இயற்கை எது செயற்கை என்று அறியாதவாறு மரபியல் மாற்று உணவுகள் நம்மை சூழ்ந்துள்ளன.
உதாரணமாக,நம் இந்தியஅரசு, பி டி பருத்திக்கு அனுமதி கொடுத்ததான் காரணம் பருத்தி என்பது உணவுப்பொருள் அல்ல. மனிதர்களுக்கு ஆடைகள் நெய்யவே பருத்தி ஆகவே இதனால் மனிதர்களின் ஆரோக்கியம் பாதிப்படையாது. ஆனால் நடந்தது என்ன? பருத்தி ஆடைக்கும்… பருத்தி கொட்டை எண்ணெய் எடுப்பதற்கும், பருத்திக் கொட்டை பிண்ணாக்கு மாடுகளுக்கு உணவாக கொடுத்தனர். இந்த விஷ புரத பருத்தி கொட்டை புண்ணாக்கை சாப்பிடும் மாடுகள் கொடுக்கும் பாலை நாம் ஆவின் பாலாக ஆனந்தமாக பருகி வருகின்றோம்.
பருத்தி கொட்டையிலிருந்து எடுக்கப்படும் (Seed oil) சீட் ஆயில், எடிபில்(Edible oil) ஆயிலாக மாறி நாம் வாங்கும் நல்லெண்ணெய், கடலெண்ணெய்களில் கலந்து… சட்டபூர்வமாக விற்பனை செய்கிறார்கள். இப்படி கலப்பதை நமது உணவு மற்றும் கலப்பட தடை சட்டம் அனுமதிக்கிறது. எந்த ஒரு உணவுப்பொருளிலும் 20% மாற்று எண்ணெய் (FOOD SUBSTITUTES) சேர்த்துக் கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.
பி டி என்னும் விஷப் பருத்தி இலைகளை சாப்பிட்டு ஆந்திராவில் ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்தது அனைவரும் அறிந்ததே! இன்று அதே பிடி விஷ பருத்திப் புண்ணாக்கு, பாலாகவும் எண்ணெயாகவும் நம் இல்லங்களில், நாம் அறியாமலே புகுந்து விட்டன. ஆடைகள் நெய்ய மட்டும் அனுமதிக்கப்பட்ட பருத்தி இன்று பசும் பாலாகவும் எடிபில் ஆயிலாகவும் வந்து… நம் ஆயுளை தீர்மானிக்கின்றன.
அல்லாஹ் அனுமதி அளித்துள்ள நல்ல பொருட்களையே புசியுங்கள்.
(அல் – குர்ஆன்.5:88)
பூமியில் அமைதி உண்டாகி சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்.
(அல் குர்ஆன். 7:56.)