எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்

எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம் :  (அல் குர்ஆன்.15:74 )

 (A meteor may have exploded in the air 3,700 years ago, obliterating communities near the Dead Sea)

நமக்கு முன் சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத்,மற்றும் ஸமூத் கூட்டத்தினர், மத்யன்வாசிகள், மற்றும் தலை கீழாக புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா?” 

(அல் குர்ஆன். 9:70)

முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது. இச்செய்திகள் புனைந்துரைக்கப்பட்டவையல்ல மாறாக, இந்தக் குர்ஆன் தனக்கு முன் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் விவரிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் நம்பிக்கை கொள்ளும் சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் திகழ்கின்றது.

(அல் குர்ஆன். 12:111.)

அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து, வரம்பு மீறிய ஒரு கூட்டத்தனரே ஜோர்டான் நாட்டின் சாக்கடலுக்கு மேற்குப் புறத்தில் வசித்த சதூம் (SODOM) நகரவாசிகள். இவர்களுக்கு நபியாக லூத் (அலை) அவர்கள். அனுப்பப்பட்டார்கள். இங்கு வாழ்ந்த மக்கள் ஒழுக்கக்கேட்டின் உச்சத்தில் இருந்தனர். பிரயாணிகளை வழிமறித்து கொள்ளையடிப்பதும், பெண்களை புறக்கணித்து, இயற்கைக்கு மாறாக ஆணோடு ஆண் உறவு கொள்ளும், ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

லூத் (அலை) அவர்களின் போதனை அவர்களுக்கு எவ்வித பயனும் அளிக்கவில்லை. இறுதியில், “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமுதாயத்திற்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக! என்று பிராத்தித்தார். அல்லாஹ் அவரது துவாவை ஏற்றுக்கொண்டு

பொழுது உதிக்கும் வேளையில் அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. பின் அவர்களுடைய ஊரை  மேல்கீழாக புரட்டி விட்டோம்.சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்  

(அல் குர்ஆன்.15:74.)

இந்த சம்பவத்தை பைபிளின் பழைய ஏற்பாடும் (ஆதியாகமம்-19:24-25) கூறுகிறது. ஒரு சமுதாயம் விண்கல் எரி மழையால் அழிக்கப்பட்டது உண்மையே என்று ஏழு பல்கலைகழகங்கள் மற்றும் ஜோர்டான் அரசு தொல்லியல் துறை இணைந்து நடத்திய அகழ்வாராய்ச்சி ஆய்வு முடிவுகள், கடந்த நவம்பர் 2018  (American School  of Oriental Research meeting) அன்று நடந்த கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. கடந்த 13 வருடங்களாக, ஜோர்டான், டெல் ஹம்மாம் என்னும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பிலிப் சில்வியா தலைமையில் நடத்திய அகழ்வாராய்ச்சி கூறும் செய்தி…

சுமார் 3700 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த மனிதர்கள், விண்கற்கள் வீழ்ச்சி மற்றும் பூகம்பத்தால் அழிக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மண்பானை ஓட்டின் ஒரு பகுதி அதிக வெப்பத்தின் காரணமாக கண்ணாடி போன்று உருகியுள்ளது. இப்படி உருகிய கண்ணாடித் துண்டை விரிவாக ஆய்வு செய்த போது, அதனுள் ஜிர்கான் படிகம் (ZIRCON CRYSTALS) உருவாகி இருந்தது.

பொதுவாக ஜிர்கோன் படிகம் உருவாக குறைந்தபட்ச 4000 C டிகிரி வெப்பம் தேவைப்படும். மேலும் உருகிய மண்பாண்ட ஓட்டில் ஒரு சிறு பகுதி மட்டுமே கண்ணாடியாக மாறியிருந்தது. முழுமையாக மாறும் அளவிற்கு வெப்பம் நீடிக்கவில்லை. விண்ணிலிருந்து வீழ்ந்த எரி கல்லினால் ஏற்பட்ட8000 – 12000 டிகிரி  சென்டிகிரேடு வெப்பம் (A short burst of intense heat) சில வினாடிகளே நீடித்தது. இது சூரியனின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்திற்கு சமமானது. இதன் பாதிப்பு சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழ்ந்த 40,000 – 60,000 மக்களை எரித்துக் கொன்றது.

ஜிர்கோனிய படிகங்களும் 12,000 C வெப்பத்தை உறுதி செய்கின்றன. மேலும் அங்கு ஆறு இடங்களில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகள், வெப்பக் காற்று ( Intense hot air blast) மேலும் அங்கிருந்த உருகிய பாறையானது (MELT ROCK) மூன்று விதமான மண்கள் கலந்து உயர் வெப்பத்தில் உருகி கண்ணாடி போன்று மாறியிருந்தது. அவைகள் அதிர்வலையின் தாக்கத்தை கூறுகின்றன. எரிகல் வீழ்ச்சியினால் ஏற்பட்ட உயர் வெப்பமானது நிலத்தின் மேற்புற ஈரத்தை ஆவியாக்கி விட்டதால். சாக்கடலின் (DEAD  SEA) உப்புத் தன்மை நிலத்தில் ஊடுருவி முழு நிலமும் பயிரிட தகுதியற்றதாகி விட்டது.

எனவே நம் கட்டளை வந்து விட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழிய வைத்தோம். 

(அல் குர்ஆன்.11:82..)

பொதுவாக பூமிக்கு கீழே உள்ள நிலத்தட்டுக்கள் நகர்வதால் (Tectonic plate movements) நிலநடுக்கம் ஏற்படுவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கின்றோம். நிலநடுக்கம் இப்படியும் வரலாம். அல்லது எரிமலை வெடிப்பின் மூலமும் வரலாம். அல்லது வானிலிருந்து அதிக வேகத்தில் வரும் விண் கல்லின் அதிர்ச்சி அலைகள் (COSMIC BLAST  WAVES) பூமியை தாக்குவதால் நிலநடுக்கம் ஏற்படும். அமெரிக்கா மிச்சிகன் நகரில் கடந்த ஜனவரி 18, 2018 அன்று, ரிக்டர் 2.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கின.

https://www.livescience.com/61452-did-meteor-cause-michigan-earthquake.html

உண்மையில், இது பூமிக்குள் நடந்த நிலநடுக்கமல்ல. விண்ணிலிருந்து வந்த ஒரு எரி கல் பூமியை ஒட்டி சென்ற அதிர்ச்சி அலைகளின் காரணத்தாலே நிலம் குலுங்கியது. இது போன்ற நிகழ்வே லூத் (அலை) அவர்களின் கூட்டத்தாருக்கும் ஏற்பட்டது. வானிலிருந்து வந்த விண் கல்லானது, வானில் 3280 அடி உயரத்தில் (1.km) வெடித்து சிதறியது. 10 மெகா டன் அணு குண்டுக்கு சமமான சக்தியை வெளிப்படுத்திய அதிர்ச்சி அலைகளே பூமியை தலைகீழாக புரட்டிப்போட்டது. இதற்கான சான்றுகளும் அங்கு காணப்படுகிறது.

லூத் நபியின் சமுதாயத்தை அல்லாஹ் பல விதங்களில் அழித்துள்ளான்.

ஆகவே பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் (SONIC BOOM) பிடித்துக் கொண்டது.  

(அல் குர்ஆன்.15:73)

நமது கட்டளை வந்த போது, அந்த ஊரைத் தலைகீழாகப் (EARTH QUAKE)புரட்டி விட்டோம்! மேலும் அதன் மீது சுட்ட களிமண் கற்களைப் (METEOR SHOWER) பொழியச் செய்தோம்.   

(அல் குர்ஆன். 11;82 ,15:74.)

நகரை விட்டு வெளியேறும்படி லூத்(அலை) அவர்களுக்கு கட்டளை இட்ட இறைவன் ஒருவரும் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டாம் என்கிறான்.

ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தாருடன் நடந்து  சென்று விடும். அன்றியும் அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து  செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்பட்ட இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அத் தூதுவர்கள் கூறினார்கள்.  

(அல் குர்ஆன். 15:65.)

விண்கற்களை ஆய்வாளர்கள் மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள். ( Iron – Stone – ,Stony-iron,) இவற்றில் பொதுவாக அதிக அளவில் கிடைப்பது Stone  வகையை சேர்ந்த களிமண்  (Carbonaceous chondrites ) விண்கற்களே. இதைத்தான் அல்லாஹ் ‘சுட்ட களிமண் கற்களைக் கொண்டு”  என்று கூறுகிறான். 3700 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை குர் ஆனில் அல்லாஹ் 1440  ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்ததை, இன்றைய அறிவியல் உலகம் ஆய்வு செய்து உண்மைப்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

https://www.sciencenews.org/article/exploding-meteor-may-have-wiped-out-ancient-dead-sea-communities

ஓரினப்புணர்ச்சி என்னும் இழி செயலை முதன்முதலில் செய்த லூத் (அலை) சமுதாயத்தை அன்றே அல்லாஹ் அழித்து விட்டான். ஆனால் இன்றைய நாகரீக? உலகில் 30 க்கும் மேற்பட்ட மேலை நாட்டு அரசுகள் இந்த ஒழுக்கக்கேடான ஓரினத் திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளன. நமது ஆன்மீக இந்திய அரசின் உச்ச நீதிமன்றமும் ஓரின சேர்க்கையை குற்றமில்லை என்று அறிவித்து எய்ட்ஸ் நோய் பரவ பாதை போட்டுள்ளது.

அல்லாஹ்வின் எரிகல் அழிவு என்னும் நெருப்பு மழை எப்போது வரும்…எவருக்கு வரும், என்று சொல்லமுடியாத அளவிற்கு ஓரினச்சேர்க்கை ஒழுக்கக்கேடு உலகெங்கும் பரவியுள்ளன. உலகம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது,

மேலும் கூறுவீராக: “எல்லாப்  புகழும் அல்லாஹ்வுக்கே! அதிவிரைவில் தன்னுடைய சான்றுகளை அவன் உங்களுக்கு  காண்பிப்பான். அப்போது  அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” .மேலும், உம்முடைய இறைவன் நீங்கள் செய்பவற்றை கவனிக்காமல் இல்லை!.  

(அல் குர்ஆன்.27:93.)