டி.வி சீரியல் விபரீதம்: சிறுமி பலி!
டி.வி சீரியல் விபரீதம்: சிறுமி பலி!
கி.ஹாஜா மைதீன் தொலைக்காட்சி சீரியல்கள் மனிதர்களின் மூளையை மழுங்கடித்து வருகிறது. அதில் இடம்பெறும் கற்பனைக் காட்சிகளை உண்மை என நம்புகின்ற மக்களைப் பார்க்கிறோம். பெரியவர்களே தொலைக் காட்சியில் மூழ்கியிருக்கும் போது சிறார்களைச் சொல்லவா வேண்டும்?
சமீபத்தில் சீரியலினால் நடந்த விபரீதத்தினைப் பாருங்கள்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரார்த்தனா என்ற சிறுமி நந்தினி என்ற கன்னடத் தொடரை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். அதில் ஒரு காட்சியில் கதாநாயகி தன்னைச் சுற்றி தீ கொளுத்திக் கொள்வது போன்ற காட்சி இருந்துள்ளது.
இதனைப் பார்த்த சிறுமி பிரார்த்தனா அதைப் போன்று தன்னைச் சுற்றி காகிதங்களைப் போட்டு அதனைக் கொளுத்தி நடுவில் நின்றுள்ளார். இதில் பிரார்த்தனா மீது தீ பரவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்களின் கடமை: குழந்தைகளின் மூளை இது போன்று முடங்கி விடாமல் இருக்க பெற்றோர்களுக்கே முழுப் பொறுப்பு உள்ளது. இதனை ஒவ்வொரு பெற்றோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Source:unarvu(08/12/17)