முஸ்லிம் மன்னர் உருவாக்கிய நகரம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

முஸ்லிம் மன்னர்  உருவாக்கிய நகரம்

அஹ்மது ஷா என்பவரால் உருவாக்கப் பட்ட நகரம்தான் அஹ்மதாபாத். குஜராத்தின் தலை நகரமாக விளங்கும் அஹ்மதாபாத்தில் 28 வகையான பழமை மிகுந்த கட்டடங்களும், கலையயம்சமிக்க நூற்றுக் கணக்கான குடியிருப்புகளும் உள்ளன.

இதனைக் கணக்கில் கொண்டு உலகப் பாரம்பரிய மிக்க புராதன நகரங்களின் பட்டியலில் அஹ்மதாபாத்தையும்  யுனெஸ்கோ நிறுவனம் சேர்த்துள்ளது. பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் பிரான்ஸின் பாரிஸ் நகரம், ஆஸ்திரியாவின் வியன்னா நகரம், எகிப்தின் கெய்ரோ நகரம், பெல்ஜியத்தின் பிரன்ஸில்ஸ் நகரம், இத்தாலியின் ரோம் நகரம், ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் இப்போது அஹ்மதாபாத் நகரம் இணைந்துள்ளது.

இந்தப் பட்டியலில் இணைந்த ஒரே நகரம் அஹ்மதாபாத் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவுக்கு எவ்வளவோ கொடைகளை வழங்கியுள்ளனர். அதில் ஒன்றுதான் அஹ்மதாபாத் நகரம். இதை யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகள்  வெளிப்படுத்திக் கொண்டிருக்க இதற்கு மாறாக இங்குள்ள காவி கட்சியினர் முஸ்லிம்களை தேதசத் துரோகிகளாகவும், முஸ்லிம் மன்னர்களை இந்துக்களின் விரோதி களாகவும் பொய்யாக சித்தரித்து வருகின்றனர்.

முஸ்லிம் மன்னர் அஹ்மது ஷாவால் 600 ஆண்டுகளுக்கு முன்னால் உ ருவாக்கப்பட்ட அஹ்மதாபாத்திற்கும் உரிமை கொண்டாடுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. உண்மை செருப்பை மாட்டுவதற்குள் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

Source: unarvu   (14/07/17 )