மனிதாபிமானத்தில் விஞ்சிய லண்டன் முஸ்லிம்கள்
மனிதாபிமானத்தில் விஞ்சிய லண்டன் முஸ்லிம்கள்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வடக்கு கென்சங்டன் பகுதியில் கிரன்ஃபெல்டவர் என்ற குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்தக் குடியிருப்பில் உள்ள 2-வது தளத்தில் தீ பற்றியதில் தீ ‘மளமள’வெனப் பரவி வளாகத்தையே எரித்து விட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் இறந்து விட்டனர். 74 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப் பட்டனர். அவர்களில் 18 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது.
இங்கு வசித்தவர்களுக்கு போட்டிருந்த துணியைத் தவிர வேறு ஏதுவும் மிஞ்ச வில்லை. இதை அறிந்த லண்டன் வாழ் முஸ்லிம்கள் மசூதிகளைத் திறந்து விட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். தங்களிடமிருந்த உடைகளை இவர்களுக்கு கொடுத்து உடுக்கச் செய்தும், புதிய உடைகளை வாங்கிக் கொடுத்தும், 3 வேளை வயிராற உணவு அளித்தும் உபசரித்தனர்.
மனிதர்கள் மீது இரக்கம் காட்டாதவர் மீது இறைவன் இரக்கம் காட்ட மாட்டான் என்றார்கள் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் போதித்த இந்தக் கொள்கையை பின்பற்றுபவர்தான் முஸ்லிம்.
இந்த இலக்கணத்தின்படி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிமல்லாத மக்களுக்கு லண்டன் வாழ் முஸ்லிம்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கி, உண்மையான முஸ்லிம்களாகத் திகழ்ந்துள்ளார். முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என மேற்கிந்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்து, அது எல்லோரின் உள்ளங்களிலும் பதிந்துள்ள நிலையில் முஸ்லிம்கள் குறித்த உங்களின் அபிப்ராயம் தவறு என தங்கள் செயல் மூலம் லண்டன் வாழ் முஸ்லிம்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
லண்டன் வாழ் முஸ்லிம்கள் மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லா முஸ்லிம்களின் இயற்கை சுபாவமே இதுதான். இப்படி இருக்கச் சொல்லித் தான் இஸ்லாம் போதிக்கிறது. ஒரு முஸ்லிம் தனது சொந்த சம்பாத்தியம் முழுவதையும் தானே வைத்துக் கொள்ள முடியாது. மாறாக அதில் 2.5சதவீதத்தை ஏழை, எளியவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.
இந்த தர்மத்தை மற்ற எல்லோரையும் விட முஸ்லிம்கள் விஞ்சி நிற்க வேண்டும். இப்படி போதிக்கும் இஸ்லாத்தையும், இதன்படி வாழும் முஸ்லிம்களையும் தான் மேற்கிந்திய ஊடகங்கள் தீவிரவாத மார்க்கம் தீவிரவாதி என முத்திரை குத்தி வைத்துள்ளன. முஸ்லிம்கள் குறித்த இந்த பிம்பம் பொய் என லண்டன் வாழ் முஸ்லிம்கள் நிருபித்து விட்டார்கள். இதைப் பார்த்த பிறகாவது மேற்கு ஊடகங்கள் திருந்த வேண்டும். திருந்துமா.?
Source:unarvu (23/6/17)